சற்று முன்

'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |    'சீயான் 62' வில் ஒப்பந்தமாகியுள்ள துஷாரா விஜயன்!   |    நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ள 'மயோன்' பாடல்!   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'கேன் (can)' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான 'புஷ்பா: தி ரூல்' டீசர் வெளியாகவுள்ளது!   |    நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...20 வருட கனவு தற்போது நினைவாகியது!   |    குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' ஆல்பம் பாடல்!   |    'தி ஃபேமிலி ஸ்டார்' ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர் - தயாரிப்பாளர் தில் ராஜு   |    அரண்மனை முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை!   |    நானி 33 படத்தின் மூலம் மீண்டும் இணைந்த தசரா கூட்டணி!   |    'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |   

சினிமா செய்திகள்

ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!
Updated on : 27 March 2023

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படத்தை திரையிடும் போது மால்களில் இருக்கும் திரையரங்குகளில் 55 -45 என்றும் மற்ற திரையரங்குகளில் 55-45 அல்லது 60 -40  என்று படத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படும். அதாவது நுழைவுச்சீட்டு விலை ரூ.100 என்று வைத்துக் கொண்டால் அதில் திரையரங்குக்காரர்களுக்கு ரூ.40, தயாரிப்பாளருக்கு ரூ.60 என்பது கணக்கு. ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படம் வரும்போது பெருநிறுவன அரங்குகளில் 55 -45 என்றும் மற்ற அரங்குகளில் 70 -30 என்று ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கும் ‘விடுதலை’ படத்துக்கும் 70 -30 என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர்.  மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரையரங்குகளைப் பொறுத்தவரை கதாநாயகர்களை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு செய்வர். அந்த வகையில் பார்த்தால் ’விடுதலை’ படத்தின் கதைநாயகன் சூரிதான். அப்படித்தான் அனைத்து விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அதனால், சூரி கதைநாயகனாக நடிக்கும் முதல் படத்துக்கே 70 சதவீதம் தயாரிப்பாளருக்குப் பங்கு கொடுக்க திரையரங்குகள் ஒப்புக்கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா