சற்று முன்

நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!   |    உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ள படம் 'உயிர் மூச்சு'!   |    4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |   

சினிமா செய்திகள்

பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!
Updated on : 18 February 2025

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிரடி திரைப்படமான ' சலார் சீஸ்ஃபயர் - பார்ட் 1'  ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்த சக்தி வாய்ந்த கதையில் நடித்திருந்தனர். 



 



இதில் உள்ள அதிரடியான சண்டை காட்சிகள் முதல் அதன் தீவிரமான கதை சொல்லும் பாணி வரை ' சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' பார்த்தவுடன் திரைப்பட காட்சிகளை மறு வரையறை செய்து, வெளியான ஒரு வருடத்திற்கு பிறகும் கூட டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நம்ப முடியாத இந்த நீடித்த வெற்றி- மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கும், அவர்களுடைய அசைக்க முடியாத ஆதரவிற்கும் சிறந்த சான்றாகும். இந்த தருணத்தில் அசாதாரணமான இந்த பயணத்தில் பங்கேற்ற 366 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு பிரத்யேக பரிசுகளை அனுப்பி ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதன் அர்ப்பணிப்பு உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. 'சலார்  சீஸ்ஃபயர் பார்ட் 1' திரைப்படத்தின் மீதான அவர்களின் ஆர்வமும், அன்பும் இந்த திரைப்படத்தை கலாச்சார நிகழ்வாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. 



 



இது தொடர்பாக 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் பேசுகையில், '' சலார் மீதான ரசிகர்களின் காதலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஜியோ ஹாட்ஸ்டாரில் 'சலார் 1' படத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள். விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 



 



மேலும் இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். அங்கு புராணக்கதை தொடர்கிறது. அதிரடி மேலும் தீவிரமடைகிறது. கதை இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறது. அடுத்த அத்தியாயம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல எல்லைகளை கடந்து செல்லும் ஒரு மின்னல் போன்ற சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. '' என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா