சற்று முன்

சைஜு ஸ்ரீதரனின் 'ஃபுட்டேஜ்' டிரெய்லர் வெளியாகியுள்ளது !   |    'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது   |    கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது! - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

வேல்ஸ் சர்வதேச விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஷாட் பூட் த்ரீ' பட நடிகர்கள்!
Updated on : 25 September 2023

இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள மூன்றாவது வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் “ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்ததற்காக பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகியோர்  சிறந்த துணை நடிகருக்கான பிரிவுக்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகிய  மூன்று பேரின் பங்களிப்பு  இத்திரைப்படத்திற்கு பெருமை சேர்த்தது மட்டும் இல்லாமல் வேல்ஸ் குழந்தைகள் திரைப்பட விழாவின் நடுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்  சிறந்த துணை நடிகருக்கானப் பிரிவில் தேர்வாகியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது. மூன்று பேரும் அவர்களது கதாப்பாத்திரத்தை நன்றாகப் புரிந்துக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். மூவரும் இந்த பரிந்துரைக்கு முழுத் தகுதியானவர்கள்  என்று “ஷாட் பூட் த்ரீ” திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ள திரு. அருணாச்சலம் வைத்யநாதன் கூறியுள்ளார்.  

 “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம் செல்லப் பிராணிகளுக்கும், நமக்கும் இடையே இருக்கும் பிணைப்பைக் கொண்டாடுவதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களின் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.  அக்டோபர் 06 திரையரங்குகளில்  “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம் வெளியாகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குடும்பமாகப் பாக்ககூடிய  சிறந்த அனுபவத்தை தரும் பொழுதுபோக்குத் திரைப்படமாக வந்துள்ளது.   

 இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ளார் அருணாச்சலம் வைத்யநாதன். ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன் இணைந்துத் திரைக்கதை எழுதியுள்ளனர். சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி, பூவையார், பிரனிதி, கைலாஷ் ஹீத் மற்றும் வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிபதிவு செய்துள்ளார். வீணை செல்வன் ராஜேஷ் வைத்திய இசையமைத்துள்ளார்.  பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  முகில் சந்திரன் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். வெங்கடேஷ் சடகோபன் நிர்வாகத்தயாரிப்பு செய்துள்ளார். அருண்ராம் கலைச்செல்வன் துணைத்தயாரிப்பு செய்துள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா