சற்று முன்
சினிமா செய்திகள்
32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!
Updated on : 06 September 2024
நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகிறார். நானியின் கேரக்டரைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமாவின் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், டாக்டர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார்.
Hunter's Command என பெயரிடப்பட்ட கிளிப், ஒரு HIT அதிகாரி பனி மலைகளில் காரை ஓட்டுவது மற்றும் ஒரு ஜோடி போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்துவது போன்ற ஒரு புதிரான குறிப்பில் தொடங்குகிறது. HIT அதிகாரி ஆபத்தில் இருப்பதாக ஒரு அதிகாரி மற்றவரை எச்சரிப்பதால் நம் பதற்றம் அதிகரிக்கிறது. HIT அதிகாரியே ஆபத்தானவர் என்றும் அவர் பெயர் அர்ஜுன் சர்க்கார் என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார். அர்ஜுன் சர்க்கார் கெட் செட் அண்ட் கோ என்று சொல்லும் உச்சரிப்புடன் வீடியோ முடிவடைகிறது.
நானி சுருட்டு புகைக்கும்போதும், காரை ஓட்டும்போதும் ரத்தம் தோய்ந்த கைகள் மற்றும் கோடரியுடன் ஸ்டைலாகவும், கொடூரமாகவும் தோன்றுகிறார். அர்ஜுன் சர்க்காராக அவரது சித்தரிப்பு மிரட்டல்லாக இருக்கிறது. அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் பெயர் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் போலவே சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது.
முன்னதாக HIT பட வரிசையை இயக்கிய டாக்டர் சைலேஷ் கொலானு ஹிட் : கேஸ் 3 படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களைத் தாண்டி இன்னும் ஸ்டைலான, பிரமாண்டமான படமாக இருக்குமென்பதை டீசர் உறுதி செய்கிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பூட்ட்டுகின்றன, அதே சமயம் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மட்டும் செய்து வரும் மிக்கி ஜே மேயர் தனது துடிப்பான இசை மூலம் டீசரின் தீவிரத்தை உயர்த்துகிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீ நாகேந்திரா தங்கா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
HIT தொடரின் மூன்றாம் பாகத்தில் அர்ஜுன் சர்க்காரின் கதாபாத்திரம் எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை சொல்லும் இந்த டீசர் உண்மையிலேயே மிரட்டலாக இருக்கிறது.
மே 1, 2025 அன்று கோடையில் HIT 3 திரையரங்குகளில் வரும் என்று வீடியோ மூலம் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'
இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன், பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசுகையில், ''நான் முப்பது வருடங்களாக இசைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், 'ஆட்டோகிராப்' படத்திற்கு இசை அமைத்த அனுபவம் மறக்க முடியாதது. பாடல் வரிகளுக்கும், உணர்வுகளுக்கும் இசையில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அமைந்தன. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேரன். என்னுடைய இசையில் வெளியான பாடல்களின் ஹிட் லிஸ்டில் 'ஆட்டோகிராப்' பட பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இதற்காக இந்த தருணத்தில் சேரனுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டோகிராப்' படம் ரீ ரிலீஸ் என்றவுடன், அதில் 'ஞாபகம் வருதே...' என்ற என்னுடைய குரலை கேட்டவுடன் எனக்கு பழைய நினைவுகள் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன. 'ஞாபகம் வருதே...' பாடலை சேரன் தான் எழுதினார். முதன்முதலாக நடைபெற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டு, அவற்றை அழகாக கோர்த்து, பாடலாக்கினார். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ''நான் சேரன் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்த போது அவர் ஒரு முறை 'பாரஸ்ட் கம்ப்' என்ற படத்தை பார்த்தார். இதேபோல் ஒரு கதையை எழுத வேண்டும் என்று எங்களிடம் சொன்னார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எங்களிடத்தில் 'ஆட்டோகிராப்' படத்தின் கதையை சொன்னார். அவருடன் அலுவலகத்தில் ஒன்றாக தங்கி இருந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவருடைய கோபம், பாசம், வருத்தம், துக்கம் என எல்லாவற்றையும் ஜெகனுடனும், என்னுடனும் பகிர்ந்து கொள்வார்.
இந்தப் படத்தில் அனைவரும் புதிதாக இருக்கிறார்கள் . படத்திற்கு கமர்ஷியல் முகம் வேண்டும் என்பதற்காக நடிகை சினேகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தக் கதை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல் நடிகர் விஜய்க்கு சென்றது. அதன் பிறகு நடிகர் பிரபு தேவாவிடம் சென்றது. அதன் பிறகு அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆட்டோகிராப் படத்தில் சேரன் நடிக்க வேண்டும் என ஒருபோதும் அவர் விருப்பப்படவில்லை. ஆட்டோகிராப் என்னும் கதை தான் அவரை நடிகராக உள்ளிழுத்துக் கொண்டது. அவர் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் நானும், சிம்பு தேவனும் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். படம் வெற்றி பெற்ற பிறகு சேரன் மற்றும் இதர உதவியாளர்கள் என்னை அர்த்தத்துடன் பார்த்தனர். எங்கள் இயக்குநர் எத்தனையோ அசிங்கங்கள், அவமானங்கள் பட்டாலும் அந்தப் படத்தை நேர்மையாக கடினமாக உழைத்து உருவாக்கினர். இயக்குநரான பிறகு தான் அதனுடைய கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரிந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து படங்களிலும் அவருடைய பாதிப்பு இருக்கும். அவருடைய பாதிப்பில்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது. இந்தப் படத்தை இந்தக்கால இளைய தலைமுறையினரும் கொண்டாடுவார்கள்,'' என்றார்.
நடிகர் ஆரி பேசுகையில், ''இங்கு பேசிய அனைவரும் சேரனுக்கும், அவர்களுக்குமான நட்பையும் , உறவையும், அன்பையும் பேசினார்கள். அவருடைய உறவினர் ஒருவர் கொடுத்த கடிதம் தான் எனக்கும், அவருக்குமான அறிமுகம். அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். படத்தின் பணிகள் தொடங்கும் போது அழைப்பு விடுக்கிறேன் என்றார். அவர் ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் அவரை மீண்டும் தொடர்பு கொண்டேன்.
அப்போது நான் ஜிம் டிரைனர். அதனால் சிக்ஸ் பேக் உடல் தோற்றத்தையும் ட்ரெயினராக மாறிய போது உடல் எடை கூடிய தோற்றத்தையும் அவர் பார்த்தார். அப்போது அவர் நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், என கேட்டார். நான் ஜிம் டிரைனர் என்று சொன்னேன். அதன் பிறகு நான் ஒரு படத்தில் நடிக்கிறேன். நீ புகைப்படத்தில் காட்டியது போல் என்னாலும் மாற முடியுமா, எனக் கேட்டார். மாற முடியும் என்று சொன்னேன்.
நான் கேள்விப்பட்டவரை அந்த காலகட்டத்தில் ஒரு கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்வது கமல்ஹாசன் ஒருவர் மட்டும்தான். அதன் பிறகு நடிகர் விக்ரம் அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார். சேரன் அதே போல் விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கேட்டபோது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்குமே என்பதால் அவருடைய ஜிம் டிரெயினராக மாறினேன்.
அவருடைய ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. அவரிடம் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம் அவருடைய நினைவுத்திறன். படப்பிடிப்பு நடந்த தருணங்களில் என்னை கேரளாவிற்கு அழைத்துச் சென்று அங்கு எனக்கென்று தனியாக ஒரு அறையை ஒதுக்கி அவரும் நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வார். அந்த தருணத்தில் கிடைத்த ஓய்வில் தான் இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டு முடித்ததும் இந்த படம் ஹிட் ஆகிவிடும், ஏனென்றால் நானும் ஒரு லவ் ஃபெயிலியர் கேஸ் தான் என்றேன்.
'ஆடும் கூத்து' என்ற படத்தில் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் இரண்டு வரி டயலாக் தான். அதை என்னால் பொருத்தமாக பேச முடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு முதலில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து கூத்துப்பட்டறைக்கு சென்றேன். அதன் பிறகு நடிப்பை கற்றுக்கொண்டு இன்று இந்த மேடை வரை வந்ததற்கு காரணம் இயக்குநர் சேரன் தான்.
இன்று சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்புகளை வழங்குகிறார் என மாரி செல்வராஜ் கொண்டாடப்படுகிறார். ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பே 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் சாதியம் சார்ந்து சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்பை கொடுத்தவர் சேரன்.
அதேபோல் ஆட்சியின் நிறை குறைகளை பற்றி 'தேசிய கீதம்' படத்தின் மூலம் துணிச்சலுடன் சொன்ன இயக்குநரும் சேரன் தான்.
இன்று காதலைப் பற்றி இளைய தலைமுறை ஜாலியாக குறிப்பிடுகிறார்கள். 'எனக்கு ரெண்டு பிரேக்கப் மச்சான்'. 'நாலு பிரேக்கப் மச்சான்' என்று சொல்கிறார்கள். ஒரு காதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்த படம் தான் ஆட்டோகிராப். ஒரு காதலுடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த ஏராளமான இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வந்தவுடன் மற்றொரு காதல் வரும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியது. காதல் தொடர்கதை தான் என்ற விசயத்தை சொன்ன படம் ஆட்டோகிராப்.
இங்கு மேடையில் இயக்குநரை பற்றி அவருடைய உதவியாளர்கள் தங்களுடைய எண்ணங்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள் என்றால் அதற்கும் காரணம் இயக்குநர் சேரனின் ஜனநாயக தன்மை தான். இதை நான் மனதார பாராட்டுகிறேன்.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் தவறாமல் பதிவிடுங்கள். ஏனெனில் இது போன்ற படங்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்,'' என்றார்.
இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ''சேரனுக்கு இசை மீது ஆர்வம் அதிகம். எல்லா விஷயங்களையும் நுட்பமாக பார்ப்பார். 'பொக்கிஷம்' படத்தில் 'நிலா அது வானம்...' எனும் ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடலில் நாயகி ஓடி வந்து ஓரிடத்தில் நிற்கும் போது அவர் மூச்சிரைப்பு சப்தம் இருக்கும். இந்த பிரத்யேக சப்தத்தை பாடலில் இணைக்கும் போது நடைபெற்ற ஒரு சிறிய தவறை கூட நுட்பமாக கண்டுபிடித்து மாற்றி அமைத்தார்.
ஆட்டோகிராப் திரைப்படத்தை நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பாக பார்த்தோம். இசையில் எந்த மாற்றமும் தேவையில்லை என சொன்னேன் ஆனால் அவர் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனால் சில மாற்றங்களை செய்து இருக்கிறோம். இது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,'' என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், ''ஆட்டோகிராப் என்ற படமே ஒரு மனிதனின் பழைய நினைவுகளை பற்றிய கதை தான். அந்த படத்தைப் பற்றி 21 ஆண்டுகள் கழித்து பேசும்போது சேரனை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். சேரனுடைய உதவியாளர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்.
அவர் ஆட்டோகிராப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது நான் கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது ஆட்டோகிராப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் அவர் கண் கலங்கி பேசினார். அந்த தருணத்தில் அவரைப் பற்றி தெரியுமே தவிர நெருங்கிய தொடர்பு இல்லை. அப்போது அவரிடம் நான் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்யலாமா எனக் கேட்டேன். அதை அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு ஆட்டோகிராப் வெற்றி விழாவிற்கு பிறகு சேரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
சேரன் பொதுவாக பெண்களை நன்றாக பார்த்துக் கொள்வார். ஏனெனில் சேரன் அக்கா, தங்கை, சித்தி, தோழி என ஏராளமான உறவுமுறை சார்ந்த பெண்களுடன் பேசி பழகியவர். அவருக்கு அண்ணன், தம்பி போன்ற உறவுகள் அதிகம் இல்லை. அதனால் சேரன் பெண்களிடம் அதிகமாக பழகியவர். அந்த உணர்வு சேரனிடம் எப்போதும் இருக்கும். இதனை நான் அவருடன் பழகிய பிறகு உணர்ந்து கொண்டேன்.
எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்வதென்று தெரியவில்லை ஏனெனில் எனக்கும் சேரனுக்கும் அப்படிப்பட்ட உறவு நீடிக்கிறது.
சேரன் தமிழ் சினிமாவில் சாதித்த கலைஞர், தவிர்க்க முடியாத கலைஞர், மக்கள் கலைஞர். மகத்தான கலைஞன். சேரனின் அலுவலகத்திற்கு செல்லும் போது அவருக்கு பின்னால் இருக்கும் விருதுகளை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும். தேசிய விருது, மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது.என அடுக்கி வைத்திருப்பார். பாலச்சந்தருக்கு பிறகு நான் நிறைய விருதுகளை பார்த்தது சேரனிடம் தான்.
சேரனிடம் பணியாற்றிய உதவியாளர்கள் இங்கு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கான அடையாளத்தை வழங்கியது சேரன் தான்.
சேரனுடைய முதல் படத்தை எங்கள் ஊர் திரையரங்கத்தில் பார்த்தவன் நான். அதன் பிறகு அவருடைய வெற்றியை பார்த்தேன். நானும், இயக்குநர் பாலாவும் சாலிகிராமத்தில் ஒரு அறையில் தங்கி இருந்த போது அங்கு சேரன் வருவார். அவருடைய பார்வை தான் சண்டியர் போல் இருக்கும். ஆனால் அவர் மென்மையான மனதுடையவர்.
அவருக்கும், எனக்கும் நிறைய கருத்து முரண் இருந்தாலும் அவருடனான நட்பும் உறவும் தொடர்கிறது. அவரிடம் ஒரு அன்பு இருக்கிறது. அவர் எல்லாவற்றையும் எளிதாக மறந்து விடுவார்.
அவர் இன்றும் தன் மனதை இளமையாக வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆட்டோகிராப் போன்றதொரு படத்தை வேறு யாராலும் உருவாக்க முடியாது. இந்தப் படத்தை பார்த்தால் ஒருவருக்கு எப்போதும் அவருடைய கடந்த காலத்தை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பு இது.
இந்தப் படம் தான் வேறு வெர்ஷனில் 'பிரேமம்' ஆக வெளியானது. இப்போதும் இந்த ஜென் ஜி தலைமுறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்தப் படம் சேரனுக்கு பொருளாதார ரீதியாக பெரிய வெற்றியை தர வேண்டும். இந்த தலைமுறைக்கு சேரன் என்றொரு மகத்தான கலைஞன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தெரிய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை சினேகா பேசுகையில், '' இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராபில் பணியாற்றிய கலைஞர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் டிரைலரை பார்க்கும் போது புதிதாக இருந்தது.
சேரனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தக் கதை எழுதும்போது நீங்கள் எத்தனை காதல் தோல்விகளை சந்தித்தீர்கள்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கான பட்டியல் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. இந்த படத்தில் பணியாற்றும் போது எனக்கு மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தது. அதை கண்டுபிடித்த ஒரே மனிதர் சேரன் தான்.
ஆட்டோகிராப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் டிப்ரஷனில் இருந்தேன். அது யாருக்கும் தெரியாது. நான் அதற்கேற்ற வகையில் சிரித்துக் கொண்டே இருப்பேன். அப்போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது என் அருகே அமர்ந்து, உனக்கு என்ன பிரச்சனை என கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்று சொன்னேன். அப்போது உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் எனக்கு தெரிகிறது. ஆனால் அது சீக்கிரம் சரியாகும் என்று சொல்லி நட்பு பாராட்டினார். அன்று தொடங்கி 21 வருடங்களாக என்னுடைய சிறந்த நண்பராக அவர் இருக்கிறார். என்னுடைய சிறந்த நண்பர், நலம் விரும்பி யார் என்று கேட்டால் நான் மார்தட்டி சொல்வேன் சேரன் என்று.
இந்தப் படம் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா என பலரும் கேட்டனர். அதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படம்
“Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !
பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”.
நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில், உருவாகும் மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது.
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் திறமை கொண்ட வில்லனாக தோன்றுகிறார். போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி காணப்படுகிறார் – கதாப்பாத்திர போஸ்டர் லுக் புதிய நியூ ஏஜ் வில்லனாக அவரை அறிமுகப்படுத்துகிறது.
“Globe Trotter” என்பது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் கூட்டணியில் உருவாகும், மிகப்புதுமையான ஒரு சாகச உலகம் ஆகும். இந்த இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர், தற்போது அந்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜமௌலி ஏற்கனவே இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் பதித்துள்ளார், இப்போது தென்னிந்திய முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணையும் இந்தக் கூட்டணி, அடுத்த பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தற்போதைய நிகழ்வு படத்தின் புரமோசன் பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
இந்த கதாப்பாத்திர போஸ்டர் ராஜமௌலி எப்போதும் எதிலும் தனிச்சிறப்பு கொண்டவர். இந்த போஸ்டர் அவரது தனித்துவமான முத்திரையுடன் வெளியாகியுள்ளது. தற்போது அதைக் காட்டிலும் அதிகமான ஹைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற, ஆஸ்கர் வென்ற RRRக்கு பிறகு வெளியாகும் இந்தப் படம் குறித்து, எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. Globe Trotter லாஞ்ச் நிகழ்ச்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக இருக்கப் போகிறது. அது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அந்த நாளுக்கான தயாரிப்புகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் ஏற்கனவே அந்த உற்சாகத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக ராஜமௌலி தனது X (Twitter) பக்கத்தில் கதாப்பாத்திரங்களின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார், தற்போது அது வெளியானதும் இணையம் முழுவதும் தீயாக பரவி பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரித்விராஜின் அந்த தீவிரமான மற்றும் மிரட்டும் வகையிலான தோற்றம், ராஜமௌலியின் அடுத்த உலக அளவிலான சாகச கற்பனைக்குப் மிகப் பொருத்தமானதாக வெளிப்படுகிறது.
இந்த கும்பா கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் #GlobeTrotter நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சி நவம்பர் 15 அன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.
முன்னதாக ராஜமௌலி தனது பதிவில்..,
“மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் கிளைமேக்ஸ் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் #GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எப்போதும் செய்யாத அளவுக்கு ஒன்றை முயற்சி செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் .”
இயக்குநர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் கிளைமேக்ஸ் காட்சி மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் பங்கேற்க மிகப்பெரிய அளவில் எடுக்கப்படுகிறது, மேலும் GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு குழுவின் தகவல்படி, இது ராஜமௌலி திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான, மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.
பிரித்விராஜ் சுகுமாரனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு இந்த வார “அனவுன்ஸ்மெண்ட் வீக்” ( announcement week) உடைய தொடக்கமாகும், இதில் ராஜமௌலி கூறியபடி, நவம்பர் 15 நிகழ்வுக்கு முன் பல அப்டேட்களும் சர்ப்ரைஸ்களும் வெளியாகவுள்ளன.
இந்தப் படத்தின் புரோமோஷன் அப்டேட்கள் பல கட்டங்களாக வெளியிடப்படவுள்ளது, முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதன் பிறகு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் “மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில்” முடிவடையும் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.
வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி
டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது
நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது,
என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம்.
நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குனர் நிதிலன் பேசும்போது,
இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் யதார்த்தமான, நேர்மையான மனிதர். அவர் மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக கூறி விடுவார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஓடாத நல்ல படம் வேண்டாம், ஓடுகின்ற மோசமான படம் வேண்டாம், ஓடுகின்ற நல்ல படம் வேண்டும் என்று பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அப்போது குறை நிறைகளை அழகாக எடுத்துக் கூறுவார். குறைகளைக் கூட நேர்மறையாக கூறுவார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு பிரபு சாலமன் சார் முக்கிய காரணம். அவருக்கு என்னுடைய நன்றி.
கும்கி தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல ஃபேன் பாய் சம்பவம் என்று கூறுவார்கள் அல்லவா? அதுபோல ஃபேன் சம்பவம் என்று ஒன்றை கூறினார். அவர் கூறியதை போல அப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் இன்னொரு அமைதிப்படை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படம் கும்கி-2 படத்திற்கு பிறகு வெளியாகும் என்று நினைக்கிறேன்.
பைசன் படத்தில் மாஸ் காட்டிய நண்பர் பிரசன்னா, சுகுமார், மதி மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அசோசியேட் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கும்கி -1 படம் வெற்றிபெற்றது போல, அதைவிட பெரிதாக கும்கி-2 வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குனர் மடோன் அஸ்வின் பேசும்போது,
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வு இப்போதும் வருகிறது. ஏனென்றால், நீதிபதியாக இருந்த பிரபு சாலமன் சார் இருக்கிறார். அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கீகீ-யும் இருக்கிறார். அந்த சீசனில் கலந்து கொண்ட நான், நிதிலன், பாக்கியராஜ் கண்ணன், அஸ்வத் மாரிமத்து போன்ற ஒரு குழுவை வழி நடத்தி இயக்குனர் ஆவதற்கு காரணமாக இருந்தவர் பிரபு சாலமன் சார் தான்.
என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு கதை சொல், நான் தயாரிக்கிறேன் என்றார். நான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என்னிடம் இப்போது கதை இல்லை, ஆகவே உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன் என்றேன்.
அவருக்கு பிடித்த கதை சொல்லும் இடம் அவருடைய இன்னோவா கார் தான். தொடரி படம் முதல் இன்னும் வெளியாகாத மேம்போ படம் வரை ஒரு வரி கதை தெரியும். அதில் கும்கி -2 மட்டும் பேசவில்லை. பேசியிருந்தால் இந்த கதையையும் நான் படித்திருப்பேன்.
கும்கி-1 படத்தை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தது போல இப்படத்தையும் திரையரங்கிற்கு சென்று மக்கள் கொண்டாடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
என்னுடைய மண்டேலா மற்றும் மாவீரன் படங்களில் இருக்கும் குறை நிறைகளை கூறிய லிங்குசாமி சாருக்கு நன்றி.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,
லிங்குசாமி படத்திற்கு தொடர்ந்து நான் தான் வசனம் எழுதி வருகிறேன். நன்றாக எழுதுவேன் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய நண்பன் என்ற காரணத்தினால் எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அவரது குடும்பத்தில் இருந்து மதி இரண்டாவது தலைமுறையாக சுலபமாக சினிமாவிற்கு வந்தாலும் வெற்றிபெறுவது எளிதல்ல என்பதை கொரோனா சொல்லியிருக்கிறது. மதி இதுபோல நல்ல கதைகளைக் கேட்டு நிறைய படங்கள் நடித்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஒரு காட்டில் பறவைகள், விலங்குகள், அணில் போன்றவை எங்கிருக்கும். காட்டில் ஒரு மழைத்துளி விழுந்தால் எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு காட்டைப் பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்து அழகாக காட்டியிருக்கிறார் சுகுமார். வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை அறிந்து வைத்திருக்கிறார்.
சமீபத்தில் நான் அதிகமாக கேட்ட பாடல் தீக்கொளுத்தி. இப்பாடலும், பைசன் படமும் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு மிகப்பெரிய கதவு திறந்திருக்கிறது. இந்த சமயத்தில் கும்கி-2 வருவது இன்னமும் சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்.
மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படம் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன் என்றார்.
இயக்குனர் சரண் பேசும்போது,
இப்படம் தயாரிப்பில் இருக்கும்போது லிங்குசாமி அலுவலகத்தில் பார்த்தேன். படம் முழுவதும் காடாகவே இருக்கிறதே என்று நினைத்தேன். பிறகு தான் ஜெயந்தி லால் காடா காரணம் என்று தெரிந்தது.
நான் கதாநாயகன் மதி சார்பாக இங்கு நிற்கிறேன். ஒவ்வொரு நாயகனும் வளரும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு, அவர்கள் ஆர்வத்திற்கு தீனிப் போடும் இயக்குனர், எந்த தடையும் சொல்ல தயங்காத தயாரிப்பாளர் என்று இவ்வளவும் கிடைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இவை அனைத்தும் மதிக்கு கிடைத்திருக்கிறது.
பிரபு சாலமன் படத்தில் உணர்வுபூர்வமாக இருக்கும். அவர் கைப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட தூர பயணத்திற்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது. அது போல மதியும் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.
10 வருடமாக மறைந்திருந்து இசையமைத்துக் கொண்டிருந்த நிவாஸ் கே பிரசன்னா இன்று பாடுகிறார். நீண்ட வருடத்திற்குப் பிறகு நல்ல இசையை பைசன் படத்தில் தான் கேட்டேன்.
அதேபோல், மண்டேலா படத்தைப் பார்த்து வியந்தேன். பல இளம் இயக்குனர்கள் இங்கு வந்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாயகியின் அப்பாவை எனக்கு நன்றாக தெரியும். அவர் நாயகியின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஷ்ரதாவை வரவேற்கிறேன்.
லிங்குசாமி ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக நுணுக்கமாக செதுக்குகிறார் என்று அருகில் இருந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர் இப்படத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.
பலருடைய வெற்றிக்கும், அவர்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக திருப்பதி பிரதர்ஸ் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும். அவர்களின் 100வது படத்தின் விழாவிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
கும்கி-1 படத்தை என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் திருநெல்வேலியில் இருந்தேன். திரையரங்கில் சென்று பார்க்கும் போது நீர்வீழ்ச்சி காட்சியில், சூப்பர் ஸ்டார் படத்திற்கு போடுவது போல திரையை சுற்றி லைட் போட்டு இப்பாடலை படமாக்கியவர் சுகுமார் என்று பெயர் போட்டார்கள். திரையரங்கில் அனைவரும் கொண்டாடினார்கள்.
யானை இருக்கும் படம் என்றும் தோற்காது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்றார்.
நடிகர் மதி பேசும்போது,
இது என்னுடைய முதல் மேடை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடா சாருக்கு நன்றி.
பிரபு சாலமன் சார் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இங்கு வந்திருக்கும் இயக்குனர் அஸ்வின், நிதிலன் சார், பிருந்தா சாரதி சார், சரண் சார், ஜெகன், விஜய் பாலாஜி சார், என் நண்பன் உன்னி அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி சார் தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி சார் மற்றும் போஸ் சார் தான்.
சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டிருக்கிறேன். அவருடைய இசையில் இப்படம் அமைந்திருக்கிறது. பொத்தி பொத்தி பாடலை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள்.
பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சரண்யாவிற்கு மிக்க நன்றி என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது,
என்னை கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால், இசையில் நான் ஆன்மாவோடு கலந்து இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது பிரபு சாலமன் சார் தான். 2020 கொரோனா காலத்தில் சென்னையில் சாலையில் யாரும் இருக்க மாட்டார்கள். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவோம். ஒரு நாளைக்கு 2 வேளை தான் சாப்பாடு. ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டே இருப்போம்.
இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-யில் இமான் சார் கூட்டணியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றி.
நாயகன் மதி நேரத்தை மிகச் சரியாக கையாள்வதில் ஒழுக்கத்தை பார்த்தேன். 7 மணி என்றால், 7.01 மணிக்கோ, 6.59 மணிக்கோ வரமாட்டார். சரியாக 7 மணிக்கு தான் வருவார்.
இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் காடா பேசும்போது,
கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸ்-க்கு கொடுத்ததற்காக லிங்குசாமி சாருக்கும் போஸ் சாருக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி.
கும்கி-2 படத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹ்ரித்திக் ரோஷன்.
இசைக்கு மொழி கிடையாது. கும்கி முதல் படத்தில் இசை நன்றாக இருந்தது. அதுபோல, கும்கி-2 படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிக நன்றாக இருக்கிறது என்றார்.
இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது,
என்னுடைய நண்பர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், குடும்ப உறவினர்கள் என என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது.
இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது.
அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள்.
இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.
முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம்.
எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது.
தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்.
என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள், நன்றி.
அதேபோல், பாரதி கண்ணன், இயக்குனர் திருச்செல்வம், ஆகாஷ் வந்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்துவிட்டார்கள்.
டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார்.
படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது,
காடா சார் எங்களுக்கு காட் மாதிரி தான். அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், நாங்கள் 2 முதல் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், சினிமாவிற்கு மொழி கிடையாது என்பதை நான் உணர்ந்தேன்.
காடா சார் இல்லையென்றால் ரஜினி முருகன் படம் வெளியாகி இருக்காது. பையா இந்தி படத்திற்காக சந்திக்கும் போது, 14 கோடி ரூபாய் கொடுத்தார்.
ஒரு வருடத்திற்கு ஹிந்தியில் 189 படங்கள் வெளியிட கூடிய மாபெரும் தயாரிப்பாளர் காடா அவர்கள்.
கும்கி-1 படத்தின் விழாவிற்கு ரஜினி சார் மற்றும் கமல் சார் வந்து வாழ்த்தினார்கள். ஆன
ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”.
விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
எடிட்டர் சான் லோகேஷ் பேசியதாவது..,
ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆர்யன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்குப் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். ஒன்று பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள் என நினைத்தோம். அனைவரும் புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினீர்கள் நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. எப்போது கூப்பிட்டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது..,
மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனிதா என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ரோல், இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,
இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும், நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,
இப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக்கும் உடன் இருந்ததற்கும் விஷ்ணுவிற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர், இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,
நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து, இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள், அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீன் அவர்களின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி.
நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது ..,
ஆர்யன் எனக்கும் மிகவும் ஸ்பெஷலான படம். என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்தார், அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம், ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது, என்ன கிளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள், அது தான் பிரவீன் வைத்திருந்த கிளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ் சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார், இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார். மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம் அவருக்கு நன்றி. செல்வா சார் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பத் தந்துள்ளார். இயக்க்குநர்பிரவீனை இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாகச் செய்ய வாழ்த்துக்கள். கட்டா குஸ்தி 2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் செய்யவுள்ளேன், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லரான இப்படத்தை இயக்குநர் பிரவீன் K இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
புதிய கிளைமாக்ஸுடன் ரசிகர்களின் வரவேற்பில் ஆர்யன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!
'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே.பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது :
ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் வடம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.
மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.
மேலும், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.
'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு.
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.
ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில், நேற்று வெளியான “பொத்தி பொத்தி உன்ன வச்சு” பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும், யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, திரைப்படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் விரைவில் திரைக்க்கு வரவுள்ளது.
ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!
“45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி மர்மமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா அந்த இடத்துக்குச் செல்கிறார்கள்.
இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் பாடல் குரல் தமிழ் கானா கலைஞர் கானா காதர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. உற்சாகமான காட்சிகளுடன் இணைந்த ஜானி மாஸ்டர் (Jaani Master) அவர்களின் மின்னல் நடன அமைப்புகள் திரையில் மயக்கும் ஆற்றலை அளிக்கின்றன. சிவராஜ்குமார், உபேந்திரா, மற்றும் ராஜ் பி ஷெட்டியின் அபாரமான திரை முன்னிலை மற்றும் உற்சாகமான ஆட்டம் பாடலை இன்னும் உயர்த்துகிறது.
இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, இன்றைய இளைய தலைமுறையுடன் ஒத்திசைவாகச் செல்லும் தனித்துவமான, அடிமைபடுத்தும் ரிதமுடன் கூடிய இசையை வழங்கியுள்ளார்.
“45 தி மூவி” படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், 'சில்மிஷம்' சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ''இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், "தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், ''இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,'' என்றார்.
இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், ''சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,'' என்றார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், ''கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். 'பவுடர்' படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய 'ஹரா' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது 'ஹரா' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.
படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,'' என்றார்.
'பிக்பாஸ்' பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், ''இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.
நடிகர் விஷ்ணு பேசுகையில், ''இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய 'ட்ரேட்மார்க்' சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.
இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், ''என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார். நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் 'செல்லாட்டி..' என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. 'தென்மேற்கு பருவக்காற்று ' படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.
இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. 'அயோத்தி' படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.
நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,'' என்றார்.
நடிகை பிரதீபா பேசுகையில், '' கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. 'நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.
கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் 'பருத்திவீரன்', 'மைனா' படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நவம்பர் 7ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.
நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில், ''இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது. கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.
இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம். இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், ''கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.
தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.
தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார். இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.
புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன். அவரும் எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்
திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!
கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













