சற்று முன்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட்!   |    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்   |    எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது IDSFFK விழாவுக்கு தேர்வு!   |    Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya   |    'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |   

சினிமா செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் 'மைக்கேல்'
Updated on : 30 January 2023

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்'  ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 



 



இந்நிகழ்வினில்..



தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது..,



 



"படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்."



 



தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது.,





" சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித்  ஜெயக்கொடி பயணிக்கிறார்.  அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும்.  இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். "



 



நடிகை ரெஜினா கசாண்ட்ரா  பேசியதாவது..,





" எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக  மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். "



 



ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது..,



 



" ரஞ்சித் ஜெயக்கொடி  உடைய முந்தைய படங்களிலிருந்த நேர்த்தியை விட இந்த படத்தில் அதிகம் இருக்கிறது. அவர் ஒவ்வொரு படத்திலும் தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். சந்தீப் அனைவருடனும் ஒரே மாதிரி பழகக் கூடியவர், அவருடன் நான் அடுத்த படம் பண்ணுகிறேன். படக்குழு அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். "



 



இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..,



 



" ரஞ்சித், லோகேஷ்  போன்ற இயக்குநர்களுடன்  பயணிக்கும் போது  எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில்  அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன்  இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது.  இந்த படம்  உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். "



 



நடிகை தீப்சிகா பேசியதாவது..,





" இந்த படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித்  அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் சாம் CS  உடைய இசைக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  அவர் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார்.  படம் சிறப்பாக வந்து  இருக்கிறது. உங்களது ஆதரவு தேவை. "



 



நடிகை திவ்யான்ஷா பேசியதாவது..,





" எங்களது உழைப்பிற்குக் கிடைத்த காதலாக இதை நான் பார்க்கிறேன்.  படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்  அனைவரும், ரஞ்சித் உருவாக்கிய அற்புதமான கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.  சாம் CS சார் அதை மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் படம்  பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும். "



 



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,





" எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர்  தயாரிப்பாளர்கள் தான். அவர்களால் தான் இந்த மைக்கேல்  படம் இப்படி உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும்,  வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார்.  சாம் CS  எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த   படத்தை  மேம்படுத்தியுள்ளது.  விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர்.  இந்த படத்தில்  ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார்.  கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது.  அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்.



 



நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது.,





" இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம்  அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும்  பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி.    மொழி தாண்டி  இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி  வழங்கியுள்ளார்.  கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.  இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.  விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர்,  பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.



 



இப்படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ்.  இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். 



 



ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா