சற்று முன்

நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!   |    உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ள படம் 'உயிர் மூச்சு'!   |    4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |   

சினிமா செய்திகள்

“ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Updated on : 14 February 2025

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 



 



இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 



 



சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். 



 



ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். 



 



ஆக்சன் கலந்த ரொமாண்டிக்  என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.



 



இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 



 



இப்படம் உலகமெங்கும் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா