சற்று முன்

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |    சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா   |    யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |   

சினிமா செய்திகள்

உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்
Updated on : 08 April 2024

பணியின் போது நேர்மையாக வாழ்ந்து வந்த உதவி கமிஷனர் பணிக்காலம் முடிந்த பின் சட்டத்தை கையில் எடுத்து நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படும் அயோக்கியர்களை களை எடுக்க புறப்படுகிறார். இப்படி ஒரு கதைக்களத்தை மையமாக கொண்ட படத்திற்கு " கடமை " என பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ், காயத்ரி, சுக்ரன் சங்கர், மோகன சுந்தரி, கோபி, சாந்தி , தேவராஜ் , பிரியா , டெலிபோன் தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  பாபு ஒளிப்பதிவையும், பன்னீர்செல்வம் படத்தொகுப்பையும், பிரசாத் கணேஷ் இசையையும் கவனித்துள்ளனர். 

    மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்து வெளிவந்த " கடமை " 50 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். அதே தலைப்பை இதற்கும் சூட்டி இந்த கதையின் நாயகனாக நானே நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சுக்ரன் சங்கர் கூறியதால் கே.எஸ்.என்.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நானே இதை தயாரித்துள்ளேன் என்கிறார் கே.சீராளன்.  படத்தை பற்றி இயக்குனர் சுக்ரன் சங்கர் கூறியதாவது , :- " இன்றைய காலகட்டத்தில் குற்றப் பிண்ணனியில் நடைபெறும் ஆணி வேரான நபர்களை கண்டுபிடித்து வேரோடு அழிக்க முற்படும் நாயகன் தான் இதன் மையக்கரு. அன்றாடம் நம் கண் முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை கோர்வையாக்கி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து , " கடமை " என பெயர் சூட்டி டைரக்ட் செய்துள்ளேன்" என்று இயக்குனர் சுக்ரன் சங்கர் தெரிவித்தார்.  பிரபல முன்னணி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பயிற்சி பெற்றுள்ள சுக்ரன் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் , எழுதி தமது முதல் படமாக இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா