சற்று முன்
சினிமா செய்திகள்
STR குரலில் பார்வையாளர்களின் இதயங்களை வென்ற “பெரியார் குத்து...” பாடல்!
Updated on : 17 September 2023

பெரியாரின் பிறந்தநாளில் ஆன்மாவைத் தூண்டும் பாடலை வெளியிடும் நோக்கத்துடன், தீபன் பூபதி இயக்கத்தில், இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க, கார்க்கி எழுச்சியூட்டும் இந்த ”பெரியார் குத்து...” பாடல் வரிகளை எழுதினார்.
பாடலின் எழுச்சியூட்டும் வரிகள் பெரியாரின் அபிமானிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என குழு நம்பிக்கை வைத்திருந்தது. தீபன் மேலும் கூறுகையில், "பாடல் வரிகள் நிச்சயம் ரசிகர்களையும் ஈர்க்கும்படியாக இருந்தன. மேலும், இது பெரியாருக்கு எங்கள் தரப்பில் இருந்து சிறந்த அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். பாடல் கேட்டு அன்பும் ஆதரவும் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி" என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "எனது நீண்ட கால நண்பரான எஸ்.டி.ஆர் ஒரு நாள் எதேச்சையாக ஸ்டுடியோவுக்கு வந்தபோது, இந்தப் பாடல் வரிகளுக்கு தனது பாராட்டை வெளிப்படுத்தினார். மேலும், பாடலைத் தானே பாடுவது மட்டுமல்லாமல் வீடியோவிலும் வருகிறேன் என உறுதி அளித்தார். அது பாடலுக்கு மேலும் வலுவூட்டியது" என்றார்.
இந்த பாடல் உள்நாட்டு பார்வையாளர்களின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் தமிழ்ச் சங்கங்களில் கிடத்த பாராட்டுகளும் விருதுகளும் இந்தப் பாடல் உலகளாவிய பார்வையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்திய தாக்கத்துக்கு சான்றாக நிற்கின்றன.
'பெரியார் குத்து' பாடலை இன்றும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு தீபன் நன்றி தெரிவித்துள்ளார். இறுதியாக தீபன் கூறுகையில், "எதிர்காலத்தில் பெரியாருக்கு அர்ப்பணிக்க இன்னும் ஒரு பாடலை உருவாக்க நான் திட்டமிடுவேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி" என்று கூறினார்.
சமீபத்திய செய்திகள்
ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஜவான் படத்தின் 'ஆராராரி ராரோ' இசை வீடியோ!
ஜவான் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'ஆராராரி ராரோ' இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. தீப்தி சுரேஷின் அழகான குரலில் இந்த வீடியோ, தீபிகா படுகோன் மற்றும் இளம் ஆசாத் ஆகியோரின் அற்புதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.
'ஆராராரி ராரோ' வெறும் பாடல் அல்ல; இது ஒரு தாய் மற்றும் அவரது மகனுக்கு இடையே இருக்கும் ஒப்பற்ற பாசத்தின் கதை, நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு. இந்த மியூசிக் வீடியோ இந்த புனிதமான உறவினை அதனுடன் வரும் தியாகங்கள் மற்றும் உணர்ச்சிகளை, ஆழமாக காட்சிப்படுத்தியுள்ளது. தீபிகா படுகோன், அர்ப்பணிப்புள்ள தாயின் பாத்திரத்தை தன் அசாத்திய நடிப்பில், திரையில் உயிர்ப்பித்துள்ளார். மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோன் பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறார் அவரது தோற்றம், அவரின் பாதிப்பு அதைத்தாண்டிய அவரது மன வலிமை, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் நம்பகத்தன்மையை சேர்க்கிறது. இந்தப்பாடல் உலகம் முழுதும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறது.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
மீண்டும் போலீஸ் அதிகாரியாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், பவர்ஸ்டாரின் பவரான நடிப்புடன் தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் படத்தை பற்றிய புதிய அப்டேட்களை தயாரிப்பாளர்கள் வெளியிடவுள்ளனர். பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை கண்டு படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
'உஸ்தா பகத்சிங்' ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான 'கப்பர் சிங்' திரைப்படம்- பரபரப்பான வெற்றியைப் பெற்றதுடன் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்து பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த 'உஸ்தாத் பகத்சிங்' படத்தை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாக்கி வருகின்றனர்.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஸ்த்தோஷ் ராணா, 'கே ஜி எஃப்' புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ் மற்றும் 'டெம்பர்' வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கையாள, அதிரடி சண்டை காட்சிகளை ராம் - லக்ஷ்மன் அமைத்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் 'லைக்கா நிறுவனம்'
மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து 'எம்புரான்' எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'லூசிபர்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
இந்நிலையில் இந்திய திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்- மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ' எம்புரான் ' எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. 'எம்புரான்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் - லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் - மோகன் லால் - பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் 'எம்புரான்' திரைப்படத்திற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, அனிமல் டீஸர் வெளியிடப்பட்டது!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஒரு சுருக்கமான பார்வையுடன், படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. நட்சத்திர நாயகன் ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, டீஸர் வெளியிடப்பட்டிருப்பது, கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘அனிமல்’ என்பது ஒரு புதுமையான அதிரடியான திரை அனுபவம், இது சுவாரஸ்யமும் ஆர்வமும் இணைந்து நீங்கள் நினைத்து பார்த்திராத பயணத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும். இந்த திரில்லர் டிராமா திரைப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
உங்கள் காலெண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 'அனிமல்' திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு புதுவிதமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.
‘அனிமல்’ படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்ற '800' திரைப்படம்!
அனைத்து வயதினரையும் திரையரங்குகளுக்கு வர வைப்பது ஒரு கலை. இதுபோன்ற திரைப்படங்கள் மதிப்புமிக்க பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியான ஒரு திரைப்படமாக '800' உருவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸின் ‘800' திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முத்தையா முரளிதரன் கடல்களையும் நாட்டின் எல்லைகளையும் தாண்டி கிரிக்கெட் பிரியர்களின் மனதை வென்றவர். 'மன உறுதியும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒருவரின் கனவுகளை எதுவும் சிதைக்க முடியாது' என்பதை நிரூபித்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அவர் உள்ளார். ‘800’ திரைப்படம் அந்த அனுபவத்தை மீண்டும் திரையில் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.
எம்.எஸ்.ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஷெஹான் கருணாதிலகாவுடன் இணைந்து ஸ்ரீபதி திரைக்கதை எழுதியுள்ளார். முரளிதரனாக மதுர் மிட்டல் நடிக்கிறார். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைத்திருக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விதேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பூர்த்தி பிரவின்-விபின் பிஆர் இருவரும் ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் & விவேக் ரங்காச்சாரி தயாரித்து, ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் ‘800’ திரைப்படம் அக்டோபர் 6, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” - நடிகர் விதார்த்
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா என பக்கபலமான தொழில்நுட்ப கூட்டணியும் இணைந்து கைகோர்த்துள்ளனர்.
வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’ தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி பிரச்சனை நரக வேதனையாக இருக்கிறது. அந்த சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம் தான் இந்த ‘இறுகப்பற்று’. ஆண், பெண் இருவருக்குமான ஈகோ தான் இதற்கு காரணம். நான் படம் பார்த்து விட்டேன். நிறைய இடங்களில் கண்கலங்கினேன். படம் பார்க்கும்போது ஒரு பயமும் வந்தது. காரணம் இப்போதுதான் என்னுடைய திருமண வாழ்க்கையே ஆரம்பித்திருக்கிறது. இந்த படம் வெளியாகும்போது ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” என்றார்.
படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது, “ஸ்கிரிப்ட்டில் நன்றாக இருக்கும் விஷயங்களை சினிமாவில் சொல்லும்போது சில நேரங்களில் அது பார்வையாளர்களிடம் சரியாக ரீசாகாமல் போய்விடும். ஆனால் இயக்குநர் யுவராஜ் அதை தெளிவாக கையாண்டு திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தில் நடித்தவர்களின் காட்சிகளை வெட்டுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கணவன், மனைவியாக படம் பார்க்க வருபவர்கள் படம் முடிந்து போகும்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்து விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள்: என்றார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, “இயக்குநர் யுவராஜுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்து, அவரிடம் கதை கேட்டதுமே இவருக்கும் நமக்கும் செட்டே ஆகாது என்கிற எண்ணம் தான் தோன்றியது. ஆனால் இரண்டாவது சந்திப்பில் இருந்து அது மாறியது. அவர் ஒரு குழந்தை மாதிரி. விக்ரம் பிரபு சின்னச்சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்களால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். விதார்த் அபர்ணதி ஜோடியுடன் எல்லாரும் தங்களை எளிதாக தொடர்புபடுத்தி பார்பார்கள். குறிப்பாக அபர்ணதி இந்த படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார் படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்து விடும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “ஒளிப்பதிவாளர் கோகுல் இவ்வளவு பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. அந்த அளவுக்கு படம் அவரை ஈர்த்திருக்கிறது. எனக்கும் இப்போதுதான் திருமணம் நடந்தது. எனக்கு இந்த படம் ஒரு நல்ல டீச்சர் மாதிரி என்று சொல்வேன்.. அதேசமயம் ஒரு பிரச்சாரமாக இது இருக்காது. ஆனால் படம் முடிந்து செல்லும்போது எல்லோரும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்வீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.
நடிகை அபர்ணதி பேசும்போது, “தேன் படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். இயக்குநர் யுவராஜ் முதலில் ஸ்கிரிப்ட் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என கூறினேன். அடுத்த நிமிடமே இந்த படத்திற்காக எனது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று கூறினார். இது என்ன சாதாரணம் தானே என நினைத்து உடல் எடையை கூட்ட ஆரம்பித்தாலும் மூன்று மாதம் ஆகியும் கூட என்னால் அவர் சொன்ன அளவிற்கு எடையை கூட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு நான் செட்டாக மாட்டேன் என்றே சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் தான் ஒரு சரியான டயட்டீசியனை விதார்த் எனக்கு கைகாட்டினார். அவரது ஆலோசனையை கடைபிடித்து எடையை கூட்டினேன். காலையில் துவங்கி எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கே அதிக பட்ஜெட் ஆனது. ஒரு கட்டத்தில் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ? எடையை கூட்டி குறைப்பதற்கு.. ஆனாலும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்து பண்ணினேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு விதார்த்தம் தான் காரணம். பார்க்க பர்கர் மாதிரி இருக்கிறேனே, ஆனால் ஸ்கிரீனில் காட்டமாட்டேன் என்கிறார்களே என நினைத்து ஆர்வமுடன் ஸ்பாட்டுக்கு போனால் ஒளிப்பதிவாளர் கோகுல் வேறு மாதிரி என்னை காட்டிவிடுவார். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை. நிச்சயமாக இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த படம் துவங்கியதிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளியே வர ஒன்றை வருடம் ஆனது. இடையில் விளம்பர படம், ஆல்பம் என தேடி வந்த சில வாய்ப்புகளையும் இதனால் மிஸ் செய்தேன்” என்று கூறினார்.
நடிகர் விதார்த் பேசும்போது, “இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பும்போதே, ‘கரெக்டா பேசு’ என என் மனைவி சொல்லித்தான் அனுப்பி வைத்தார். என் வீட்டு சமையலறையில் பெரும்பாலும் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். என் பாட்டும் அங்கே ஒலிக்காதா என்கிற ஒரு ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது இந்த படத்தின் மூலம் அதை நிறைவேறியுள்ளது. நானும் விக்ரம் பிரபுவும் ஒரே இடத்தில் இருந்து அறிமுகமானவர்கள் தான். இந்த படத்தில் இப்போது இணைந்து நடித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. அபர்ணதிக்கு பெரிய உதவி எல்லாம் நான் செய்யவில்லை. கைகாட்டும் வேலை மட்டும்தான் என்னுடையது. மற்றபடி உழைப்பு அவருடையது தான். எனது திருமண பத்திரிகையை எல்லோருக்கும் கொடுத்தபோது, பலரும் திருமண வாழ்க்கை குறித்து அறிவுரை சொன்னது பயமாக இருந்தது. ஆனால் நான் பயந்தது போல தான் நடந்தது. ஆனால் யாரிடம் போய் கேட்டாலும் அவர்களும் அதையே தான் சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் யுவராஜ் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். நான் எவ்வளவோ படங்களை என்னை அறியாமலேயே கூட சில காரணங்களால் மிஸ் பண்ணியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நினைத்தேன். இப்படி ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, “என்னை மனதில் வைத்து தான் பேசினாயா” என என் மனைவி கேட்டார். மனைவி சொல்வதை புரிந்து கொள்வதை விட, அது தப்பு என சொல்வதில் தான் குறியாக இருந்தேன். இப்போது மாறிவிட்டேன். மொத்தத்தில் என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” என்று கூறினார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது, “தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது, இது என் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எனக்கு தெரிந்திருக்கவில்லை. இயக்குநர் யுவராஜ் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த படத்தின் கதையை விவரித்தார். இதில் நடித்துள்ள எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த படம் எல்லாருக்குமே ஸ்பெஷல். எஸ்ஆர் பிரபு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு என்று என்னை அழைத்தபோது, அவரே இப்படி சொன்னால் நிச்சயமாக அதில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 15 நிமிடம் கதை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க எல்லா நடிகர்களும் விரும்புவார்கள். முழு கதையையும் நான் படிக்கவில்லை.. அதேபோல இன்னும் படமும் பார்க்கவில்லை.. ஜஸ்டின் பிரபாகரன் பாடல் உருவாக்கும் காட்சியை நேரில் பார்த்து பிரமித்தேன். ஒளிப்பதிவாளர் கோகுல் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் பேசாமலேயே அனைவரிடமும் வேலை வாங்கியதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அக்டோபர் எனக்கு ரொம்ப பிடித்த மாதம். காரணம் என் தாத்தாவின் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) பிறந்தநாள் அக்டோபர் 1ஆம் தேதி தான் வருகிறது. என் மனைவியின் பிறந்த நாளும் அக்டோபர் 6ஆம் தேதி தான். இந்த படமும் அக்டோபர் 6ல் தான் வெளியாகிறது. அதனால் உனக்காகத்தான் இந்த படமே என்று சொல்லி அவரை குளிர்வித்து விட்டேன். என்னை ஒரு நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு எனது நன்றி” என்று கூறினார்.
இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது. எட்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய முந்தைய படத்தின் பத்திரிகையாளர் காட்சி இதே இடத்தில் நடந்தபோது இங்கிருந்து கிளம்பி போனவன் இப்போதுதான் மீண்டும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்கு முன்பு காமெடி படங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்து நான் அந்த படங்களை இயக்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை படத்தின் ஹீரோவுக்காக பயன்படுத்திக் கொண்டேன். இன்று கூட வடிவேலுவிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.
என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். சினிமாவை விட்டு விலகி வெகு தூரம் போனாலும் ஒரு நல்ல படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் என் நண்பர் கமல்நாத் மூலமாக தயாரிப்பாளருடன் சந்திப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கதை சொல்லப்போய் கசப்பான அனுபவம் நிறைய ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே எனது முந்தைய தோல்விகளை பார்க்காமல், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டு தொடர்ந்து என்னை ஊக்கம் கொடுத்து இந்த படத்தின் கதையை உருவாக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் உங்களிடம் ஒரு நெருப்பு இருக்கிறது என்று அவர்கள் சொன்னபோது, நானே சாம்பலாகி விட்டேன் என்னிடம் என்ன நெருப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சின்ன கங்கு ஒன்றை என்னுள் பார்த்தவர்கள் அதை பெரிய நெருப்பாக மாற்றினார்கள். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை நான் உங்களுக்கு காட்டுகிறேன். இதற்கு பிறகு நான் அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். யுவராஜ் மென்மையாக பேசக்கூடியவர். ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லலாம். மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம். யாருடைய மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும். அதை இறுகப்பற்று படத்தில் அழகாக செய்து இருக்கிறார் இயக்குநர் யுவராஜ். இந்த படம் பற்றி பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாத நிலையில் என்னை பார்க்கும் திரை உலகை சேர்ந்த பலரும் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோமே என்று பாராட்டினார்கள். அப்புறம் தான் அதன் பின்னணியில் எடிட்டர் மணிகண்டன் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் தான் நான் உரிமையாக கேட்க முடியும். படத்தில் ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் அவருக்கெனன அளவெடுத்து தைத்தது போல கச்சிதமாக இருந்தது. என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி இந்த படத்தில் நடிக்க நான் தயார் என விதார்த் ரொம்பவே ஆர்வம் காட்டினார். அபர்ணதி படத்திற்காக எடையை கூட்டி குறைக்க என ரொம்பவே மெனக்கெட்டார். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்து இருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். என் மனைவிக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டபோது ஆம் என்றேன். அப்ப ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அப்போதே இந்த படத்தின் மீது நம்பிக்கை வந்து விட்டது. நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.
கடந்த சில நாட்களாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையும் ஒரு சிறு பட்ஜெட் படமாகத்தான் பார்க்கிறேன். சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே எந்த ஓடிடிடியில் வெளியாகிறது என்று தான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை உருவாகி இருக்கிறது. ஆனால் சின்ன படங்கள் மூலமாகத்தான் தங்களது எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என பல கலைஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். சின்ன படங்களும் சினிமாவை தாங்கி தான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான்.. ஆனால் அவற்றுக்கென ஒரு வியாபாரம் அப்போதிருந்தே இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறுபடங்கள் தான் சினிமாவில் முதுகெலும்பு. அதுக்கு எதிராக சொல்லப்படும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சமீபத்தில் விஷால் சொன்னது ஒரு எச்சரிக்கை உணர்வால் சொல்லப்பட்டது தான்.
இந்த படத்திற்கு வழக்கமான ஒரு டிரைலர் போல இல்லாமல் புரமோஷனுக்காக கேப் என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டோம். அது பெரிய அளவில் ரீச்சாகி இருக்கிறது. இரண்டு பேர் பகிர்ந்ததிலேயே 2 கோடி பேர் அதை பார்த்து இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது” என்றார்.
'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம்
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ். 100' படத்திற்குப் பிறகு, இயக்குநர் அஜய் பூபதி 'செவ்வாய்கிழமை' என்ற ரஸ்டிக் திரில்லர் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் அஜய் பூபதி, 'செவ்வாய்கிழமை' படம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, "திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுமையாக இருக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற எளிய கேள்விகளுக்கு கூட எளிதில் பதில்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத்தின் கதாபாத்திரம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் வித்தியாசமான ஆச்சரியத்தை அனுபவிப்பார்கள். படத்தை நவம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், "ஆர்எக்ஸ் 100' படத்தின் மூலம் அஜய் பூபதி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கினார். இப்போது இவரது 'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம் இது. இந்தியத் திரையில் இதுவரை பார்த்திராத ஒரு படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி பார்வையாளர்களும் இதனை உணர்வார்கள். படத்தை 99 நாட்கள் படமாக்கினோம், அதில் 51 நாட்கள் இரவு நேர படப்பிடிப்புகள். இது உயர்தர தொழில்நுட்பம் கொண்ட படம். ‘காந்தாரா' படத்தின் இசையமைப்பாளராக பிரபலமான அஜனீஷ் பி லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 'விக்ரம் வேதா', 'காந்தாரா', 'விக்ராந்த் ரோனா', 'சலார்' போன்ற படங்களில் பணியாற்றியவரும் 'ரங்கஸ்தலம்' படத்திற்காக தேசிய விருதை வென்றவருமான எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்துள்ளார். மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறோம்" என்றனர். மேலும், படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பான் இந்திய படத்தின் இயக்குநரான அஜய் பூபதி இதன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் உள்ளார்.
அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படைப்பு !
மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார்.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். சண்டைக்காட்சிகளை சில்வா வடிவமைக்கிறார்.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கைகளில் சிலைகளை வைத்துக்கொண்டு முழுதும் சேறு படிந்த உடம்புடன் காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
வரும் 2024 பொங்கல் பண்டிகையில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளை கூறும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'
நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இணைய தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்..என புதிய படைப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்குவதற்கு காரணம்.. பல புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தான். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இதற்கு முன் 'சூல்' என்றதொரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வென்றது. இது தொடர்பாக அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் கதையை விவரித்தார். இந்த கதையை கேட்டவுடன் தயாரிக்க ஒப்புக்கொண்டோம். ஏனெனில் இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் தர்ஷன் குமார் பேசுகையில், '' தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பதே கடினம். இந்நிலையில் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' திரைப்படம் வெளியாகிறது. இதற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீலிமா இசைக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு பாடல் அமைப்பதும், பின்னணி இசை அமைப்பதும் கடும் சவாலானதாக இருந்தது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல சர்வதேச கலை இசை கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறோம். படத்தின் பாடல்களும், பின்னணியிசையும் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம் ''என்றார்.
இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் 'சூல்' எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன். இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.'' என்றார்.
நடிகர் அர்ஷத் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே எனும் இந்த திரைப்படத்தில் இர்ஃபான் எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படைப்பு காகிதத்திலிருந்து டிஜிட்டல் படைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு ஷார்ட் ஃபிளிக்ஸ் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். கலைஞர்களாகிய நாங்கள் இந்த கதை மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட... ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் இந்த கதை மீது அதீத நம்பிக்கையை வைத்து தயாரித்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்த இசை பிக்சர்ஸ் நீலிமா இசை மற்றும் இசை அவர்களிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய கனவு நனவான தருணம். இயக்குநர் ஜெயராஜ் பழனியின் இயக்கத்தில் உருவான 'சூல்' என்ற குறும்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்திருந்தார். தற்போது இந்தப் படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். வாய்ப்பிற்கும் நேரத்திற்கும் நன்றி.'' என்றார்.
நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில், '' வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல் ஜி பி டி எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்றார்.
நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குநர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். '' என்றார்.
தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில், '' இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. 'அரண்மனைக்கிளி' எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்... எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ...! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது. ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது 'பாணி பூரி' தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' தொடங்கியது.
இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, 'அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ' என்றார்.
அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர். இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
ஜவானின் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டம்!
நெஞ்சை பதறவைக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது ஜவானின் "தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்". இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியை படமாக்க என்ன தேவை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி, தைரியமாக இருங்கள், ஏனென்றால் 'ஜவான்' இப்போது உங்களுக்கு அதை காண்பிக்கப்போகிறது!
இந்த காட்சிக்கு மூளையாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஹாலிவுட் ஆக்ஷன் மேஸ்ட்ரோ ஸ்பைரோ ரசாடோஸ் தான். ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான "தி ஃபாஸ்ட் அண்ட் த ஃபியூரியஸ்," "கேப்டன் அமெரிக்கா," "டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்ஜா டர்டில்ஸ்" போன்றவற்றிலும், இப்போது பிளாக்பஸ்டர் “ஜவான்” படத்திலும் கூட அவருடைய வேலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்ட மேக்கிங் காட்சியான பிரத்தியேக வீடியோவில், ஒரு மேஸ்ட்ரோவின் துல்லியத்துடன் செயலை ஒருங்கிணைக்கும் பணியில் ஸ்பைரோ ரசாடோஸ் தலைமை வகிக்கிறார். மனதைக் கவரும் அதிரடி ஆக்ஷன் காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்குவதற்கு, ஒரு காட்சியை வடிவமைக்கும் உன்னதமான திட்டமிடலும், அபாரமான அர்ப்பணிப்பும் தேவை என்பதற்கு ஜவானின் இந்த காட்சி தான் சாட்சி.
'ஜவான்' சாதாரண திரைப்படமல்ல. இது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு படமாகும். அனைவரின் சிறப்பான நடிப்பும் மற்றும் துடிப்புடன் கூடிய அதிரடியை வழங்கியதில் குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் ஒரு காரணம். 'ஜவான்' தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கி பல சாதனைகளை முறியடித்து வருகிறது.
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கிய படம் தான் “ஜவான்”. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார், கௌரி கான் தயாரித்துள்ளார், மேலும் கௌரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா