சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !
Updated on : 12 January 2025

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான  ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை, அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆண்டு, ZEE5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. ZEE5 தளத்தில்,  ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் பிரத்தியேகமாக நேரலை ஸ்ட்ரீம் செய்யும், இதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மகத்துவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.



 



பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் வீரம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உணர்த்துகிறது. இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை, நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம், ZEE5 இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது, அதே நேரத்தில் இவ்விழாக்களை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE5 ஆனது ₹49 மாதாந்திர சந்தா பேக்கை வழங்குகிறது, ZEE5  தளம் பார்வையாளர்களை வழங்கும் வகையில், தமிழ்நாட்டின் துடிப்பான பாரம்பரியங்கள் மற்றும் கதைகளைப் பிரதிபலிக்கும் பிரத்தியேக உள்ளடக்க வரிசையில் பல படைப்புகளை வழங்கி வருகிறது. 



 



ZEE5 இன் தலைமை வணிக அதிகாரியும், ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு அதிகாரியுமான சிவக்குமார் சின்னசாமி கூறுகையில்.., 



“ZEE5 இல், நமது பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டை வடிவமைக்கும் மரபுகள் மற்றும் மதிப்புகளைக் கொண்டாட, உறுதிகொண்டு செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கிய சந்தையாகும், இங்குள்ள  பார்வையாளர்கள் பலவிதமான படைப்புகளை, சிறந்த கதைசொல்லலை ஆழமாகப் பாராட்டி வருகின்றனர். இந்தப் பொங்கலுக்கு, தமிழ் பேசும் பார்வையாளர்களுக்கு, கவனமாகத் தொகுக்கப்பட்ட உள்ளடக்க வரிசை மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கை அணுகக்கூடிய வகையில் ₹49 சிறப்புச் சந்தா சலுகை மூலம், முன்னுரிமை அளித்து வருகிறோம். இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகளுடனான எங்கள் தொடர்பின் மூலம், பிராந்திய கதைசொல்லல் மற்றும் இணையற்ற பொழுதுபோக்கிற்கான ZEE5 இன் அர்ப்பணிப்பை உயர்த்திக் காட்டும் அதே வேளையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.



 



ZEE5 இன் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளின் நேரடி ஸ்ட்ரீமிங், தமிழ்நாட்டின் நேசத்துக்குரிய மரபுகள் எல்லைகளைக் கடந்து செல்வதை உறுதிசெய்கிறது, இதனால் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து திருவிழாவின் கொண்டாட்டத்தையும் பெருமையையும் அனுபவிக்க முடியும். இந்த நிக்ழவு பிராந்திய கலாச்சாரங்களைக் கொண்டாடுவதற்கும், அர்த்தமுள்ள மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கம் மூலம், பல்வேறு பார்வையாளர்களை இணைப்பதற்கும் ZEE5 இன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா