சற்று முன்

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |    சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா   |    யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |   

சினிமா செய்திகள்

சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்
Updated on : 10 May 2024

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி 'லவ் ஸ்டோரி' எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும்  இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் 'தண்டேல்' திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார்.  இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் பிரத்யேகமான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியின் தொடக்கத்தில் நடிகை சாய் பல்லவி இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து 'தண்டேல்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் புஜ்ஜி  தல்லி (சத்யா) எனும் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறார். இது ஒரு சிறந்த சிந்தனை. சாய் பல்லவியின் திறமையான நடிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த வீடியோவில் அவரது அசலான முகமும், வேடிக்கையான நிகழ்வுகளும் காண்பிக்கப்படுகிறது.‌ அதில் அவர் அழும் போது நம்மை அழ வைக்கிறார். அவர் சிரிக்கும்போது நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறார். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதுடன், அவர்களுடன் விளையாடும் தருணங்களும் காணப்படுவதால்.. சாய் பல்லவி அடிப்படையில் எவ்வளவு நல்ல மனிதர் என்பதையும் இது உணர்த்துகிறது.  வீடியோவின் இறுதியில் நாக சைதன்யாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே நடக்கும் உரையாடலும் நிகழ்வுகளும் அழகான தருணங்கள்.  சாய் பல்லவியின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ அனைவரும் நினைப்பது போல் சீரியஸாக இல்லாமல்.. சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல்.. கனிவான மனிதராகவும் இருக்கும் புதிய சாய் பல்லவியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிச்சயமாக சாய் பல்லவியின் மறுபக்கம் இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.  சாய் பல்லவியின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய வரவேற்பினை பெற்று தரும். நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஜோடி மீண்டும் ஒருமுறை திரையில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குநர் சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்குவதால் 'தண்டேல்' ஒரு அற்புதமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போவது உறுதி. இந்தத் திரைப்படத்தில் காதலை தவிர வேறு பல சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.‌  ஷாம் தத்தின் ஒளிப்பதிவும்,' ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆத்மார்த்தமான பின்னணி இசையும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் அற்புதமான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஸ்ரீ நாகேந்திரன் தாங்கலா இப்படத்திற்கு களை இயக்குநராக 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா