சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!
ஏறத்தாழ 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணம், கட்டிட அனுமதி வாங்கியதாக 75 ஆயிரம் ரூபாய் (ரொக்கம்) கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி கட்டிட அனுமதி வாங்காமல் சங்க அலுவலகம் கட்டியதால், அது தொடர்பான வழக்கில் டப்பிங் சங்கம் தோல்வி அடைந்தது.
முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றமே உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அல்ல.
ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறு பேசி வரும் ராதாரவி தமிழ்நாடு அரசாங்கம் தன்னை பழிவாங்கவே பதில் சங்க கட்டிடத்தை இடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திரைத்துறை தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான விமர்சனங்களையும் கருத்துகளையும் சங்க விழாக்களிலும் சங்க கூட்டங்களிலும் ராதாரவி பதிவு செய்வதும், அதை ஃபெப்சி தலைவர் செல்வமணி வெளிப்படையாக ஆதரித்து வருவதும் ஒட்டு மொத்த தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் எதிரான துரோகம்.
சங்கக் கட்டிடம் இடிக்கப்பட்ட வழக்கில் பெரும் முறைகேடு செய்திருக்கும் ராதாரவி மற்றும், அவர் நிர்வாகம் மீது தொழிலாளர் நலத்துறையில் சங்க உறுப்பினர்கள் புகார் தந்த பின்பும், துரை சார்ந்த நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தவிர்த்து வருவது வேதனைக்குரியது.
இந்த நிலையில், சமீபத்தில் திருத்தப்பட்ட டப்பிங் சங்க விதிகள் ஜூலை 2024-ல் தான் நடைமுறைக்கு வந்தது. ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அதில் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே, திருத்தப்பட்ட கட்டணங்கள் உட்பட பல விதிகள் பொருந்தும்.
சுமார் 40 வருடங்களாக உறுப்பினர்களாக இருப்பவர்கள் பல ஆண்டுகளாக இன்னொரு சங்கத்திலும் உறுப்பினராக இருந்தால், சமீபத்தில் திருத்தப்பட்ட சட்டப்படி, டப்பிங் சங்க உறுப்பினர் அந்தஸ்தை இழப்பார்கள் என்று சொல்வது பொருந்தாது. அது ஏற்புடையதும் அல்ல.
ஆனால் அப்படி குறிப்பிட்டு திரு.எஸ்.வி சேகர், திரு.நாசர், திரு.மயிலை குமார், திருமதி.எல்.பி.ராஜேஸ்வரி, திரு.சர்தார், திரு.கோபிநாத், திருமதி.சுமதி உட்பட 10 உறுப்பினர்களுக்கு மட்டும் ராதாரவி நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த பத்து நபர்களும் வேறு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் பட்டியல் லேபர் கமிஷனர் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. அந்த பட்டியலை ராதாரவி நிர்வாகத்திற்கு தந்து லேபர் கமிஷனர் அலுவலகம் உதவி செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது அரசாங்க சம்பளம் வாங்கும் லேபர் கமிஷனர் அலுவலகத்தின் அதிகாரிகள் செய்யும் மிகப் பெரிய முறைகேடு. இது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது.
ஒருவர் எத்தனை சங்கத்தில் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்க fundamental rights அனுமதிக்கும்போது, அதற்கு விரோதமாக ஒரு சங்கம் சட்ட திருத்தம் செய்தால், அதை தொழிலாளர் நலத்துறை அதிகாரி அங்கீகரிக்கக் கூடாது. அது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தும், அது சங்க உறுப்பினர்களால் தொழிலாளர் நலத்துறைக்கு புகாராக தெரிவிக்கப்பட்டும், நீதிமன்றத்தை உதாசீனம் செய்யும் விதமாக, சுயலாபத்திற்காக ராதாரவியின் சங்கத்திற்கு ஆதரவாக செயல்படும் ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரியும் அவரது சகாக்களும், மற்ற அலுவலர்களை கட்டாயப்படுத்தி அந்த சனநாயக விரோதமான சட்டங்களுக்கு அவசரமாக அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்.
ஆக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பொதுச்சட்டத்தையும் மதிக்கவில்லை. நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை.
தொழிலாளர்களான உறுப்பினர்கள் தந்த புகார் மனுவையும் மதிக்காமல் எதேச்சதிகாரத்துடன் செயல்பட்டு வருவது நிரூபணமாகி உள்ளது.
இதுகுறித்து கடந்த சுமார் 10 ஆண்டுகள் ஆண்டுகளாக ராதாரவியின் நிர்வாகத்திற்கு எதிராக போராடிவரும் டப்பிங் சங்கத்தின் முறைகேடுகளை சட்டரீதியாக அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுத்து வரும் பின்னணி குரல் கலைஞர், நடிகர், எழுத்தாளர் திரு.வே.தாசரதி அவர்களிடம் கேட்டபோது 'போலி டத்தோ ராதாரவியின் ஒடுக்குமுறையில் இருந்து டப்பிங் சங்க உறுப்பினர்களை மீட்டு திரைத்துறையின் விஷக்களையாக விளங்கும் ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்தின் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டத்திற்கு எதிராக அவருக்கு உதவும் அரசு அதிகாரிகள் மீதும், இனியும் தாமதிக்காமல் அரசாங்கம் சட்டபூர்வமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் 'ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்திற்கு கிடைக்கும் தண்டனை, இனி எந்த சங்கத்திலும் முறைகேடு செய்ய நிர்வாகிகள் பயம் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்தார்.
கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கில் தன் சுயநிதியை அளித்து டப்பிங் சங்க உறுப்பினர்களுக்கு பேருதவி செய்த அதன் உறுப்பினரான நடிகர் திரு. சூர்யா அவர்கள் சமீபத்தில் ரூபாய் 200 சந்தா செலுத்தவில்லை என்று காரணம் கூறி அவரையும் ராதாரவியின் நிர்வாகம் சங்க நீக்கம் செய்ததும், அவர் அளித்த நிதி பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு இன்று வரை சென்று சேரவே இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தவர் ரூபாய் 200 செலுத்தவில்லை என்று குறிப்பிட்டு அவரை சங்க நீக்கம் செய்த நன்றி கெட்ட ராதாரவியின் நிர்வாகத்தை அரசுத் துறை அதிகாரிகளும் பெப்சி நிர்வாகமும் தொடர்ந்து ஆதரித்து வரும் காரணம் புதிராக உள்ளது.
முறைகேடாக கட்டப்பட்ட டப்பிங் சங்க கட்டிடம் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது, சங்க உறுப்பினர்களில் தமிழ் பின்னணிக் குரல் கலைஞர்களின் சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை சங்கம் கட்டாய பிடித்தம் செய்து வருவது, தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை ராதாரவி சங்க நீக்கம் செய்து வருவது, தொழிற்சங்க விதிகளுக்கு முரணாக சர்வாதிகார பொதுக்குழு நடத்துவது, குறிப்பிட்ட வரைமுறைக்கு மேல் பெரும் சங்க நிதியை வீண் செலவுகளுக்கு விரயமாக்குவது என ராதாரவியும் அவர் நிர்வாகமும் தொடர்ந்து செய்யும் எல்லா சட்டவிரோத செயல்கள் குறித்தும் உறுப்பினர்கள் புகார் செய்த பின்பும் அதைத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ??
திரைத்துறை தொழிலாளர் சங்கங்கள் அனைத்திற்கும் களங்கமாக இருந்து வரும் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம், கேள்வி கேட்கும் உறுப்பினர்கள் மீது கட்டவிழ்த்து விடும் சங்க நீக்க நடவடிக்கை, வேலை வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைள் அனைத்தையும் அறிந்தும், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய பெப்சி அமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ??
தற்போதும் குடிசை மாற்று வாரியத்தால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மிகச் சலுகை விலையில் தரப்பட்ட குடியிருப்புக்கான இடத்தில், டப்பிங் சங்க அலுவலகத்தை கட்டி கோலாகல கிரகப்பிரவேசம் நிகழ்த்தி சங்கம் நடத்த ராதாரவிக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்தது ஏன் ??
சக தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடாது என ராதாரவியும், அவர் நிர்வாகமும் வேலை வாய்ப்பு தருபவர்களை அலைபேசியில் அழைத்தும், கடிதம் மூலமாகவும் மிரட்டுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், லேபர் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்தை கேடயமாக நின்று பாதுகாத்து வருவது பெரும் வேதனைக்குரியது.
அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுச் சட்டங்களும், தொழிற்சங்க சட்ட விதிகளும் தொடர்ந்து மீறப்பட இது ஒரு முன்னுதாரணமாக மாறுவதற்கு வழி வகுத்து தந்தது போல அமைந்து விடும்.
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !
நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!
புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், “ராமாயணம்”, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியர்த்தில் ஆழ்த்தவுள்ளது.! இந்த காவிய திரைப்படம், இந்தியாவின் மிகவும் நேசத்துக்குரிய கதையினை மிகப்பிரம்மாண்டமாக தொலைநோக்கு கதைசொல்லலுடன் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் தொலைநோக்கு சக்தியாக, நமித் மல்ஹோத்ரா ஹாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார், இதில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி போன்ற சமீபத்திய வெற்றித் திரைப்படங்களும் அடங்கும். கூடுதலாக, அவர் ஆங்க்ரி ஃபேர்ட்ஸ் 3ஐயும் சமீபத்தில் அறிவித்துள்ளார். நமித் மல்ஹோத்ராவின் கதைசொல்லல் பற்றிய ஆழமான புரிதல் அவரை ஹாலிவுட்டின் மிக முக்கியமான இந்தியர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது!
https://www.instagram.com/p/DCBD-oBzE5o/?igsh=NnNlOXZkNmR1MDhl
சமூக ஊடகங்களில், நமித் மல்ஹோத்ரா ஒரு போஸ்டரை பகிர்ந்து கொண்டு கூறியுள்ளதாவது.., “ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான இதயங்களை ஆட்சி செய்த, இந்த காவியத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கான உன்னதமான தேடலை நான் தொடங்கினேன். இன்று, எங்களது குழு ஒரே ஒரு அரிய நோக்கத்துடன் அயராது உழைக்கும்போது, அது அழகாக வடிவம் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்: நமது வரலாறு, நமது உண்மை மற்றும் நமது கலாச்சாரத்தின் மிகவும் உண்மையான, புனிதமான மற்றும் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் தழுவல் - நமது "ராமாயணம்" - உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விரைவில்.
நமது மிகப் பெரிய காவியத்தை பெருமையுடனும், பயபக்தியுடனும் உயிர்ப்பிக்கும் எங்கள் கனவை நிறைவேற்ற எங்களுடன் சேருங்கள்...
2026 தீபாவளியில் பகுதி 1
மற்றும்
2027 தீபாவளியில் பகுதி 2
2026 மற்றும் 2027க்கான உங்கள் காலெண்டர்களில் தீபாவளி நாளை குறித்து வையுங்கள் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமாக ராமாயணம் பாகம் ஒன்று மற்றும் இரண்டு உங்களை மகிழ்விக்க வருகிறது.
நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு சிறப்பான தளத்தை வழங்குவதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம். பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக ரேட்டிங் பெற்ற கதைகள் மேலே உயரும். இதன் பின்னூட்ட அமைப்பு, கருத்துக்களுக்குப் பதிலாக மதிப்பீடுகளில் கவனம் செலுத்துகிறது, எழுத்தாளர்கள் நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களின் கருத்துக்களுக்கு நேர்மறையான ஆதரவைப் பெறவும் உதவும் ஒரு ஆக்கபூர்வமான சூழலை இந்த தளம் உருவாக்குகிறது.
“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் " இணையதளத்தை துவக்கத்தை கொண்டாடும் விதமாக எழுத்தாளர்களுக்கு,
உங்களுக்குப் பிடித்த ஹீரோவை சூப்பர் பவருடன் கற்பனை செய்து கதை சொல்லுங்கள் !" என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும் திறன்களைக் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவை மறுவடிவமைக்கும் இந்த கதைக்கரு அதிகபட்ச 3,500-வார்த்தைகள் கொண்டதாக சமர்ப்பிக்க, எழுத்தாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். இறுதியில், இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதரவை அதிகமாக பெறும் வெற்றியாளர் உதவி எழுத்தாளராக அல்லது உதவி இயக்குநராக ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார். இது வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும். தல்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பளபதி ஆகியோரால் நிறுவப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளம், புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்காகவும், எழுத்தாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குவகிறது.
கூடுதலாக, தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளம் ஆடியோபுக்ஸ் அம்சத்துடன் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை அதிவேக ஆடியோ அனுபவங்களாக மாற்ற இது அனுமதிக்கிறது. ஆடியோ கதைசொல்லலை விரும்பி கேட்போர் உட்பட, எழுத்தாளர்கள் பரந்த பார்வையாளர்களை அடைய உதவும் வகையில் இந்த வளர்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளதாவது.., "இந்த மேடையில் உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், உலகை ஊக்குவிக்க சிறப்பான வழியாக இதைப் பயன்படுத்திகொள்ளுங்கள், எழுத்தாளர்களின் வார்த்தைகளை மற்றும் பார்வையாளர்கள் தங்கள் விருப்பத்தின் மூலம் மேம்படுத்துவார்கள். இந்த தளத்தில் அனைவரும் இணையுங்கள். #TheScriptCraft குழுவிற்கு வாழ்த்துகள்! https://www.thescriptcraft.com/ @TSCWriters #Vaishnav @uppalapatipramod #CreativeCommunity"
தி ஸ்கிரிப்ட் கிராஃப்டில் பிரபாஸின் ஈடுபாடு, எழுத்தாளர்களுக்கு ஒரு நேர்மறையான இடத்தை வளர்ப்பதிலும் தனித்துவமான கதைசொல்லலை ஊக்குவிப்பதிலும் உள்ள அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஸ்கிரிப்ட் கிராஃப்ட் எழுத்தாளர்களை ஆதரிப்பதிலும், கதை சொல்லும் கலையை மதிக்கும், வரவேற்பு தளத்தை உருவாக்குவதிலும் பிரபாஸ் கொண்டிருந்த அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.
தி ராஜா சாப், சலார்: பாகம் 2 - சௌரியங்க பர்வம், கல்கி 2 மற்றும் ஹனு ராகவபுடியுடன் பெயரிடப்படாத திரைப்படம் என பிரபாஸை திரையில் தரிசிக்க, ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் உள்ளனர்.
'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!
இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் திரு. ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.
'கேம் சேஞ்சர்' படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக 'கேம் சேஞ்சர்' படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, "21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் 'கேம் சேஞ்சர்' என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன். 'கேம் சேஞ்சர்' மட்டுமில்லை, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்."
முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
"எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது. கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்," என்று கூறினார்.
ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, "ஊடகம் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்களை நான் சந்தித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக சந்திக்கிறேன். 'நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்' என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ சார் கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்."
"எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதன்பிறகு, நான் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது தில் ராஜூ சாரின் ஆதரவுக்கு நன்றி கூறி, 'கேம் சேஞ்சர்' திரைப்படத்துடன் கம்பேக் கொடுப்பதில் சுவாரஸ்யமாக இருக்கிறேன். இருவரும் அதிக தமிழ் மற்றும் பான் இந்தியன் படங்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் சரியான இயக்குநர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். தில் ராஜூவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் சரியான கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் விதம் தான். இத்துடன் அவரது அசாத்திய தயாரிப்பு பணிகள் என்னை கவர்ந்துள்ளது. அதிகளவு பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொண்ட வெகு சில தயாரிப்பாளர்களில் அவர் ஒருவர். ஆதித்யாராம் மூவிஸ் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க ஆர்வம் மற்றும் பெருமை கொண்டுள்ளது," என்றார்.
நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் நவம்பர் 8 முதல், மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற, "ஏ.ஆர்.எம்" திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ள இப்படத்தை, மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில், டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார்.
டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாசில் ஜோசப், சஞ்சு சிவராம், ஹரிஷ் உத்தமன், ரோகினி, ஜெகதீஷ், அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பிஜு குட்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த ஃபேன்டஸி திரைப்படம், அமானுஷ்யம் சூழ்ந்த சிலையின் பின்னணியில், மூன்று தலைமுறைகளின் கதையைச் சொல்கிறது. ஏ.ஆர்.எம் ஒரு விண்கல் மற்றும் ஒரு பழங்கால கோயில் விளக்கைச் சுற்றியுள்ள மர்மங்களை விரிவுபடுத்துகிறது, போர்வீரன் குஞ்சிகேலு, திருடன் மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று மையக் கதாபாத்திரங்களின் பயணங்களைச் சிக்கலான முறையில் இது இணைக்கிறது. மூன்று தலைமுறை பாத்திரங்களில் டோவினோ தாமஸால் வித்தியாசமான தோற்றங்களில் அசத்தியுள்ளார்.
படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் படம்பிடித்துள்ளார், ஷமீர் முகமதுவின் எடிட்டிங் மற்றும் திபு நினன் தாமஸின் பரபரப்பான இசையமைப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்த மாயாஜால ஃபேன்டஸி த்ரில்லரான ஏ.ஆர்.எம் - திரைப்படத்தைக் காணத் தவறாதீர்கள்.
கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'
இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் (Ping Records) வாயிலாக 'ராக்காயி' என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். தொலைக்காட்சி பிரபலமான கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான '96' திரைப்பட புகழ் நியதி முதன்மை வேடங்களில் இதில் தோன்றுகின்றனர்.
கலகலப்பான காதல் பாடலான 'ராக்காயி' ஏ.கே. பிரியன் இசையிலும், மு.வி. பாடல் வரிகளிலும் உருவாகியுள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான கார்த்திக் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை தளபதி விஜய் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான 'கோட்' திரைப்படத்தில் ஸ்பார்க் பாடலை பாடிய வ்ருஷா பாலு உடன் இணைந்து பாடியுள்ளார்.
இப்பாடலை விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அபு மற்றும் சல்ஸ் இயக்கி நடனம் அமைக்க, பிரம்மாண்ட பொருட்செலவில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரித்துள்ளனர்.
விர்ச்சுவல் புரொடக்ஷன் சினிமாவில் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் கூறியது போல் இந்த நவீன தொழில்நுட்பத்தை 'ராக்காயி' குழுவினர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உற்சாகமூட்டும் காதல் பாடலான 'ராக்காயி' பிங்க் ரிக்கார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் இன்று (நவம்பர் 4) வெளியாகிறது. இப்பாடல் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெறும் என்று நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் பிங்க் ரிகார்ட்ஸ் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!
திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பிற்காக மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் ரோஸ்மின்.
அவர் இப்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரோஸ்மின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை ரோஸ்மின் தனது முதல் தமிழ் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கி வைக்கும்படியான இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாது நிறைய புது விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்" என்றார்.
கோலிவுட்டில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, "நான் சினிமாவை நேசிப்பவள். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உள்ளது. அது எனக்கு இன்ஸ்பிரேஷன்" என்றார்.
கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள ரோஸ்மின் மாடலிங் துறையிலும் தடம் பதித்தார். அங்கிருந்து நடிப்புத் துறையில் நுழைந்தார்.
அவர் ஏற்கனவே 'மிஸ் மலபார் 2022' பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மிஸ் குயின் கேரளா 2023 இல் முதல் இடம் மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2023 இல் இரண்டாவது இடமும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!
தற்போதைய இந்திய திரை உலகில், மொழி இன எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்டர்களை தந்து இந்தியாவின் ஒரே பான் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந்திருக்கிறார் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஆரம்பித்த பான் இந்திய ப்ளாக்பஸ்டர் பயணம் இப்போது கல்கி வரை தொடர்கிறது. தெலுங்கில் மட்டுமல்லாது பாலிவுட்டை தாண்டி இந்தியாவெங்கும் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து பெரும் உயரத்தை எட்டியுள்ளது.
இந்திய சினிமாவில் மிகச்சில நட்சத்திரங்களே நம் மாநில எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் மனங்களை கவர்ந்து, இந்திய முழுமைக்குமான நட்சத்திரமாக மாறியுள்ளார்கள். அந்த வகையில் தற்போது பிரபாஸ் பான் இந்திய நட்சத்திரமாக மாறியுள்ளார்.
பிரபாஸ் ஸ்டைலிஷ் ஆக்சன், மாஸ் லுக், அற்புதமான திறமை மிக்க நடிப்பு மற்றும் வசீகரம் என ரசிகர்கள் கொண்டாடும் அனைத்தும் பிரபாஸிடம் நிறைந்து இருக்கிறது.
பாகுபலி திரைப்படம் இந்தியாவை மட்டுமல்ல உலகையே திரும்பி பார்க்க வைத்தது, அதைத் தொடர்ந்து சாகோ, சலார், கல்கி என தொடர்ச்சியாக பான் இந்திய ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை தொடர்ந்து தந்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி, சலார், கல்கி என 3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் மாஸ் தெலுங்கு சினிமாவைத் தாண்டி தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், பாலிவுட் என எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவில் விரிந்து வருகிறது. பிரபாஸ் படங்கள் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அவரது படங்களின் குறைந்த பட்ஜெட் அளவே, 500 கோடியைத் தொட்டுவிட்டது. அவரது படங்களுக்கான ஓபனிங்க், சாட்டிலைட் ரைட்ஸ், மற்ற மொழி ரைட்ஸ் எல்லாமே பெரும் உச்சத்தை தொட்டுவிட்டது. அவரது படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையியலேயே லாபத்தை குவிக்க ஆரம்பித்து விட்டது.
பெருகி வரும் ரசிகர் பட்டாளம், இந்தியாவில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவில் பிரம்மாண்டமான பிஸினஸ், இந்திவாவை தாண்டி உலக அளவில் ரசிகர்களை கவரும் மாஸ் என பிரபாஸ் இந்தியாவில் பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்.
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
காதலர் தினத்திற்கு சற்று முன்னதாக, தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. காதலர்கள் காதலை இப்படத்துடன் கொண்டாட, சரியான வாய்ப்பை இது வழங்குகிறது.
படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டர், முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான அற்புதமான கெமிஸ்ட்ரியை காட்டுகிறது, போஸ்டர் கடல் பின்னணியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், காதல் ஜோடியின் அன்பான அரவணைப்பை சித்தரிக்கிறது, அவர்களின் கதாபாத்திரங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பின் ஆழமான கடலைக் குறியீடாக குறிக்கிறது. டீசர் மற்றும் போஸ்டர்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி அவர்களின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான லவ் ஸ்டோரிக்குப் பிறகு, திரையில் மீண்டும் அவர்கள் இணைவதைக் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள டி மச்சிலேசம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் “தண்டேல்” திரைப்படம், பரபரப்பான தருணங்களுடன் கூடிய அற்புதமான காதல் கதையைச் சொல்கிறது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவைக் கையாள்கிறார் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி, கலை இயக்கம் ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா உட்பட, இத்திரைப்படத்தில் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா