சற்று முன்
சினிமா செய்திகள்
மீண்டும் போலீஸ் அதிகாரியாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
Updated on : 01 October 2023

'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், பவர்ஸ்டாரின் பவரான நடிப்புடன் தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் படத்தை பற்றிய புதிய அப்டேட்களை தயாரிப்பாளர்கள் வெளியிடவுள்ளனர். பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை கண்டு படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
'உஸ்தா பகத்சிங்' ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான 'கப்பர் சிங்' திரைப்படம்- பரபரப்பான வெற்றியைப் பெற்றதுடன் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்து பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த 'உஸ்தாத் பகத்சிங்' படத்தை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாக்கி வருகின்றனர்.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஸ்த்தோஷ் ராணா, 'கே ஜி எஃப்' புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ் மற்றும் 'டெம்பர்' வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கையாள, அதிரடி சண்டை காட்சிகளை ராம் - லக்ஷ்மன் அமைத்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
சமீபத்திய செய்திகள்
இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது..
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா கூறியதாவது..
சந்தீப் மிக இண்டென்ஸான பெர்ஸன் என்பதால் அவருக்கு இண்டென்ஸான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது..
இது என்னோட முதல் இந்திப்படம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. பூஷன் சார் அவருக்கு நன்றி. ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலைப்பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இயக்குநருடன் வேலைப் பார்க்கும் ஆசை வந்தது. தள்ளுமாலா மலையாளப் படம் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் வைத்து டிரெயினிங் எடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டு வந்தார்கள் ரன்பீர் அவர்களுக்கு நன்றி. முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிக வித்தியாசமானதாக இருக்கும். இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் மிகவும் உதவியாக இருந்தார் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப்படத்தை மிக வித்தியாசமானதாக எடுத்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் கூறியதாவது..
முதன் முதலில் கதை கேட்கும்போது எனக்கு நிறையச் சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்து மிகவும் உணர்வுப்பூர்வமான ஆக்சன் இருந்தது. படத்தில் வரும் மிஷுன்கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினோம். டிரெய்லர் பார்த்து சிஜியா என நண்பர்களே கேட்டார்கள், முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்த கேள்வி சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும். கண்டிப்பாக ரசிப்பீர்கள் நன்றி.
திரைப்பட விநியோகஸ்தர் திரு முகேஷ் மேத்தா கூறியதாவது..
அர்ஜூன் ரெட்டி படம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப்படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம். அர்ஜூன் ரெட்டி இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. இந்தப்படத்தைக் கண்டிப்பாக இங்குள்ள ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படம் தான். எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி.
நடிகர் பாபி தியோல் பேசியதாவது..,
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும். அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டைபோட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது..
மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.
பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான 'அனிமல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந்ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பே இந்த உற்சாகத்திற்கு மிகப்பெரும் ஆதாரம். பூஷன் குமார் தயாரிப்பில் உருவான 'அனிமல்' எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.
மிகச் சில இந்திய திரைப்படங்களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். 'அனிமல்' திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே இந்த டிக்கெட் முன்பதிவு நிரூபிக்கிறது. பூஷன் குமார் மற்றும் கிரிஷன்குமாரின் டி சீரீஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து 'அனிமல்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கிரைம் டிராமா ஜானரிலான இந்த திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும் என உறுதியளிக்கிறது.
விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், "மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார். இந்தக் கதை உருவான இடத்துல ஒரு வருடம் பயணித்து, ஒவ்வொரு சீசனும் எப்படி இருக்கும் எனச் சொன்னார். அழகிய கிராமம் எனச் சொல்வது சுலபம். ஆனா அதைக் காட்சிப்படுத்துவது சவாலா இருக்கும். லோக்கேஷனைப் பார்த்துடலாம் எனக் கேட்டேன். அந்தக் கிராமத்தில் மொத்தம் 40 வீடுதான் இருந்தது. அந்த ஊரில் இறங்கியதும் சிக்னல் கட்டாகிடுச்சு. அந்த ஊர் முழுவதும் பூந்தோட்டமாக இருந்தது. அந்த ஊர்ல பூக்களைப் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசுமையான லோக்கேஷனாகப் பார்த்து வச்சுட்டு வந்தோம். ஆனா படம் தள்ளிப் போய் மே மாசத்து வெயிலில் ஷூட்டிங் போகும்படி இருந்தது. ‘வேலூரில் மே மாசம் ஷூட்டிங்கா?’ என பயமுறுத்தினாங்க. எல்லோரும் பயமுறுத்தின மாதிரி மலை எங்களை பயமுறுத்தலை. ஆனா மலையில் இருந்து இறங்கிய ரெண்டு நாளும் வெயில் நல்லா காட்டிடுச்சு. ஒரு பாடல் படப்பிடிப்புக்காகப் பார்த்த இடத்தில் வனத்துறையின் அனுமதி இல்லாததால், வேற லோக்கேஷன் பார்த்தோம். அணைக்கட்டு முருகர் கோயில் பக்கத்தில் இருக்கும் மலையில் ஷூட்டிங் போனோம். அதனால் வேலூரை ஸ்விட்சர்லாந்து மாதிரி காட்ட முடிஞ்சது.”
யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா பேசியதாவது, "விதார்த் சார் என் காட்ஃபாதர். இதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இளவரசு சாரும், ஒருநாள் ஷூட்டிங் முடித்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டே பேசினோம். அவர் பேசினாரு, பேசினாரு, அவ்ளோ ஞானத்தை எங்க ஒளிச்சு வச்சார் எனத் தோணுமளவுக்குப் பேசினார். யோகிபாபு சாரு, நார்மலா நாம எல்லாரும் ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி தான் இருப்பார். சிரிச்சுட்டே, சிரிக்க வச்சுட்டே இருப்பார்.”
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது, " சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு நிறைய கதை சொன்னாங்க. அருள்செழியன் சொன்ன கதை ரொம்பச் சுவாரசியமாக இருந்தது. எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய படம். எனக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.”
நடிகர் இளவரசு பேசியதாவது, "இளம் பத்திரிகையாளர்களுக்கு சினிமா கனவு இருந்தா சீக்கிரம் சினிமாக்கு வந்துடுங்க. காத்திருக்காதீங்க. இப்பவே வந்து சினிமாவுல முட்டுங்க, மோதுங்க. பத்திரிகை துறை உங்க நேரத்தையும் உழைப்பையும் உறிந்துவிடும். நல்லவேளையா அருள்செழியன் இப்பயாவது வந்துட்டார். படம் கிடைச்சிடுச்சு, செல்லப்பிள்ளை யோகிபாபு, ஃபெர்பார்ம் பண்ற ஹீரோ விதார்த், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ள வந்துட்டாங்க. ஆனா முதல் நாள் ஷூட்டிங்கில், அறுபது சீனில் எதை முதல் ஷாட்டாக வைப்பீங்க? அகிரா குரோசாவோவாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை வரும். அதைச் சமாளிக்க, அசோசியேட் இயக்குநர், கேமராமேன் என இருவரின் தயவு அவசியம் தேவை. அப்படியொரு டீம் அருள் செழிலனுக்கு அமைஞ்சது. அதைத் தாண்டி, இந்தப் படத்துல என்ன சிறப்பு? மலையாளப்படத்துல தான் நூல் பிடித்தாற்போல் சுவார்சியம் குறையாமல் டக்கு டக்குன்னு திரைக்கதை அமைச்சுட்டே போவாங்க. சினிமாவுல, கதையை விட திரைக்கதை தான் ரொம்ப முக்கியம். அது சில ஸ்க்ரிப்ட்க்கு அமையும். இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. அவர் கதையில், ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்.
பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க. கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ் ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.
விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும். ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும். பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை. அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.”
நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது, “எங்க படத்தோட தலைப்பு மட்டும் வித்தியாசமானது இல்லை. எங்க டீமே வித்தியாசமானதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கு. ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காண்பிச்சிருக்கார். படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது. அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க.” என்றார்.
நடிகர் விதார்த் பேசியதாவது, "இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணிதாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணிதாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், 'என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?' என 'ஃப்ரீஸர் பாக்ஸ்' கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்த போது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, 'நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதை தான். அவ்வளவு அழகான கதை. எப்படி 'ஒரு கிடாரியின் கருணை மனு' படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் T. அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறனும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரனும்" என்றார்.
இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது, “என்னைப் பெத்தெடுத்த எங்கம்மாவுக்கு நன்றி. கோ.மு.-ல ஆரம்பிச்சு கோ.பி.-ல முடியுது. கொரோனாக்கு முன்னாடி தொடங்கி, கொரோனாக்குப் பின்னாடி வெளியாகப் போகுது. படம் தொடங்கி 5 வருஷமாகுது. கலச்சாரத் தூதுவனா, மக்களை சந்தோஷப்படுத்துற பணியை மண்ணுக்குப் போறவரை செய்வேன். நான் கரகாட்டக் கலைஞன் என்பதால் நடனமும் ஆடுவேன். படத்துல, பாடல்களுக்கு நானே ஆடுறேன் எனக் கேட்டுப் பார்த்தேன். இயக்குநர் ஒத்துக்கலை. அவரது அடுத்த படத்துல எனக்கு முக்கியமானதொரு கதாபாத்திரம் தருவாருன்னு நம்புறேன்.” என்றார்.
இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது, “ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணேன். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை. மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டேன். அப்போ அவர் எனது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தேன். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார். விதார்த், மிகச் சிறந்த மனிதராக இருக்கிறார். யோகிபாபுவின் தேதி கிடைக்காததால், அவரது போர்ஷனை முதலில் முடிச்சோம். விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.
இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.
வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, 'ஏ! சிரிப்பழகி' பாட்டை, 'எனக்கு வேணும்'னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”
குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.
இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்தவகையில் இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் மாடர்ன் லவ் சென்னை என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ள வசுந்தரா மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். அது மட்டுமல்ல, இதுவரை செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த வசுந்தரா, இனி படங்களை தேர்வு செய்வதில் தானே வகுத்துக் கொண்டுள்ள விதிகளை கொஞ்சம் தளர்த்தி புதிய பாதையில் பயணிக்க போகிறேன் என்கிறார்.
“நான் எதிர்பார்ப்பது சவாலான கதாபாத்திரங்களைத்தான். அதில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றால் வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது முதலில் நமக்கே போர் அடிக்காது. நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பும் இருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் அப்படி நடிப்பவர்களை நிஜத்திலும் வில்லியாகவே பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.. மக்களும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடிப்பவர். அவருடைய ரசிகை நான்.. ஒரு பாவமான, கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்கலாம்.
அதனால் இனி கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். அந்தவகையில் தற்போது ஒரு மல்டி ஸ்டாரர் கதையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்த படமே பெண்களை மையப்படுத்தி ஒரு மாடர்ன் க்ரைம் டிராமாவாகத்தான் உருவாகி வருகிறது. படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கின்றன. அதில் நானும் ஒரு திருப்பமாக இருப்பேன். பப்கோவா என்கிற வெப்சீரிஸை இயக்கிய லட்சுமி நாராயணன் ராஜு தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இது தவிர ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். அதை பற்றிய தகவல் விரைவில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்.
தமிழ் தான் எப்போதுமே என் சொந்த வீடு.. என்றாலும் ஒரு நடிகையாக முழுமை பெற மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். குறிப்பாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. மலையாள படங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே என்கிற ஏக்கம் இயல்பாகவே எனக்குள் எழும். தெலுங்கில் ஆரம்பத்தில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. சில சூழல்கள் காரணமாக அந்த வாய்ப்புகள் மிஸ் ஆகி போனது. அந்த வகையில் மன திருப்திக்காக மலையாள படங்களிலும் கேரியர் வளர்ச்சிக்காக தெலுங்கு படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்..
இந்த வருடம் நான் நடித்த மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த வருடம் நிச்சயம் இரண்டு படம் வெளியாகும்” என்கிறார் வசுந்தரா.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!
இன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
திரு அருண்குமாரும் உடன் இருந்தார். இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி திருமதி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண் - மனம் திரானந்த நாயகி நிரஞ்சனி
தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற
இரட்டையர்கள் இணைந்து 'லாக்கர் 'என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள். இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.
வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.
அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.
படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில்,இரட்டை இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது,
"இதில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ''தம்பிகளா நல்லா பண்ணுங்க" என்று ஊக்கப்படுத்துவார். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது" என்றார்.
இன்னொரு இயக்குநர் ராஜசேகர் என் பேசும்போது,
" நானும் யுவராஜும் 2013ல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்தக் கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ்.நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் ,முயற்சிகள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம் .இந்த தயாரிப்பாளரைச் சந்தித்தபோது அவர் கேட்டபடி கதையை 20 நாளில் தயார் செய்து கொடுத்தோம் .அப்படித்தான் இந்தக் கதை உருவானது..அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார் .அதை நாங்கள் வீணாக்கவில்லை. அவர் செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அது நல்ல படமாக வந்துள்ளது.இதில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
நாயகன் விக்னேஷ் சண்முகம் பேசும்போது ,
'' எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார்.இயக்குநர் ராஜசேகர் எனது குறும்படங்கள் போஸ்டர் வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார் .ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். ஆனால் என்னை வைத்து இயக்குவதாகச் சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் வந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நான் நடித்த இறுதிப்பக்கம் ,கள்ளச்சிரிப்பு போன்ற படைப்புகள் கொடுத்த இயக்குநர்கள் வழியாகத்தான் இந்த மேடையை நான் அடைந்திருக்கிறேன். அப்படி வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு என் நன்றி"என்றார்.
கதாநாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது,
"எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன்.
அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது. அடுத்தது முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது .படம் திறந்தவெளியில் படமாக்கப்படுகிற போது கூட பருவ கால நிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது.
எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள் .ஒளிப்பதிவாளர் தாஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் திரையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கவனத்துடன் அறிவுரைகள் சொல்வார்..
ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் இதில் ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி எடுக்கும் போது ரியலாக எடுத்தார். ஆனால் அதை எடுக்கும்போது பாதுகாப்பு விதிகளைச் சரியாகக் கடைபிடித்தார். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மிகவும் அக்கறையாக செயல்பட்டார் .பாம் சப்தம் வந்து காது பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார்.நாயகன் விக்னேஷ் சண்முகம் உடன் நடிக்கும் சக நடிகராக எனக்கு செளகரியமாக இருந்தார்.படக்குழுவினர் யாரும் ஈகோ பார்க்கவில்லை.
இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் இதை சரியான முறையில் விநியோகம் செய்யும் ஜெனிஷ் அவர்களுக்கும் நன்றி" என்றார்.
விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.படம் முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது.
நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்
3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசியதாவது…
சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார். பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி
கலை இயக்குநர் தினேஷ் மோகன் பேசியதாவது…
இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி பேசியதாவது..
வாய்ப்பு தந்த இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் முழு உழைப்பைத் தந்து, டூப் இல்லாமல் நடித்த கார்த்திகேயன் தோழருக்கு நன்றி. அவரது உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தயாரிப்பு தரப்பில் இப்படத்தில் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். விஷுவல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் மிகக் கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை சுபிக்ஷா LA பேசியதாவது...
இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஹீரோ கார்த்திகேயன் மிகப்பெரிய ஆதரவு தந்தார். மிகக்கடினமான உழைத்துள்ளார். இது அற்புதமான டீம். இவர்கள் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தியேட்டரில் போய்ப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தியா பேசியதாவது..
இந்த படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் மிக முக்கியமான ரோல் தந்துள்ளனர். என்னுடைய ரோல் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும். வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஷுட்டிங்கில் அனைவரும் எனக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தினர். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நடிகர் வின்சென்ட் அசோகன் பேசியதாவது..
சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல், இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சதீஷ் கீதா குமார் பேசியதாவது..
இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார். சுபிக்ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..
கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிய பாடல்!
இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்" படத்தில் "இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்" தான் இளையராஜா எழுதிய முதல் பாட்டு. பாரதிராஜா இயக்கிய "நாடோடி தென்றல்" படத்தின் அனைத்து பாடல்களையும் இளையராஜாவே எழுதியிருந்தார். அனைத்துமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த "விடுதலை" படத்தில் இடம்பெற்ற "வழிநெடுக காட்டுமல்லி..." என்ற பாடலை இளையராஜா எழுதி பாடியிருந்தார். அந்த பாடல், இசை ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்க ராயல் பாபு தயாரிப்பில் பிரஜன் மனிஷா யாதவ் சினாமிகா யுவலட்சுமி ரோகஹித் ரெடின் கிங்ஸ்லி முத்துராமன் பி எல் தேனப்பன் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் "நினைவெல்லாம் நீயடா" படத்தில் 'இதயமே இதயமே இதயமே.... உன்னை தேடி தேடி கழிந்தது இந்த பருவமே...'என்ற பாடலை இளையராஜா எழுதியிருக்கிறார். இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா சில பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் முதல் முறையாக தன் தந்தை எழுதிய பாடலை இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் நேற்று மாலை வெளியிடப்படடது. பிரபல இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் இந்த பாடலை தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ரிலீஸ் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி - சந்து மொண்டேட்டி - பன்னி வாசு - கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் 'தண்டேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
'யுவ சாம்ராட்' நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்குகிறது. திறமை வாய்ந்த நட்சத்திர நடிகரான நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். அதே தருணத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி, 'கார்த்திகேயா 2' படத்தின் மூலம் பான் இந்திய பிளாக் பஸ்டரை வழங்கியவர். மேலும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல வெற்றிகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதுவரை கண்டிராத தோற்றத்தில் நடிக்கும் நாக சைதன்யாவிற்கு இந்தத் திரைப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாக இருக்கும்.
நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காக ஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு 'தண்டேல்' எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்து, அதனுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்... கவர்ச்சியானவர்... லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்... ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.
நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார். இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா- வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படப்பிடிப்பு பெரும்பாலும் அசலான இடங்களில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான 'லவ் ஸ்டோரி'க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. 'தண்டேல்' என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை.
இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகளில் படக் குழு போதுமான நேரத்தை செலவிட்டுள்ளதால்..இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
வித்தியாசமான தோற்றத்தில் பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகை நடிக்கும் 'G2 '( குடாச்சாரி 2)
நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'G2'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 'குடாச்சாரி 2' எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
'மேஜர்', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் 'ஜி2'. இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 'அக்டோபர்', 'சர்தார் உத்தம்' போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.
இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், '' இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். '' என்றார்.
இது தொடர்பாக நடிகர் அதிவி சேஷ் பேசுகையில், '' G2 உலகிற்கு பனிதாவை அன்புடன் வரவேற்கிறேன். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறேன் '' என்றார்.
இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா