சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!
Updated on : 02 November 2024

பிரம்மாண்ட  இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், பான் இந்திய பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  திரைப்படம் 2024 ஜனவரி 10 ஆம் தேதி, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.



 



நவம்பர் 9 ஆம் தேதி  கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசர் அறிவிப்பு போஸ்டரே படத்தின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது, ராம் சரண் முரட்டுத்தனமான அவதாரத்தில், லுங்கி மற்றும் பனியனுடன் ஒரு ரயில் பாதையில் அமர்ந்திருக்கும் போஸ்டர், ரசிகர்களுக்கு அற்புதமான தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது. 



 



இசையமைப்பாளர் தமன், இந்த ஆக்‌ஷன்  அதிரடி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, மிரட்டலான ரயில் சண்டை காட்சியை பற்றிக் கூறி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும்  கூட்டியுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட "ஜருகண்டி ஜருகண்டி..." மற்றும் "ரா மச்சா மச்சா" பாடல்கள் ஏற்கனவே சார்ட்பஸ்டர் ஹிட்டாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 



 



பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற புகழ்மிகு இயக்குநர் ஷங்கர், ராம் சரணை இதுவரையில்லாத வகையில், மிக  புதுமையான பாத்திரத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படம்,  ராம் சரணின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையவுள்ளது.  ஏஏ பிலிம்ஸ் வட இந்திய விநியோக உரிமையை, மிகப்பெரிய விலையில் வாங்கியிருப்பதிலிருந்து,  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பின் அளவு வெளிப்படையாக தெரிகிறது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை, சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.



 



வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நட்சத்திர நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், இந்தப் படம் இந்திய சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. ராஜமௌலியின் RRR  படத்திற்குப் பிறகு, வெளியாகும் ராம்சரண் படமென்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து வருகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா