சற்று முன்
சினிமா செய்திகள்
அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது
Updated on : 22 July 2024
சென்னை : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான "நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்" சீரிஸினை ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது. அசத்தலான காமெடி ஜானரில், ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்து வருகிறது.
பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சரவெடி காமெடியுடன் அசத்துகிறது
இந்த சீரிஸ்.
சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
கேரள மக்களின் வாழ்வில் திருமண பந்தமும் கலாச்சாரமும் சார்ந்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு காமெடி சீரிஸாக இந்த, "நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்" உருவாகியுள்ளது.
MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ் நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தை தரும் சீரிஸாக உருவாகியுள்ளது, இந்த பரபரப்பான சீரிஸை, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளியுங்கள்.
‘நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்’ (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) என ஏழு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கிறது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள், தங்கள் தாய் மொழியில் இந்த காமெடி சீரிஸை ரசிக்க முடியும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
சமீபத்திய செய்திகள்
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சீப் பிசினஸ் ஆபிசர் உமேஷ் குமார் பன்சால் பேசுகையில், '' தனித்துவம் மிக்க மற்றும் அழுத்தமான கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு 'கிங்ஸ்டன்' திரைப்படம் ஒரு சான்றாகும். ஜீ.வி. பிரகாஷ் குமாரின் அபாரமான திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கற்பனையுடன் கூடிய சாகசம் நிறைந்த படைப்பு ..பார்வையாளர்களை கவரும். மேலும் இந்த பிரம்மாண்டமான படைப்பில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.'' என்றார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ' கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன் , குமரவேல் , சபு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் வசனங்களை தீவிக் எழுத, படத் தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனித்திருக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் அதிரடி சண்டை காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். கடல் பின்னணியில் ஹாரர் அட்வென்ச்சர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் - படத்தை பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் 'கிங்ஸ்டன்' படத்திற்காக சில பிரத்யேக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் முதன்முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படம் அவர் நடிப்பில் உருவாகும் 25- வது படமாகும். இந்த திரைப்படத்திற்காக அவர் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதால்.. படத்திற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் என பட தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், அவரது நடிப்பில், மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதிரடி மாஸாக இருக்கும் போஸ்டர், யாஷின் பிறந்த நாளில், ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிவிக்கிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் சமூக ஊடகங்களில் இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், போஸ்டரில் "நாயகனை கட்டவிழ்த்துவிடுகிறோம்..." என்ற டேக்குடன், யாஷ் வெள்ளை நிற டக்ஷீடோ ஜாக்கெட் மற்றும் ஃபெடோரா உடையில் மறைவான நிழலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார், புகை வளையத்தை, ஊதியபடி விண்டேஜ் காரில் சாய்ந்து நிற்கிறார். "இருத்தலியல் நெருக்கடி" என்ற வார்த்தைகள், ஒரு இருண்ட மற்றும் புதிரான பயணத்தைக் குறிக்கிறது.
இந்த போஸ்டர் சர்வதேச தரத்துடன் அழகியலின் வடிவமாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் எந்த பாதையில் பயணிக்கும், இதன் கதைக்களம் என்னவாக இருக்கும், என்கிற ஆவலைத் தூண்டுகிறது. வசீகரம் நிறைந்த ரகசிய செய்தியுடன் கூடிய போஸ்டர், 8-1-25 தேதி மற்றும் 10:25 AM, அன்று ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.
"எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் எனும் டேக் லைனுடன், உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம், இதுவரையிலான கதைசொல்லல் பாணியிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில், மிகப்புதுமையாக தயாராக உள்ளது. "நாயகனை கட்டவிழ்த்துவிடுதல்" என்ற சொற்றொடர் அபரிமிதமான சக்தி மற்றும் அவன் குணத்தின் சிக்கலான தன்மையைக் குறிக்கிறது. "இருத்தலியல் நெருக்கடி" பற்றிய யாஷின் குறிப்பு, வழக்கமான கதைசொல்லலின் எல்லைகளைத் தாண்டும் ஒரு திரைப்படமாக இருக்குமென்பதை உறுதியளிக்கிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாள் நெருங்கி வரும் வேளையில், ரசிகர்கள் 2025 ஆம் ஆண்டில், யாஷின் தரிசனத்துக்காக மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். “டாக்ஸிக்” பட தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கத் தயாராகி வருகின்றனர்.
KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படத் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்
SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.
இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று டிரெய்லரை வெளியிட்டனர்.
பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது..
ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது. இந்தப்படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. இது பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற படம். காதல், ஆக்சன் என எல்லாம் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இந்தப்படத்தோடு பத்து படங்கள் பொங்கலுக்கு வருகிறது. வரட்டும் கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களுக்குப் பிடிக்கும். என்னுடன் என் டீம் துணை நிற்பார்கள். அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் வசந்த் பேசியதாவது…
மெட்ராஸ்காரன் என் முதல் படம், இந்த வாய்பைத் தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது...
இறுதியாக ஜனவரி 10 ஆம் தேதி மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். அவர் மிகச்சிறந்த தயாரிப்பாளர், மிகச் சிறந்த மனிதர். திரைத்துறைக்குத் தேவையான தயாரிப்பாளர். இந்த திரைப்படத்திற்கு, எத்தனை தடைகள் வந்தாலும், விட்டுவிடாமல் தயாரித்துள்ளார். எனக்கு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் மிக நல்ல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா, வாழ்த்துக்கள். நிஹாரிகாவுக்கும் வாழ்த்துக்கள். கலையரசன் மிகச் சிறந்த கோ ஸ்டார், அவருக்கும் வாழ்த்துக்கள். ஜனவரி இந்த பொங்கலுக்கு மெட்ராஸ்காரன் படத்தைப் பார்த்து எல்லோரும் ஆதரவு தாருங்கள். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். அனைவருக்கும் நன்றி.
நடிகை நிஹாரிகா பேசியதாவது...
எங்களது திரைப்படம் இறுதியாக இந்தப் பொங்கலுக்கு வெளியாகிறது. நான் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும், முதலில் தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் பல தடைகளைத் தாண்டி, இந்த திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு படத்தைத் தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, எனக்கு தெரியும். இந்த நிலைக்கு இந்த படத்தைக் கொண்டு வந்ததே வெற்றியின் முதல் படி தான். ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். எடிட்டர் வசந்த் மிக அட்டகாசமாகப் படத்தைத் தொகுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சி எஸ், உங்களின் மிகத் தீவிர ரசிகை நான், மிக அற்புதமான இசையைத் தந்து இருக்கிறீர்கள். காதல் சடுகுடு பாட்டைத் தந்த சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வாலி மோகன்தாஸ், இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. மெட்ராஸ்காரன் திரைப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்களை மகிழ்விக்கும். இப்படத்தில் கலையரசன் , ஷேன் நிகம் இருவருக்கும் கொடுக்கும் அன்பை, எனக்கும் தாருங்கள். அனைவருக்கும் நன்றி.
நடிகர் கலையரசன் பேசியதாவது...
மெட்ராஸ் என் சொந்த ஊர், எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது, மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள், ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது, அந்த வகையில் இந்த படத்திற்கு டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். என்னிடம் சிலர் என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா? என்று கேட்டனர். இல்லை நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான் இசையமைப்பாளர். சாம் சி எஸ் இசை எப்போதும் நம்முடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், அவருக்கு என் நன்றி. இந்த படத்தில் என் கதாபாத்திரமே மிக வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விக்கும் படைப்பாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது, ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும். அனைவருக்கும் நன்றி
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது...
இப்படத்திற்காக நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்றதிற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜெகதீஷ், இப்படத்தை டீசரில் ஆரம்பித்து, சிங்கிள், டிரெய்லர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விழா எடுத்து, இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அவருக்கு என் நன்றிகள். அடுத்ததாக ஐஸ்வர்யா தத்தா, அவர் எனது நெருங்கிய நண்பர், இந்த படம் அவரால் தான் துவங்கியது, அவருக்கு என் நன்றிகள். ஷேன் நிகம் என்னை நம்பி இந்த படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நிஹாரிகா உங்களுக்கு ஒரு முறை தான், கதை சொன்னேன், என்னை நம்பி வந்ததற்கு நன்றி. கலையரசன் அண்ணன் உடன் நிறைய உரையாடினேன், மிகச் சிறந்த மனிதர் அவருக்கு என் நன்றிகள். நடிகர் கருணாஸ் என் வாழ்க்கையிலும் அவர் மிக முக்கியமான நபர், இந்தப் படத்தில் மிக சீரியஸ் ரொல் அதை மிக அழகாகச் செய்து தந்தார். இந்தப் படத்திற்காக என்னுடன் உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிகள். கண்டிப்பாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி.
நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது...
நான் ரொம்ப லக்கி, மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு நன்றி. என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. நடிகர் கலையரசன் மிக இயல்பானவர். பார்த்தவுடன் மச்சான் என அழைத்து, மிக இயல்பாகப் பழகுவார். அவ்வளவு எளிமையானவர். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவு தந்துள்ளார். இவரை விட வெகு வேகமாக வேலை செய்யும் ஒளிப்பதிவாளரை நான் சந்தித்ததே இல்லை. எடிட்டர் வசந்த் மிக அற்புதமாகப் படத்தை எடிட் செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி எஸ் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பான உழைப்பைத் தந்து இருக்கிறார்கள். நிஹாரிகா மிகச்சிறந்த கோ ஸ்டார் அவருக்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தா மிகவும் அப்பாவி, இவ்வளவு இன்னொசன்ஸாக ஒருத்தரை நான் பார்த்ததில்லை, மனதில் பட்டதைப் பேசுவார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படப்புகழ், இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ். இசையமைக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இந்த பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக, வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!
அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது: இப்படம் இசை மற்றும் விஷுவல் மாஸ்டர் பீஸ், ஃபேண்டஸி-ஹாரர்-திரில்லராக உங்களை மகிழ்விக்க ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்தியா வெளியீடாக வருகிறது.
தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக "அகத்தியா" இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல்
காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும், முழுமையாக உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இளையராஜாவின் சிக்னேச்சர் பியானோ இசைத் துண்டுடன் தொடங்கும் பாடல், ஒரு ஆத்மார்த்தமான மெல்லிசையாக மாறுகிறது, மறக்க முடியாத கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. மெல்லிசையில் வல்லவரான யுவன் ஷங்கர் ராஜா, பாடல் கேட்பவர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் வகையில், ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார். புகழ்பெற்ற ஸ்ரீதர் மாஸ்டரின் நடன அமைப்பும், தீபக் குமார்பதியின் அற்புதமான ஒளிப்பதிவும், இந்தப் பாடலைத் திரையில் உயிர்ப்பிக்கிறது. இப்பாடல் ஒரு உண்மையான காட்சி விருந்தாக அமைந்துள்ளது.
படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக முழுப் பாடலையும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு, பாடல் உருவாக்கும் தாக்கத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. இயக்குநரும் பாடலாசிரியருமான பா.விஜய் குறிப்பிடுவது போல், “இந்தப் பாடல் வெறும் மெல்லிசை அல்ல - இது ஒரு பயணம். இளையராஜா மற்றும் பீத்தோவன் இருவரின் புத்திசாலித்தனத்தின் சாரத்தை இது கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்த ஐடியாவை யுவனிடம் முன்வைத்தபோது, வெறும் 10 நிமிடத்தில் அவர் அந்த மேஜிக்கை செய்தார். இது காலத்தைக் கடக்கும் ட்யூன்கள் மற்றும் நவீன உணர்வுகளின் கலவையாகும், அது தந்த மகிழ்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை.
பாடல் குறித்த யுவனின் கருத்து.
பாடல் அனுபவம் குறித்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே சிறப்பான அனுபவமாகும். நாங்கள் 300 க்கும் மேற்பட்ட பாடல்களில் ஒன்றாக வேலை செய்துள்ளோம், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் உறவு தனித்துவமானது. என் தந்தையின் பியானோ இசைத்துண்டு மற்றும் பீத்தோவனின் ட்யூனை காற்றின் விரலில் இணைப்பது பற்றி அவர் என்னிடம் சொன்னபோது, நான் சிலிர்த்துப் போனேன். இந்த இரண்டு அற்புத இசையின் பாரம்பரியத்தால் வழிநடத்தப்பட்டதைப் போல, இந்த பாடல் சிரமமின்றி தானாக வந்தது. இது எனது சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன், மேலும் கேட்போர் இதைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
பாடல் குறித்து தயாரிப்பாளர் கருத்து
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் பாடல் குறித்து, உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டதாவது…: “அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், மேலும் இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் விரல் இந்தத் திரைப்படத்தின் மகுடம் - யுவனின் அசாதாரண இசையமைப்பு, அசத்தலான காட்சிகள் மற்றும் நடன அமைப்புடன் திரையில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இந்தப் படத்தை உருவாக்குவதில் காட்டப்பட்ட அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்றாகும்.
அகத்தியா: ஒரு கூட்டு அற்புதம்
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது முதல் சிங்கிளும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025 ஆம் ஆண்டில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 31, 2025ஐ உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்
மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது. டீசர், முதல் பார்வை, காற்றின் விரல் பாடல் என அனைத்தும், இப்படம் ஒரு விஷுவல் விருந்தாக இருக்குமென்பதை உறுதி செய்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதனையடுத்து படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார்- சிம்ரன் இணைந்து நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!
தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் "அகத்தியா" படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும், இந்த ஃபேண்டஸி திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த டீசர் அகத்தியா திரைப்பட மாயாஜால உலகத்தின் பரபரப்பான காட்சி அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. திகில், சஸ்பென்ஸ் ஜானரில் ஃபேண்டஸி கலந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை, புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ், படம் குறித்துக் கூறியதாவது...
“ஃபேண்டஸி-திகில் வகை ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக வசீகரித்து வருகிறது. - நமது கலாச்சாரத்தினை மிக ஆழமாகப் பிரதிபலிக்கும் அதே வேளையில், மிகவும் பிரபலமான உலகளாவிய பிளாக்பஸ்டர்களுக்கு போட்டியாக, ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த படம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
முன்னணி நடிகர் ஜீவா இப்படம் குறித்துக் கூறியதாவது...
"ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள், என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது மிக மிகப் புதிதானது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்லும்.
முன்னணி நட்சத்திர நடிகை ராஷி கண்ணா கூறியதாவது...
“நான் ஸ்கிரிப்டைக் கேட்ட கணம், கதையின் பிரம்மாண்ட உலகைக் கேட்டுச் சிலிர்த்துப் போனேன். அகத்தியா நான் முன்பு செய்த எந்தப் படத்தையும் போல் இல்லாமல், அசத்தலான காட்சிகள் மற்றும் நம்பமுடியாத இசை, பிரம்மாண்ட புதிய உலகம் எனப் பார்வையாளர்களைக் கண்டிப்பாகக் கவரும் என்று நம்புகிறேன்.
டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட , தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்), அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, மகத்தான படைப்பான "அகத்தியா" திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
சினிமா ஆர்வலர்களே தயாராகுங்கள், ஒரு முழுமையான ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்துச் செல்லும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான அகத்தியா திரைப்படம், ஜனவரி 31, 2025 அன்று வெளியாகிறது.
வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் (Tamil Film Active Producer Association), வெளிநாடுகளில் OTT தளத்தில் புகழ் பெற்ற TENTKOTTA நிறுவனமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
2020-ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் (TFAPA) இன்று 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தனது உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் திறம்பட செய்து வருகிறது. TFAPA-வின் TAMIL CINEMA TRADE GUIDE தமிழ் சினிமாவில் இயங்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டு வரப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ் பெற்ற TENTKOTTA OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது.
TFAPA-ம், TENTKOTTA OTT தளமும் இணைத்து, TFAPA-வின் உறுப்பினர்களுக்கு பயன் தரும் வகையில், ஒரு ஒப்பந்தத்தை தற்போது செய்து உள்ளனர். இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, TFAPA பரிந்துரை செய்யும், அவர்களின் உறுப்பினர்களின் புதிய திரைப்படங்களை, திரைப்படங்களின் தகுதியைப் பொறுத்து TENTKOTTA OTT நிறுவனம் மொத்தமாக விலை கொடுத்தோ (Outright price for 10 years) அல்லது குறைந்தபட்ச உத்தரவாதமாக ஒரு விலை கொடுத்தோ (MG Amount) அல்லது வருவாயில் பங்கு கொடுத்தோ (Revenue Share), TFAPA-வின் உறுப்பினர்களின் படங்களை TENTKOTTA OTT வாங்கும்.
TFAPA பரிந்துரைக்கும் அனைத்து புதிய திரைப்படங்களையும் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு முறையில் (Outright or MG or Revenue Share basis) TENTKOTTA OTT நிறுவனம் வாங்கும் என்று உறுதி அளித்துள்ளது. இதன் மூலம், TFAPA-வின் உறுப்பினர்களின் புதிய திரைப்படங்கள், TFAPA பரிந்துரைத்தால் கண்டிப்பாக TENTKOTTA OTT தளத்தில் வெளியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பரிந்துரைக்கப்படும் புதிய திரைப்படங்களை தகுதியின் (Merit)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
“எமகாதகி” படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி மற்றும் டீசர், டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்திரன்,ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ், நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான அந்த 10 வயது சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
படத்தின் கதை பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது,
"அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் . எப்போதும் துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள்.வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள்,மனிதர்களைப் புரிந்து கொள்வாள். யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது.பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பது படத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த 'துணிந்தவன்' படத்தின் கதை.
உன்னி நம்பியார் இசையில் விஜய் ஜேசுதாஸ் வைக்கம் விஜயலட்சுமி, சித்தாரா கிருஷ்ணகுமார் பாடல்களைப் பாடியுள்ளனர்.பாடல்களை நியூ மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முற்றிலும் புதிய தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தைத் தங்கள் படமாக எண்ணி உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை 'எஸ் எஃப் சி' எனப்படும் சாகரம் பிலிம் கம்பெனி ஆட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது ''என்கிறார் இயக்குநர்.
இப்போது மலையாளத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்காத நல்ல முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் 'சூட்சும தர்ஷினி', 'மார்கோ' போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன .அந்த நிலையில் இந்தப் படம் மலையாளத்தில் துணிந்தவன் என்ற பொருள் படும்படி 'ஒறும்பேட்டவன்' என்ற பெயரில் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது.
அதனைத் தொடர்ந்து தமிழில் 'துணிந்தவன் ' என்கிற பெயரில் 2025 ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்) 'துணிந்தவன்'January 3rd worldwide release.
அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- " எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். " என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.
படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது.
ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.
ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.
முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா