சற்று முன்
சினிமா செய்திகள்
கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!
Updated on : 30 November 2024
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது வரும் 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகள்
முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'
விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”. மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.
இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி, பின் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது.
தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஊர் பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் தான் இந்த படம் .
வெளியூரில் இருந்து கிராத்துக்கு வரும் நாயகி..ஆரம்பத்தில் நாயகனின் முரட்டுத்தனத்தை பார்த்து பயந்தாலும்... அவனது குணத்தை அறிந்து அவனைக்காதலிக்க, அதற்கு எதிர்ப்பு எழ... நாயகன் வில்லனின் திட்டங்களை முறியடித்தாரா...? தன் காதலில் வெற்றி அடைந்தாரா...?? என்ற கேள்விகளுக்கு ஆக்ஷ்ன், காதல்,நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இப் படத்தை டைரக்ட் செய்துள்ளார் புது இயக்குநர் பால் சதீஷ்.
இதில் முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கிறார். அண்ணனாக ஆரியன், ஊர் பணக்காரராக சம்பத் ராம், நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார்கள்.

நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, "நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றை பேசும் படமாக இது இருக்கும். இந்த விஷயங்களை சீரியஸ் டோனில் இல்லாமல் நகைச்சுவை கலந்து பொழுதுபோக்காக திரையரங்குகளில் மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியலாக எடுத்திருக்கிறோம்" என்றார்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பற்றி அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா மேடம் நடித்திருக்கிறார். அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ் அண்ணனும் நடித்திருக்கிறார். இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும், உசிலம்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்" என்றார்.
தொழில்நுட்பக்குழு பற்றி கேட்டபோது, "என்னைப் போலவே மணிகண்டன் சாரிடம் பணிபுரிந்த விவேக் விஜயராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் எடிட்டராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். கிராமத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மூலமும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் மதிப்பை கலகலப்பாக பேசியிருக்கிறோம். திரையரங்குகளில் இந்தப் படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “'சிக்மா' படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. பார்வையாளர்களும் 'சிக்மா' உலகில் வலுவாக இணைந்திருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் இது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. படத்தின் வெளியீடு நெருங்கும்போது அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடுவோம்" என்றார்.
களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர்.
மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழனிவேல், திரு.கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் திரு.ஏ.முருகன், திரு.ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், திரு.கே.முருகன், திரு.வி.ஞானவேல், திரு.பிரவின்காந்த், திரு.வி.என்.ரஞ்சித் குமார், திரு.எஸ்.ஜெயசீலன், திரு.ராஜா @ பக்ருதீன் அலி அகமத், திரு.எம்.தனசண்முகமணி, திரு.பி.ஜி.பாலாஜி, திரு,இசக்கிராஜா, திரு.பி.மகேந்திரன், திரு.எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், திரு.ஏ.ஏழுமலை, திரு.எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர் திரு.ஏ.எஸ்.பிரகாசம், திரு.வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் திரு.தீனா, இயக்குனர் திரு.லிங்குசாமி, இயக்குனர் திரு.சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்பாளர்களை திரு.கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள். திரு.ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். இக் கூட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.
விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது. குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.
இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் இதற்குத் தானே இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.
ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளது.
ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் ரசிகர்கள் வெளியாகும்.
Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!
Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது. இது இசை ரசிகர்களுக்கு புதுமையான, ஒப்பற்ற மற்றும் முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.
ஒரு முழுநீள திரைப்படம் இதுபோன்ற ஒரு இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை.
மூன்வாக் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த சிறப்புடன் கையாளப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன், ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியான போஸ்டர்களை வெளியிட்டு, அந்த பாடலின் தீம் மற்றும் தத்துவத்தை தெளிவாக விளக்கியதோடு, அந்தப் பாடலுடன் தொடர்புடைய பாடலாசிரியர்கள் மற்றும் நடன அமைப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இன்றைய திரைப்பட விளம்பரங்களில் அரிதாகக் காணப்படும் ஒரு நடைமுறையாக இது விளங்குகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, பிரபுதேவாவின் நடன மாயாஜாலம் மற்றும் மனோஜின் சினிமா உருவாக்கம் — இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மூன்வாக் திரைப்படம் அனைத்து தலைமுறையினரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இசை திரைப்படமாக அமைந்துள்ளது.
திரைப்படம் குறித்து மனோஜ் கூறியதாவது:
“மூன்வாக் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஆனால் அதே சமயம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைப்படத் துறையின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது.”
மினி கேசெட் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில்..
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,
முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.
சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது..,
இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகை ஆனந்தா பேசியதாவது..,
சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.
நடிகை அனிஷ்மா பேசியதாவது..,
இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் தமிழ் பேசியதாவது..,
நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார். நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது அக்ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின், மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம். என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.
நடிகர் அக்ஷய் குமார் பேசியதாவது..,
எக்ஸாம் ஹாலுக்கு போனது போல் எல்லாம் மறந்து விட்டது. முதலில் பிலோமின் சாருக்கு நன்றி. அவர் மகனுக்குக் கூட இவ்வளவு செய்திருக்க மாட்டார். மாதேஷ் சாரும் அவர் டீமும் அவ்வளவு எனர்ஜியாக உழைப்பார்கள் அவர்களுக்கு நன்றி. ஜஸ்டின் சார் உங்கள் இசையில் நடித்தது மகிழ்ச்சி. சுரேஷ் சார், தமிழ் சார், எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க வைத்தீர்கள் எனத் தெரியவில்லை, நீங்கள் இது கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் எல்லாவற்றையும் சொல்லித் தந்தீர்கள் நன்றி. விக்ரம் பிரபு சார் என் முதல் ஷாட்டே உங்களுடன் தான். எனக்கு நிறைய நடிக்க கற்றுத் தந்தீர்கள். நன்றி. சூரி சார் என்னையும், அனிஷாவையும் வீட்டு வேலை செய், சமை என்றெல்லாம் சொன்னார் எதுக்குடா எனத் தோன்றியது, ஆனால் நடிக்கும் போது தான் புரிந்தது. நன்றி. அனிஷா எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் தமிழில் அறிமுக படம். வாழ்த்துக்கள். இறுதியாக அப்பா, கண்டிப்பான புரடியூசர். அவர் கண்டிப்பாக இருந்தது எனக்கு உதவியாக இருந்தது. என அம்மா மற்றும் குடும்பத்திற்கு நன்றி. கஷ்டமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துச் செய்தேன் எல்லோரும் உதவி செய்தார்கள் நன்றி.
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,
சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார். மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,
தம்பி வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட இரு திறமைகள் சுரேஷ், தமிழ். இருவரும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது. விக்ரம் பிரபு காவலராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் தந்தையிடம் பெருமையாகச் சொன்னேன். இப்படத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி விளம்பரம் செய்து வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியதாவது..,
இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் தயாரிப்பாளராக ஆக ஆசைப்பட்டதில்லை, இயக்குநராக ஆசைப்பட்டு ஏதோ ஒரு வழியில் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். என்னை மிக மரியாதையாக நடத்திய லலித் சாருக்கு என் நன்றி. அக்ஷய் சில வருடங்கள் முன் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அவர் மீண்டும் நடிப்பார் என நினைக்கவில்லை. இந்தப்படம் பார்த்துவிட்டேன், சமீபத்தில் ஒரு படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் 2 மணி நேரம் பேசியது இந்தப்படம் தான். லலித் சார் ஆரம்ப காலத்தில் பால் போட்டுக்கொண்டிருந்தார், அவர் சொந்த உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை பெரிய தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் மிக கண்டிப்பான தெளிவான தயாரிப்பாளர். அவர் ஒரு விசயத்தில் இறங்கினால் கண்டிப்பாக அதை முழுமையான படைப்பாக முடித்துக் கொண்டு வரும் தெளிவு இருந்தால் தான் செய்வார். இந்த வருடத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என்றால் அது சிறை தான். உங்களுக்கு முழுமையாக முக்கியமான கருத்தை வலுவாக சொல்லி, உங்களைத் திருப்தி படுத்தும் படமாக இருக்கும். யாருமே இதை முதல் இயக்குநரின் படமென சொல்ல முடியாது. சுரேஷ் அற்புதமாக இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு சாரில் ஆரம்பித்து, ஒவ்வொருவரும் அத்தனை சிறப்பாக நடித்துள்ளனர். முதல் ஃப்ரேமிலேயே இந்தப்படம் உங்களைக் கவர்ந்து விடும். இஸ்லாமிய பெயரை மையப்படுத்தி கடைசியாக வந்த படம் மாநாடு தான், ஆனால் இந்தப்படம் அதைத்தாண்டி ஒரு முக்கிய அம்சத்தைப் பேசும் படமாக வந்துள்ளது. வசூலிலும் இப்படம் ஜெயிக்கும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது..,
சிறை படம் பார்க்கும் வாய்ப்பு லலித் சார் மூலம் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. தமிழை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்து, இந்த கதையை இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ளார் என பெருமையாக இருந்தது. சுரேஷ் எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் லிஸ்டில் வந்துவிட்டார். விக்ரம் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்னை இல்லம் இனி பிஸியாகிவிடும். வெங்கட்பிரபு My name is Khan, I am not a terrorist என சொன்ன
ஒன்லைன் தான் மாநாடு படம் செய்யக்காரணமாக இருந்தது. அதைப்போல வலுவான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் முஸ்லீம் இனத்தவரை கொடுமையாகவே காட்டி வருகிறோம். அதைப்பற்றி அழுத்தமாக இப்படம் பேசுகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக அக்ஷய் கிடைத்துள்ளார். இளம் நடிகர்கள் தமிழில் இல்லை அந்தக்குறையை அக்ஷய் போக்கவேண்டும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது..,
இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், நீங்கள் யார் அஸிஸ்டெண்ட் எனக் கேட்டேன், வெற்றிமாறன் என்றார். உண்மையில் வெற்றிமாறனுக்கு பெருமை சேர்த்துள்ளார். என் பார்வையில் முழுக்க முழுக்க இது இயக்குநரின் படம். சுரேஷ் உழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். அக்ஷய் அடுத்தடுத்து இது போல காதல் படங்கள் செய்ய வேண்டும். விக்ரம் பிரபு பார்த்துப் பிரமிப்பாக இருந்தது. போலீஸாக கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார். படம் மிக இயல்பாக பிரம்மாதமாக இருந்தது. தயாரிப்பாளர் லலித் மரியாதைக்குரிய நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,
லலித் எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவு அன்பானவர். கொரோனா காலத்தில் சினிமா மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தது. எல்லோருக்கும் வேலை இல்லை. நான் தாணு சாருக்கு தான் பேசினேன், அவர் 100 முட்டை அரிசி அனுப்புகிறேன் அடுத்து ஒருவருக்கு, போன் செய் என்றார். லலித் சாருக்கு போன் செய்தவுடன் நேரில் வந்து 10 லட்ச ரூபாய் உதவி அளித்தார். அத்தனை அன்பானவர். தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது ஆனால் தயாரிப்பாளர்கள் தான் நன்றாக இல்லை. லலித் சார் மாதிரி எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சிறை படம் பார்த்தேன். முதல் மூன்று நிமிடங்களில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. விக்ரம் பிரபு தமிழில் முக்கியமான ஹீரோவாக வந்துவிடுவார். படம் பார்த்தவுடன் வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்று தோன்றிய
உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’
தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள *‘மிஷன் சாண்டா’* திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.
வண்ணமிகு, மாயாஜாலம் நிறைந்த பெரிய திரை அனுபவமாக, விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள *‘மிஷன் சாண்டா’*, பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் மூலம் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை கொண்டாடுகிறது. குடும்பத் திரைப்படங்கள் அரிதாக வெளியாகும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சரியான நேரத்தில் இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்கிறது.
இந்திய அனிமேஷன் துறையின் முக்கிய மைல்கல்லாக திகழவுள்ள *‘மிஷன் சாண்டா’* திரைப்படத்தின் முழு அனிமேஷனும் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட கியூரியாசிட்டி இங்க் மீடியா உருவாக்கியிருந்த நிலையில், அனிமேஷன் தயாரிப்புப் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த *ஸ்டுடியோ56 அனிமேஷன்* தலைமை ஏற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த டூன்2டாங்கோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகளாவிய நிபுணர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
*ஸ்டுடியோ56-ஐ சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திறமைமிக்க அனிமேஷன் கலைஞர்கள், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இப்படத்தில் பணியாற்றினர். உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய மையமாக **இந்தியா* வளர்ந்து வரும் பயணத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இதிலும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துவது, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தஞ்சாவூரில் பிறந்து, திருச்சிராப்பள்ளியில் வளர்ந்த தொழில்முனைவோர் *ஸ்ரீராம் சந்திரசேகரன்* என்பதுதான்.
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஊக்கத்தால் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீராம் 2008ஆம் ஆண்டு *Broadvision Kids & Family* நிறுவனத்தை நிறுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“கடந்த 17 ஆண்டுகளில், அனிமேஷன் துறையில் நாம் படிப்படியாக வளர்ந்துள்ளோம். உள்ளூர் விளம்பரங்களிலிருந்து தொடங்கி, இன்று உலகத் தரத்தில் அனிமேஷன் முழுநீள திரைப்படங்களை உருவாக்கும் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றாக உயர்ந்துள்ளோம். உண்மையில், தமிழ்நாடு உலகின் சிறந்த அனிமேஷன் திறமைகளை உருவாக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எங்களுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வரும் எங்கள் அனிமேஷன் இயக்குநர் ஹரிஷ், லேஅவுட் இயக்குநர் அஷ்வின், காம்போசிட்டிங் இயக்குநர் கார்த்திகேயன், அனிமேஷன் மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் பெங்களூரு, சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்கள்,” என்றார்.
இந்தப் படம் குறித்துப் பேசிய Broadvision நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான திருமதி கௌரி ஸ்ரீராம்,
“*‘மிஷன் சாண்டா’* இந்திய அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இருக்கும். 44-க்கும் மேற்பட்ட உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் பல சர்வதேச விருதுகளுடன் வெற்றி பயணம் மேற்கொண்டு வரும் Broadvision Kids & Family, இப்போது டிஸ்னி தரத்திலான கதை சொல்லும் பாணியை இந்த கிறிஸ்துமஸ் அன்று இந்தியக் குடும்பங்களுக்கு பெரிய திரையில் கொண்டு வருகிறது,” என்றார்.
அதிரடி காட்சிகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் ஆகியவற்றுடன், *‘மிஷன் சாண்டா’* ஒரு மகிழ்ச்சியான சினிமா விடுமுறை அனுபவத்தை வழங்குவதோடு, இந்திய அனிமேஷன் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் அமைந்துள்ளது.
குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.
பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார்.
இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், 'கன்ஜூரிங் கண்ணப்பன்', 'சட்டம் என் கையில்' போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை நிலைநாட்டியவருமான சதீஷ் குமார், ஆக்ஷன் கலந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகனும், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹிட் ஆக்ஷன் கதாநாயகனாக அறியப்பட்டு, 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவருமான ஆதி சாய் குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
'பீஸ்ட்', 'லியோ' போன்ற படங்களின் மூலம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகங்களிலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தின் வித்தியாசமான கதைக்களத்தால் கவரப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க, தமிழின் முன்னணி படங்களுக்கு கலை இயக்கம் செய்த துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!
இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இருபெரும் துறைகளான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) திகழ்கிறது. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுடன், இந்த லீக் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணியின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருபவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த இரு துறைகளும் இணையும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சென்னை அணியை திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் உடன் இணைந்து வாங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னையில் இன்று மாலை நடைபெற்ற வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழாவில், நடிகர் சரத்குமார் மென்டர் ஆகவும், நடிகை மீனா பிராண்ட் அம்பாசிடர் ஆகவும், நடிகர் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் அணியில் இணைந்துள்ளனர்.
பிரபல கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் குழுமத்தை கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு பன்முக நிறுவனமாக வளர்த்துள்ளார். இந்த அணியின் இணை உரிமையாளரான பிரபல நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார், நடிப்பு, திரைப்பட தயாரிப்பு, இயக்கம், சமூகப் பணி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார்.
சென்னையில் இன்று நடைபெற்ற வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சியில் , வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கிரிக்கெட் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி மற்றும் முரளி விஜய், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை மீனா, வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் குஷ்மிதா கணேஷ், ஸ்ரீப்ரியா ராஜ்குமார் – ராஜ்குமார் சேதுபதி தம்பதியின் மகன் நாகார்ஜுனா சேதுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் போஜ்புரி அணியின் கேப்டனுமான மனோஜ் திவாரி, வங்காள அணியின் உரிமையாளர்கள் போனி கபூர் மற்றும் ராஜ் ஷா, பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் புனித் சிங் மற்றும் நவராஜ் ஹன்ஸ், கேரள அணியின் கேப்டன் உன்னி முகுந்தன், தெலுங்கு அணியின் கேப்டன் சச்சின் ஜோஷி மற்றும் தெலுங்கு அணியின் முக்கிய விரரும் இசையமைப்பாளருமான தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













