சற்று முன்

'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |    'சீயான் 62' வில் ஒப்பந்தமாகியுள்ள துஷாரா விஜயன்!   |    நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ள 'மயோன்' பாடல்!   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'கேன் (can)' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான 'புஷ்பா: தி ரூல்' டீசர் வெளியாகவுள்ளது!   |    நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...20 வருட கனவு தற்போது நினைவாகியது!   |    குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' ஆல்பம் பாடல்!   |    'தி ஃபேமிலி ஸ்டார்' ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர் - தயாரிப்பாளர் தில் ராஜு   |    அரண்மனை முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை!   |    நானி 33 படத்தின் மூலம் மீண்டும் இணைந்த தசரா கூட்டணி!   |    'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |   

சினிமா செய்திகள்

ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திப்பாடல் 'கருப்பன் எங்க குலசாமி' - அமைச்சர் பாராட்டி வெளியிட்டார்
Updated on : 19 February 2024

தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் சொந்த ஊரான காரைக்குடி கல்லல் பாகனேரி அருகில் உள்ள சொக்கநாதபுரம் அருகே வீற்றிருக்கும் அவரது குலதெய்வமான அருள்மிகு திருப்பத்தூர் கோட்டை கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகர் ஏ எல் உதயா பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்.  சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உருவாகியுள்ள பக்திமயமான 'கருப்பன் எங்க குலசாமி' பாடலை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) மாலை கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.  காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர் ஆத்மநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  பாடலை வெளியிட்டு பேசிய அமைச்சர், நடிகர் ஏ எல் உதயா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குழுவினரை மனமார பாராட்டியதோடு அவரது குலதெய்வ கோவிலுக்கும் இதே போன்றதொரு பாடலை இந்த குழுவினரே உருவாக்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  வரும் பிப்ரவரி 21ம் தேதி திருப்பத்தூர் கோட்டை கருப்பர் திருக்கோவிலின் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் இந்த பாடலுக்காக நடிகர் உதயா உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். பாடல் வெளியிடபப்பட்டது முதல் கோவிலில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.  வர்ஷேன்யம் ரெக்கார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள 'கருப்பன் எங்க குலசாமி' பாடலின் வரிகளை இயக்குநர் பவன் எழுதி அவரே இப்பாடலையும் இயக்கியுள்ளார். ஜேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சச்சின் சினிமாஸ் சார்பில் ஏ எல் உதயா தயாரித்துள்ள இப்பாடலை வி எம் மகாலிங்கம் பாட, எல் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, சுராஜ் கவி படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.  பாடல் குறித்து பேசிய நடிகர் உதயா, "எங்கள் குலதெய்வமான கோட்டை கருப்பர் திருக்கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றபோது கருப்பர் குறித்தும் கோவில் குறித்தும் பாடல் ஒன்றை உருவாக்கித் தர வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர். எங்கள் குடும்பத்தின் சார்பாக இந்த பாடலை தயாரித்துள்ளது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். கோட்டை கருப்பரின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்," என்று கூறினார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா