சற்று முன்

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |    சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா   |    யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |   

சினிமா செய்திகள்

நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!
Updated on : 06 April 2024

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம்,  பார்வையாளர்களை காலத்தின் மீது  ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ OTT இல் திரையிடப்பட உள்ளது, இந்த வீடியோவிற்கு நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார். பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் கூறியுள்ள தகவலின் படி…, வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 AD.’  படத்தின் சிறப்பு அனிமேஷன் அறிமுக வீடியோவை வெளியிடவுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் உலகம் குறித்து ஒரு அறிமுகத்தை வழங்கும். இந்த முழு அனிமேஷன் வீடியோவிற்கும் முன்னணி நட்சத்திர நடிகர் பிரபாஸ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிமுக வீடியோவின் டிஜிட்டல் பிரீமியரில், ‘கல்கி 2898 AD’ படத்தில் நட்சத்திர நடிகர்கள் பங்குபெறும் கதாபாத்திரங்களையும் இந்த வீடியோ அறிமுகப்படுத்தும். இந்த அனிமேஷன் அறிமுக வீடியோவின்   உரிமையை கைப்பற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பெரும்  முதலீட்டைச் செய்துள்ளதாக இந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னதான உலகளாவிய பிரீமியரைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு பிரபல நட்சத்திர நடிகர் இதுபோன்ற அனிமேஷன் அறிமுக வீடியோவிற்கு, குரல் கொடுப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த அப்டேட் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு அப்டேட்டிலும் வானளாவ உயர்ந்து வருகிறது.   'கல்கி 2898 AD' கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு, பெரும் அலைகளை உருவாக்கியதுடன், உலகளாவிய வகையில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழித் திரைப்படமாகும், இது புராணக்கதைகளின் அடிப்படையில்  எதிர்காலத்தில் நடக்கும்  சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா