சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

பார்வையாளர்கள் இதுவரை கண்டிராத உலகத்தை பார்ப்பார்கள் - 'ஜமா’ பட இயக்குநர், நடிகர் பாரி இளவழகன்
Updated on : 29 July 2024

நோக்கம் தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கும்போது ஒரு இயக்குநர் சினிமா ரசிகர்களின் இதயங்களை வெல்வார். அத்தகைய வலுவான கதைக்களத்தைக் கொண்ட படங்கள் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படியான படமாக பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘ஜமா’ திரைப்படம் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று திரைக்கு வரவிருக்கிறது. 



 



இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் கூறும்போது, “’ஜமா' படத்தின் ஸ்கிரிப்டை எழுத முடிவு செய்தபோது, பார்வையாளர்களுக்கு திரையில் புதுவித அனுபவத்தை கொடுக்க விரும்பினேன். அங்கு அவர்கள் இதுவரை கண்டிராத உலகத்தை பார்ப்பார்கள். அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் பொருளையும் புகழையும் பொருட்படுத்தாது அவர்களது மகிழ்ச்சி, உணர்ச்சிகள், வலிகள் என அர்ப்பணிப்போடு இருக்கும் வாழ்க்கையைக் காட்ட விரும்பினேன். நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் இது போன்ற பல தெருக்கூத்து கலைஞர்களின் எதிரொலி அல்ல, அவர்களை நாம் புரிந்து கொள்வதற்கான வழி இது. நான் படத்தைப் பற்றி மேலும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், திரையரங்குகளில் இருந்து வெளியேறும் போது ’ஜமா’வின் உணர்ச்சிகரமான அனுபவங்களை பார்வையாளர்கள் வீட்டிற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தின் உணர்ச்சிகளையும் மதிப்பையும் உயர்த்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார். 



 



’ஜமா’வில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் உள்ளனர். 



 



இப்படத்தை பரி இளவழகன் இயக்கி இருக்கிறார் மற்றும் முன்பு ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் ஆகஸ்ட் 2, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா