சற்று முன்

ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஜவான் படத்தின் 'ஆராராரி ராரோ' இசை வீடியோ!   |    மீண்டும் போலீஸ் அதிகாரியாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!   |    மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் 'லைக்கா நிறுவனம்'   |    ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, அனிமல் டீஸர் வெளியிடப்பட்டது!   |    தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்ற '800' திரைப்படம்!   |    என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” - நடிகர் விதார்த்   |    'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம்   |    அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படைப்பு !   |    தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளை கூறும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'   |    ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டம்!   |    'சந்திரமுகி 2' க்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்!   |    ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பிரமாண்டமான புதிய திரைப்படம்!   |    திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? - சுப வீரபாண்டியன்   |    வேல்ஸ் சர்வதேச விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஷாட் பூட் த்ரீ' பட நடிகர்கள்!   |    துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!   |    நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் - இயக்குனர் ஜெயமுருகன்   |    'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்த ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை   |    இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வரும் 'ஜவான்'   |    'ஜவான்' படத்திற்காக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!   |    ஸ்ருதிஹாசன் - கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய இசை படைப்பு   |   

சினிமா செய்திகள்

#Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட லுக் வெளியாகியுள்ளது!
Updated on : 01 June 2023

நடிகர் நிகிலின் 20வது படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து, நிகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  #Nikhil20 படத்திற்கு கம்பீரமாக 'சுயம்பு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 'சுயம்பு' என்றால் 'தானாக பிறந்தது‘ அல்லது 'தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது' என அர்த்தம். முதல் பார்வை போஸ்டரில் நிகில் போர்க்களத்தில் ஒரு மூர்க்கமான வீரராக உள்ளார். ஒரு வழக்கமான போர் வீரனைப் போல நீண்ட கூந்தலைக் கொண்டு, ஒரு கையில் ஆயுதம் (ஈட்டி) மற்றும் மற்றொரு கையில் கேடயத்துடனும் உள்ளார். இந்தப் படத்திற்காக அவரது  தோற்றம் குறிப்பிடத்தகுந்ததாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளர்கள் முன்பு வெளியிட்டுள்ள மோஷன் போஸ்டரின்படி, இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை என்று தெரிவித்துள்ளனர். இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவானதையும் கூறுகிறது. மேலும், நிகில் 'தி லெஜண்டரி வாரியர்' என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார். வெளியாகியுள்ள முதல் பார்வை மற்றும் கான்செப்ட் வீடியோ, இந்த புகழ்பெற்ற போர் வீரரின் காவிய படைப்பு மகத்தானதாக வெளிவர இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை படக்குழு உருவாக்கி வருகிறது. நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 'சுயம்பு'. இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா