சற்று முன்

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது   |    கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி   |    ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 'பறந்து போ'   |    அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' SUN NXT OTT தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது   |    இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர் - நடிகர் கார்த்தி   |    வேகமாக உருவாகி வரும் அரசியல் திரில்லர் திரைப்படம் 'கராத்தே பாபு'   |    பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் 'அகத்தியா'   |    ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் 'தருணம்'   |    ZEE5 ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமாகவுள்ளது 'தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்'   |    'அகத்தியா' படத்தின் மூன்றாவது சிங்கிள், 'செம்மண்ணு தானே', பாடல் வெளியிடப்பட்டது   |    சாதனை படைத்துள்ள அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்!   |    ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரம் ஸ்ருதிஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!   |    சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பாங்காக் மக்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறிய ஸ்ருதி ஹாசன்!   |    மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும் - நடிகர் அருள்தாஸ்   |    விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ஒரு கமர்ஷியல் படத்தில் நான் நடிப்பது இதுவே முதல்முறை - நடிகை மடோனா செபாஸ்டியன்
Updated on : 19 November 2024

நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் 'செலின்' என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவரது அற்புதமான நடிப்பு கோலிவுட்டில் பாராட்டுகளை வாங்கித் தந்தது. அதேபோல, தனுஷின் ’பா. பாண்டி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது ஆக்‌ஷன் அவதாரம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்போது நடிகர் பிரபுதேவாவுடன் அவர் நடித்திருக்கும் 'ஜாலி ஓ ஜிம்கானா' திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.



 



நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, “இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானது. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். ஆனால், இயக்குநர் சக்தி சிதம்பரம் சார் இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். எனக்கும் மட்டுமல்ல நடிகர்கள் அபிராமி, யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற அனைத்து பெண் நடிகைகளுக்கும் சிறப்பான கதாபாத்திரம் இதில் இருக்கிறது.



 



’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம் சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும். டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இதில் உள்ளது. பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும் அவருடன் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது” என்றார்.



 



’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படத்தை ட்ரான்சிண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் ராஜன் மற்றும் நீலா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா