சற்று முன்

'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |    'சீயான் 62' வில் ஒப்பந்தமாகியுள்ள துஷாரா விஜயன்!   |    நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ள 'மயோன்' பாடல்!   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'கேன் (can)' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான 'புஷ்பா: தி ரூல்' டீசர் வெளியாகவுள்ளது!   |    நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...20 வருட கனவு தற்போது நினைவாகியது!   |    குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' ஆல்பம் பாடல்!   |    'தி ஃபேமிலி ஸ்டார்' ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர் - தயாரிப்பாளர் தில் ராஜு   |    அரண்மனை முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை!   |    நானி 33 படத்தின் மூலம் மீண்டும் இணைந்த தசரா கூட்டணி!   |    'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |   

சினிமா செய்திகள்

அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!
Updated on : 19 February 2024

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு.என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைபடங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழ் நாட்டில் இல்லாத காரணத்தினால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே  செல்கிறது. இதனை கட்டுபடுத்த பல தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில் , அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு.என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள்,   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்  சென்னையில் ஒரு சினிமா நகரம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே  150 ஏக்கரில்  புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் VFX, அனிமேஷன், LED திரை, நட்சத்திர ஓட்டல்கள் என அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று  சட்டமன்றத்தில் budget கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். அதற்கு தமிழ் திரையுலகம் சார்பில்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.  மேலும், எங்களது கோரிக்கையை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், என்றும் திரை உலகினருக்கு உறுதுணையாக இருந்து வரும் மாண்புமிகு. செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும்  தமிழ் திரையுலகின் சார்பாக எங்களது நன்றியினை இரு கரம் குவித்து தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா