சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நமக்கும் ஆட தோன்றும்
Updated on : 05 February 2025

'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார். 



 



இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தண்டேல்' எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு வழங்குகிறார்.



 



எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடையும் வகையில் படக் குழுவினர் அயராது பாடுபட்டு வருகிறார்கள்.



 



இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து கதையின் நாயகியும் ,தனித்துவமான நடிப்புத்திறன் மிக்க நடிகையுமான சாய் பல்லவி பகிர்ந்து கொண்டதாவது....



 



இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்ன?  



இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது. இந்த கதையின் மூல வடிவத்தை கோவிட் காலகட்டத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் என்ன சம்பவம் நடந்தது? என்ற விவரம் இடம் பிடித்திருந்தது. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை அவர்களுடைய மனைவிமார்கள் எப்படி எந்தவித தொடர்பும் இல்லாமல் மீட்டு வந்தார்கள் என்று விசயம் இருந்தது. அதை படித்தவுடன் இதனை எப்போது செய்தாலும்.. இந்த உணர்வு ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன். 



 



ஒவ்வொரு படத்திலும் உங்களின் நடிப்பு சிறப்பாக இருக்கிறதே. இதற்கான காரணம் என்ன?  



அதற்கு காரணம்.. அந்தக் கதை.. அந்த கதாபாத்திரம்.. அதன் இயக்குநர்.. இந்த மூன்றும் தான் முக்கிய காரணம்.  



 



சாய் பல்லவியின் நடிப்பை போல் நடனமும் பிரபலம். இந்த திரைப்படத்தில் எப்படி..?



நடனத்தை பொறுத்தவரை நான் நன்றாக ரசித்து ஆடுவேன். விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நாமும் ஆட வேண்டும் என்று தோன்றும். விஜய் சார் சிம்ரன் மேடம் நடனமாடும் போது அதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறேன். 



 



நடன அசைவுகளை துல்லியமாக ஆட வேண்டும் என்பதை விட அதை அனுபவித்து ஆட வேண்டும் என எண்ணுவேன்.  



 



இந்தப் படத்தில் பல நூறு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் போது அது சவாலானதாகத் தான் இருந்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு நடனமாடும் போது என் சக கலைஞரான நாக சைதன்யா உடன் இணைந்து நிறைய ஒத்திகை பார்த்தோம். அந்தப் பாடலில் என்னை விட நாக சைதன்யா நன்றாகவே நடனமாடி இருக்கிறார். 



 



கிரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்கிறீர்களே..  இதன் ரகசியம் என்ன? .



என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் பங்களிப்பு செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன். 



 



'தண்டேல்' திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கிறது. சண்டை காட்சிகள் இருக்கிறது. நடனமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உணர்வுபூர்வமான காதலும் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா