சற்று முன்
சினிமா செய்திகள்
திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய 'போகுமிடம் வெகு தூரமில்லை' படக்குழுவினர்!
Updated on : 28 August 2024
Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர் திரையரங்கம் சென்று மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மக்களின் ஆதரவுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகள்
மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்
தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், '96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்'' என்றார்.
45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.
ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார். ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும் பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “ படமும் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.
இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..
இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!
இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளமாக INDIAN FILM MARKET தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான் INDIAN FILM MARKET தளம் உருவாகியுள்ளது.
இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market) தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர் என்பதால், “படத்தை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக மாடலாக மாற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமாவில் கண்டெண்ட் தான் ராஜா. அந்த கண்டெண்டை உயர்த்த, சரியான நடிகர்கள் மற்றும் சரியான தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். எங்கள் தளத்தின் மூலம், தயாரிப்பாளர்களுக்கு வலுவான, சந்தைத் தரமான கதைகளையும், தயாரிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கி, ஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய எங்கள் குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில், இந்திய சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார்.
INDIAN FILM MARKET வழங்கும் முழுமையான சேவைகள்:
• கதை தேர்வு & திரைப்பட படைப்புக்கான ஆலோசனை
• பட்ஜெட்டிங் & திட்டமிடல்
• தயாரிப்பில் A–Z வரை படைப்பை நிறைவேற்றுவதற்கான உதவிகள்
• மார்க்கெட்டிங் திட்டம் & புரமோசன் மேற்பார்வை திட்டங்கள்.
• ரைட்டர்ஸ் ரூம் மூலம் புதிய படைப்பாளிகளுக்கான உதவிகள்.
• தியேட்டர், ஆடியோ, OTT, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை
மேலும் அவர் கூறுகையில்
இந்திய சினிமாவை உலகளவில் வளர்க்க, ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள குழுக்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகம் முழுவதும் மிக உயர்ந்த தரத்திலான படப்பிடிப்பு தளங்களும், அரசாங்க மானியங்களும் படைப்பாளிகளுக்கு பெற்றுத் தருவோம் . மேலும், இந்திய படங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகள் கலாசார பரிமாற்றத்தையும், பரந்த விநியோக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்து வரும் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் INDIAN FILM MARKET விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து துறைகளிலும் புதியவர்களுக்கு மிகப்பெரிய மேடை அமையும்.
நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்பத் துறைகளிலும் புதிய திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதில் எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. இளம் படைப்பாளர்களுக்கு பொருத்தமான வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய திரைப்பட உலகிற்கு வலுவான, எதிர்காலத்திற்கு படைப்பாற்றலில் சிறந்த சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
புதிய இளம் படைப்பாளிகளுக்கு, “ரைட்டர்ஸ் ரூம்” உருவாக்கி அதன் மூலம் திரைக்கதை உருவாக்குவதற்கான உதவிகளும், அதை விற்பனை செய்வதற்கும் அதை திரைப்படமாக்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும்.
புதிய தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒவ்வொரு படமும் லாபகரமானதாக மாறும் எதிர்காலத்தையும், இந்திய சினிமாவின் உலகளாவிய பெருமையையும் நாம் இணைந்து உருவாக்கலாம்.
INDIAN FILM MARKET — இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய சக்தி.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.
இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
நடிகை ஷில்பா பேசியதாவது..,
வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம். சத்யராஜ் சாருடன் நடித்தது மிக இனிமையான அனுபவம். ஷாட் சொன்னால் அடுத்த நொடி அவர் அங்கு இருப்பார். அவரிடம் நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன். கார்த்தி உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரை விட்டால் வேறு யாரும் இந்த ரோல் செய்ய முடியாது. அந்தளவு அசத்தியிருக்கிறார். கீர்த்தியை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். இந்த ப்ராஜெக்ட் அழகாக எடுத்துள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பேசியதாவது..,
இது எனக்கு ஸ்பெஷலான படம். என் அப்பா எம் ஜி ஆர் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவருடன் வேலை பார்க்க முடியாது, ஆனால் அது இந்தப்படத்தில் நிறைவேறியுள்ளது. படத்தில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளது, அதைச் சொல்ல முடியாது. நான் நிறைய தயாராகி வந்தால், கார்த்தி சார் அவர் அப்பாவிடம் நிறையக் கேட்டுவிட்டு வருவார். அவர் கடினமாக உழைத்துள்ளார்.இந்தப்படத்தில் வேலை பார்த்தது பெரும் மகிழ்ச்சி. ஞானவேல் ராஜா நிறைய உழைத்துள்ளார். படம் வெற்றி பெற வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன் நன்றி.
ஜி எம் சுந்தர் சார் பேசியதாவது..
இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலை கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ், அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார். ஞானவேல் சார் உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் "காதலும் கடந்து போகும்" படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார். அவருக்கு நன்றி. சத்யராஜ் சார் என்னை பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்தார் அதற்காக அவருக்கு நன்றி. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
பல்லவி சிங் பேசியதாவது..,
வா வாத்தியார் படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். நலன் சாரிடம் வேலை பார்த்தது எப்படி இருந்தது என அனைவரும் கேட்டனர். அவர் என்னிடம் முழு சுதந்திரமாகப் புதிதாக செய்யச் சொன்னார். முழுதாக புதுமையாகச் செய்ய வாய்ப்பு தந்தார். நலனின் விஷனுக்கு உருவம் தந்துள்ளோம் இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம், சிவக்குமார் எனக்கு அண்ணன் மாதிரி தான், கார்த்தி சார் இந்தக்கதையை ஒத்துக்கொண்டதற்கு அவர் தான் காரணமாக இருப்பார். ஏனென்றால் எம் ஜி ஆருடன் அதிகம் பழகியது அவர் தான். அதற்காக அவருக்கு நன்றி. நலனிடம் இந்தப்படத்தைத் தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்யுங்கள் என்றேன், அதை இந்த தேர்தலில் செய்துள்ளார். எனக்கு ஸ்பெஷல் கேரக்டர், அதைப்பற்றிச் சொல்ல மாட்டேன், ஆனால் அவர் சொன்ன அளவுக்குச் செய்துள்ளேன் என நம்புகிறேன். சத்யராஜ் சார் எம் ஜி ஆர் தந்த கர்லாக்கட்டையைத் தந்து படத்தில் இதை பயன்படுத்தி நடித்து விட்டுத் திரும்ப கொடுத்திவிடனும் என்றார். அதைத் தூக்கவே முடியவில்லை. எம் ஜி ஆரின் தீரம் அப்போது தான் புரிந்தது. கார்த்தி அருமையான நடிகர், அவருடன் தான் எனக்கு நிறையக் காட்சிகள், அவர் எனக்கு அண்ணன் குழந்தை போலத் தான், சூர்யா, ஜோதிகா எல்லோரும் அப்படித்தான். உங்களுக்குப் பிடித்த மாதிரி நலன் இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,
இங்கே நிறையப் புரட்சித் தலைவர் ரசிகர்கள் வந்திருப்பீர்கள். எங்க வீட்டுப் பிள்ளை கார்த்தி இப்படத்தில் எம் ஜி ஆராக நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. நான் தீவிர வாத்தியார் ரசிகர் ஆனால் நான் வில்லன் ஆனால் ஆனந்த்ராஜ் ரசிகராக நடித்துள்ளார். ஆனால் எம் ஜி ஆர் டயலாக் எல்லாம் சொன்னால் அவரால் என்ன படம் என சொல்ல முடியாது.
தொடர்ந்து எம் ஜி ஆர் பட வசனங்களை விடாமல் பேசி பட வசனங்களைப் பேசி ஆனந்த்ராஜிடம் படப்பெயர் சொல்லச் சொல்லி அவருடன் நகைச்சுசையாக விளையாடினார்.
மேலும் அவர் பேசுகையில்.., நான் எம் ஜி ஆரின் அரக்கத்தனமான ரசிகன். எப்போதும் ஒரே புரட்சித் தலைவர் தான். அவர் ரோலில் எங்க வீட்டுப்பிள்ளை கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. வேறு யாரவது நடித்திருந்தால் வயிறு புகைச்சலாகியிருக்கும். ஆனால் கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது..,
என்னுடைய திரைப் பயணத்தில் மிக முக்கியமான அழகான தருணம் நலன், ஶ்ரீனிவாஸ் கவினை சந்தித்தது தான். அவர் படம் வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படம் அறிவித்த போது போன் செய்து, கெஞ்சி, நான் செய்கிறேன் என வாய்ப்பு வாங்கினேன். நிஜ வாழ்வு சூப்பர்ஹீரோ என எம் ஜி ஆரை சொல்லாம். அவர் வாழ்க்கையை அவர் ஆளுமையைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம். நிறைய உழைத்து இசையைத் தந்துள்ளோம். சத்யராஜ் சார் படத்தில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தக்கதை கேட்ட போது, கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு புது திறப்பாக இருக்குமெனத் தோன்றியது. இசையமைத்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரஞ்சித், நலன், கார்த்திக் சுப்புராஜ், என இவர்கள் எல்லாம் சினிமாவுக்குள் வரக்காரணமாக இருந்த ஞானவேல் சாருக்கு நன்றி. இந்தப்படம் பிடித்திருந்தால் எல்லோரிடமும் சொல்லுங்கள் நன்றி.
திங்க் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,
வா வாத்தியார் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படத்தின் ஆரம்பத்திலேயே இப்படத்தில் இணைந்து விட்டோம், பாடல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. நலனின் சூது கவ்வும் படத்தில் இணைந்திருந்தோம், அது பிளாக்பஸ்டர் ஆல்பம். அது போல இந்தப்படப் பாடல்களும் வெற்றி பெறும். இப்படம் கொஞ்சம் பார்த்தேன், படம் அருமையாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன் பேசியதாவது..,
திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள் ஆனால் எனக்கு அது கார்த்தி சார் தான். என் திரை வாழ்க்கையில் அவரது 27 படங்களில், கிட்டதட்ட 15 படங்கள் வரை செய்துள்ளேன் எனக்கு நிறையத் திருப்பம் தந்துள்ளார். கார்த்தி சார் அவர் படங்களில் சின்ன சின்ன விசயத்திற்கும் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார். அவர் எம் ஜி ஆரை எடுத்து நடிக்கும் போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார் எனத் தெரியும். ஞானவேலின் அப்பா தீவிர எம் ஜி ஆரின் ரசிகர். அவர் எடுத்திருக்கும் படம். அவருக்குச் சமீபத்தில் நிறையப் பிரச்சனை வந்தது. சூர்யா சார் கூப்பிட்டு இதைச் செய்து, உன் பிரச்சனையை தீர்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார். வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல் ஒரு ஹீரோ இல்லை. வா வாத்தியார் படம் மூலம் ஞானவேல் சாருக்கு எல்லாம் மாறும். நலன் இரண்டு படம் செய்துள்ளார். இரண்டுமே கல்ட் படம். வா வாத்தியார் ரிலீஸான மறுநாளே கல்ட் படம் எனச் சொல்லி விடுவார்கள். வா வாத்தியார் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்குமென நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் R ரவிக்குமார் பேசியதாவது..,
நலன் சார் இயக்குநர் குழுவிலிருந்தவன் நான், சூது கவ்வும் படத்தில் வேலை பார்த்தேன். அவரிடம் இருந்து தன்மையாக எப்படி நடந்து கொள்வது எனக் கற்றுக்கொண்டேன். வா வாத்தியார் படம் நான் பார்த்து விட்டேன், நலன் சாரிடம் கார்த்தி சார், எம் ஜி ஆர் மாதிரியே தெரிகிறார் எனச் சொன்னேன். எம் ஜி ஆருக்கு வாழ்க்கை வரலாற்று படமெடுத்தால் அதற்குப் பொருத்தமானவர் கார்த்தி சார் தான். மிக அற்புதமான படமாக வந்துள்ளது. நலன் சாருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம். இந்தப்படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்த படம். சில படங்கள் ஈஸியாக கதை சொல்லிவிடலாம் ஆனால் இது கதை சொல்லவே கஷ்டப்பட வேண்டும். நலன் அதை அழகாக எடுத்துள்ளார். அவர் முதல் இரண்டு படங்களில் விநியோகத்தில் இணைந்திருந்தோம். இப்போது மூன்றாவது படத்தைத் தயாரித்திருக்கிறோம். கார்த்தி சார் மெய்யழகன் கதாபாத்திரத்தைச் செய்வது கடினம் எனப் பலர் சொன்னார்கள் ஆனால் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அதே போல் இந்தப்படத்திலும் அட்டகாசமாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். கார்த்தி ரசிகர்களுக்கும் அவர்கள் ரசிக்கும் படமாக இருக்கும். வாத்தியார் ஆசி இப்படத்திற்கு உள்ளது, அவரது ஆசியில் இப்படம் வெற்றிப்படமாக அமையுமென நம்புகிறேன் நன்றி.
நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம். தமிழில் பேச முயற்சிக்கிறேன். இந்தப்படத்தில் தமிழ் மக்களுக்கு அறிமுகமாவது மகிழ்ச்சி. நலன் சாருக்கும், ஞானவேல் சாருக்கும் நன்றி. இந்தப்படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இந்தப்படத்தில் நடிக்கும் போது டபுள் ஷிப்ட்டில் நடித்துக்கொண்டிருந்தேன், ஒரு நாள் செட்டில் தூங்கி விட்டேன் ஆனால் எனக்காகச் சத்தம் போடாமல் லைட் செய்தார்கள் அதற்காக அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. நலன் சார் உடன் வேலை பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடிக்கும்போது சின்ன சின்ன விசயங்களையும் கவனித்துப் பாராட்டினார். சத்யராஜ் சார் ரசிகை நான் ஆனால் அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை. அது வருத்தம் தான். என் குடும்பத்தில் பலர் சிவக்குமார் சார் ரசிகர்கள் தான். எனக்குத் தமிழ் ரசிகர்கள் தரும் அன்பு பெரிய மகிழ்ச்சி தருகிறது. கார்த்தி சார் மிகப்பெரிய ரசிகை நான், அவரை ஷீட்டிங்கில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன். அவருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது..,
9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள், அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம். தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன். அது தான் இந்தப்படம். இந்தப்படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி. ஞானவேல் ராஜா, கார்த்தி இருவருக்கும் நன்றி. கார்த்தி மிக அழகாக கதாப்பாத்திரத்தில் பொருந்திப்போய்விட்டார். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் இந்தப்படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நலனுக்கு தான் நிறைய இயக்குநர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார். இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன். நலன் 70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார் அதை தன் ரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி ஒரு மனிதர் இருந்தார் என வியக்க வைத்தவர். “இருந்தாலும் பிரிந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம். அவர் ரசிகர்கள் அன்புடன், அவர் ரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே ரசிகர்களுக்காகத் தான் இந்தப்படத்தில் நடித்தேன். நலன் அவரைப்பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும். மலையாளம் போல நம் தமிழ் சினிமாவில் இல்லையே எனத் தோணும். நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும். அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக மொட்டை பாஸாக நடித்துள்ளார். ராஜ்கிரண் ஒரு எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார். கிருத்திக்கு முதல் தமிழ்ப்படம் சூப்பராக நடித்துள்ளார். சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம். நம் தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இந்தப்படம் இருக்கும். ஞானவேலுக்கு இந்தப்படம் பெரிய லாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரின் கூட்டணியின் மாயாஜாலத்தைத் திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர
அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்..,
நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது, இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம், அதனால் தான் இந்தப்படத்திற்கு 'மொய் விருந்து' என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா என்றார்.
பாலுமகேந்திராவின் "வீடு" படப்புகழ் 'ஊர்வசி' அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் மற்றும் கொட்டச்சி உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள், பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.
‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள்.
24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள் —ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்றது என்று நினைக்கும் மனிதன் அவன். அறிவியல் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? காதலின் மொழியை அறிவியல் மொழிபெயர்க்க முடியுமா? என்பதைக் கேட்கும் ஒரு இனிமையான, சுவாரஸ்யமான பயணம் இதுவாகும்.
நடிகர் குரு லக்ஷ்மன் கூறியதாவது..,
“சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’ ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.”
பாதினி குமார் கூறியதாவது..,
“சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்—தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது.”
ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் பிசினஸ் ஹெட் மற்றும் SVP மார்க்கெட்டிங் சவுத் லாய்டு சி சேவியர் கூறியதாவது..,
‘ஹார்டிலே பேட்டரி’ அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது. புதிய கதைக்களங்களையும் உணர்ச்சிமிக்க காட்சிப்படுத்தல்களையும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்றுள்ளனர். இந்த சீரிஸில் இருக்கும் புதுமையும், உணர்வுகளும் ஒருங்கிணைந்து, இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கும்.”
டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!
பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும்.
இந்தக் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியானது முதலே, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. இன்று நடைபெற்ற பூஜை நிகழ்வில் படத்தின் நாயகி நஸ்ரியா நசீம், மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரம் நஸ்லென், நடிகர் ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜோதிகா, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, ராஜசேகர் பாண்டியன் (2D என்டர்டெயின்மென்ட்), எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
பூஜை முடிந்த கையோடு, படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கியது.
இப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசும் போது, "புதிய திரைத்துறை, புதிய ஆரம்பம், அதுவும் சூர்யா சார் போன்ற ஒரு பெரும் நட்சத்திரத்துடன் இணைவது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. புதிதாக ஒன்றை முயற்சிக்கிறோம். நாங்கள் கொடுக்கவிருக்கும் இந்தப் புதுமையை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.
மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது.
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.
1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் பணியாற்றினார்.
1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படையப்பா படம் அன்றைய காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன், புத்தம் புது பொலிவுடன், தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!
Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.
தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
'ஏத்து', 'மெகரினா', 'மயிலே', 'டிங்கா', 'ஜிகர்' என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின் பாடல்களின் அறிவிப்பிலும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூன்வாக் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்: “மியூசிக்கில் ஏ. ஆர். ரஹ்மான் சார் , டான்ஸில் பிரபுதேவா சார் இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். இந்த தலைமுறை ரசிகர்களுக்குத் அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சி தான், 'மூன்வாக்' திரைப்படமாக உருவானது. இதில் இசைக்கும் நடனத்திற்கு குறைவே இருக்காது. 3 வருடங்களாக உருவாக்கிய இந்த திரைப்படம் 2026 கோடையில் வெளியாகவுள்ளது. இது முழுமையான காமெடி கொண்டாட்டமான படம். திரையரங்குக்கு வரக்கூடிய குடும்ப ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே இதன் நோக்கம்.
இப்படத்தில் 'ஏத்து', 'மெகரினா', 'மயிலே', 'டிங்கா', 'ஜிகர்' என மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. நானும் ரஹ்மான் சார் -ம் பேசும்பொழுது இந்த ஐந்து பாடல்களும் மக்களுக்கு சந்தோசத்தை மட்டும் கொடுக்கவேண்டும் என எண்ணினோம். முதலில் இந்தியாவின் ஒரு பெரிய பாடகரைப் பாட வைத்து அந்த பாடலை பதிவு செய்தார். ஆனால், இது ரஹ்மான் சாருக்காகவும், பிரபுதேவா சாருக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படம். அதில் அவர் குரலைத் தவிர யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அவரது குரலே மக்களுக்கு முழுமையான உற்சாகத்தை கொடுக்க கூடியது. நான் விடாமல் நான்கு மாதங்கள் முயற்சித்து நீங்கள் தான் பாட வேண்டும் எனக் கேட்டு கொண்டே இருந்தேன். இறுதியில், இந்த ஐந்து பாடல்களையும் ஏ. ஆர். ரஹ்மான் சார் தான் பாடியுள்ளார்." அவருக்கு நன்றி என்றார்.
பிரபுதேவா மாஸ்டர் இருப்பதால் நடனத்திற்கு முழு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து உழைத்து இருக்கிறோம். பிரபுதேவா சார் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு வாரம் ரிகர்சல் செய்துள்ளார். 'மயிலே' பாடலுக்கு மட்டும் ஒரு மாதம் ரிகர்சல் செய்தார். முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார். 'மயிலே' பாடலுக்காக ஒரு முழு உலகத்தை CG-யில் உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் உண்டு, அவர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்”
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கூறுகையில்: “பிரபுதேவாவுடன் மீண்டும் பணிபுரிவது மகிழ்ச்சி. அப்போதைய பிரபுதேவாவுக்கும், இப்போதைய பிரபுதேவாவுக்கும் ஒரே வித்தியாசம் 'கொஞ்சம் நரைச்ச முடி மட்டும் தான்' என நகைச்சுவையாகக் கூறினார். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே உள்ளது. அவர் ஆடுவதைப் பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை கண்டதில்லை. அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது.
இசையமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வுச்செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. மனோஜ் என் பரிந்துரைகளை ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு பாடலுக்கும் இந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என உறுதியாக இருந்தார். இறுதியில் எல்லா பாடல்களுக்கும் அதே கூற, நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் எல்லா பாடல்களையும் பாடிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன். மனோஜின் முகத்தில் தெரிந்த அன்பும், பிரபுதேவாவுடன் என் கூட்டணியை அதே எனர்ஜியுடன் திரையில் மீண்டும் கொண்டுவருவேன் என்ற மனோஜின் ஆர்வம் மற்றும் உற்சாகத்திற்காகவே இந்த திரைப்படத்திற்கு சரி என்று சொல்லிவிட்டேன். கதை கூட நான் கேட்கவில்லை."
நடனப்புயல் பிரபுதேவா கூறுகையில், "என் திரை பயண தொடக்கத்திலிருந்தே ரஹ்மான் சாரின் இசை எனக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் மூன்வாக் படத்தை ரசித்து மகிழ்வதை காண, நான் மிக ஆர்வமாக உள்ளேன்".
ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக அடுத்து வருடம் 2026 கோடை விடுமுறை வெளியீட்டுக்கு உருவாகி வருகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













