சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!
Updated on : 06 November 2024

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும்  நவம்பர் 8 முதல், மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற, "ஏ.ஆர்.எம்" திரைப்படத்தை,  ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  இயக்குநர்  ஜிதின் லால் இயக்கியுள்ள இப்படத்தை, மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில்,  டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார். 



 



டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாசில் ஜோசப், சஞ்சு சிவராம், ஹரிஷ் உத்தமன், ரோகினி, ஜெகதீஷ், அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பிஜு குட்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த ஃபேன்டஸி திரைப்படம்,  அமானுஷ்யம் சூழ்ந்த சிலையின் பின்னணியில், மூன்று தலைமுறைகளின்  கதையைச் சொல்கிறது.  ஏ.ஆர்.எம் ஒரு விண்கல் மற்றும் ஒரு பழங்கால கோயில் விளக்கைச் சுற்றியுள்ள மர்மங்களை விரிவுபடுத்துகிறது, போர்வீரன் குஞ்சிகேலு, திருடன் மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று மையக் கதாபாத்திரங்களின் பயணங்களைச் சிக்கலான முறையில் இது இணைக்கிறது. மூன்று தலைமுறை பாத்திரங்களில் டோவினோ தாமஸால் வித்தியாசமான தோற்றங்களில் அசத்தியுள்ளார்.



 



படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் படம்பிடித்துள்ளார், ஷமீர் முகமதுவின் எடிட்டிங் மற்றும் திபு நினன் தாமஸின் பரபரப்பான இசையமைப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. 



 



மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்த மாயாஜால ஃபேன்டஸி த்ரில்லரான ஏ.ஆர்.எம் - திரைப்படத்தைக் காணத்  தவறாதீர்கள்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா