சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

மலேசியாவில் கோலாகலமாக நிறைவு பெற்றது 'விஜய் சேதுபதி 51' படப் படப்பிடிப்பு!
Updated on : 01 December 2023

7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில்,  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில்,  இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின்  படப்பிடிப்பு,  மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. 



 



இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்து அம்சங்களுடன் முழு நீள  கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார். 



 



இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சைனீஸ் சண்டைக்ககலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள,  பிரம்மாண்ட  சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் மலேசியாவில் திரையில் இதுவரை காணாத  இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 



 



மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அனைத்து இடங்களில்  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 



 



விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படம் முழுதும் பயணிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.  இவர்களுடன் பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 



 



கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது



 



படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவங்கவுள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா