சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on : 12 February 2025

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள  'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 



 



தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி கவனிக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஸ்டார்' படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ( Rise East Entertainment)  நிறுவனம் - அஸ்யூர் பிலிம்ஸ் ( Assure Films) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.



 



இயக்குநர் சண்முக பிரியன் - 'நோட்டா', ' எனிமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். மற்றும் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 



 



இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லவ் மேரேஜ்' தயாராகிறது.  தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார். 



 



இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகன்- நாயகி மற்றும் கேரக்டர்களின்   தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா