சற்று முன்

உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |    'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது   |    ‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!   |    யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!   |    1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா   |    ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!   |    ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்
Updated on : 24 July 2024

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில்  மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும்  இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.



 



400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு  ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் காணலாம். கோவிலில் சூரியக் கதிர்கள் விழும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இந்த அறிவிப்பு போஸ்டரில் கதாநாயகன் பழமையான கோவிலின் முன் நிற்பதைப் பார்க்கலாம். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கோவிலை வெறித்துப் பார்த்தபடி, துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டர் சுவாரஸ்யமாக இருப்பதுடன் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகும் உள்ளது.



 



லுதீர் பைரெட்டி கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, ஒரு அசத்தலான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.



 



இத்திரைப்படத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா