சற்று முன்
சினிமா செய்திகள்
இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகும் 'அந்தோனி'
Updated on : 13 March 2025
“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.
ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, அண்மையில் வெற்றி பெற்ற “சித்தா”திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான சுரேஷ் A. பிரசாத் படத்தொகுப்பு செய்ய கலை இயக்குனராக கலா மோகனும் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படமானது இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகிறது என்பது சிறப்பம்சமாகும்.
அதோடு இப்படம் ஈழத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாக்கப்படுகின்றது என திரைப்படக்குழு அறிவித்தருகின்றனர்
சமீபத்திய செய்திகள்
நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!
தமிழ் திரைப்படங்களில் தரமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ள அவர், காந்தாரா, கே.ஜி.எஃப் அத்தியாயம் 2, குருப், நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் இறுகப்பற்று போன்ற திரைப்படங்கள் மூலம் தனது சிறந்த திரை ரசனையை நிரூபித்துள்ளார்.
தற்போது, இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ள “பிரேக்ஃபாஸ்ட்” திரைப்படத்தை நாளை (ஏப்ரல் 24) தமிழகம் முழுவதும் வெளியிட எஸ். குகன் தயாராக உள்ளார்.
படம் குறித்து எஸ். குகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கதையின் நேர்மை உடனடியாக என்னை ஈர்த்தது. இந்தப் படம், தற்போதைய தலைமுறையின் உணர்வுகளை உண்மையாக பிரதிபலிப்பதுடன், நவீன காதல் மற்றும் உறவுகளை பற்றி நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை நுட்பமாக சொல்வதில் தேர்ந்தவர் காந்தி கிருஷ்ணா. அதை ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. படத்தின் இளம் நடிகர்கள் திறமையாக தங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. உண்மையான, மனதைத் தொடும் திரைப்படங்களைத் தேடும் பர்வையாளர்களுடன் ‘பிரேக்ஃபாஸ்ட்’ ஆழமாக இணையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!
2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வரும் “NTRNeel” திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் “கேஜிஎஃப்”, “சலார்” படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் இந்த படம், இந்திய சினிமாவில் மிகப்பெரிய கூட்டணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தும் வகையில், படக்குழு சமீபத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், என்டிஆரின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததுடன், படம் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. மேலும், என்டிஆரின் பிறந்தநாளான மே 20ஆம் தேதி இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிளிம்ப்ஸ் வெளியீடு, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு, அவரை புதிய தோற்றத்தில் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர் மேற்கொண்டுள்ள உடல் மாற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை இல்லாத ஒரு புதிய லுக்கில் அவர் இந்தப் படத்தில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது முந்தைய “கேஜிஎஃப்”, “சலார்” போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு பிறகு, இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பெரிய திரை அனுபவத்தை வழங்கவுள்ளார் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
“Mythri Movie Makers” மற்றும் “NTR Arts” நிறுவனங்களின் கீழ் பிரம்மாண்டமாக தயாராகி வரும் “NTRNeel” திரைப்படம், 2027ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் முக்கியமான வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!
JioHotstar தளத்தில் ஏற்கனவே வரவேற்பு பெற்ற “உப்பு புளி காரம்” தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து, புதிய குடும்ப வெப்சீரிஸ் “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” உருவாகியுள்ளது. நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும், ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லும் இந்தத் தொடர், பார்வையாளர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில், நான்கு உடன்பிறந்தவர்களின் வாழ்க்கை மையமாக அமைகிறது. அவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் இணைந்திருக்கும் உறவுகளையும் இந்த தொடர் பேசுகிறது.
இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தும் கட்டுப்பாடான குடும்பத் தலைவராக போஸ் வெங்கட் நடிக்க, குடும்பத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார்.
மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை, “உப்பு புளி காரம்”, “போலீஸ் போலீஸ்” போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மென்மையான உணர்வுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப மதிப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் புதிய எபிசோட்களுடன் வெளியாக இருக்கும் “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்”, குடும்பம் மற்றும் சமகால வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதையை வழங்க உள்ளது. ஜியோஹாட்ஸ்டாரின் அசல் உள்ளடக்கங்களில் இதுவும் ஒரு முக்கியமான புதிய சேர்க்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் மே மாதம் முதல் “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” தொடர் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை உற்சாகமாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய திரைப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் இணைந்து வழங்குகிறது.
இந்த படத்தில் இளம் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இம்முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.
குடும்ப உறவுகளின் நுணுக்கங்களையும், சமகால வாழ்க்கை முறையையும் பேசும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் கமர்ஷியல் அம்சங்களுடன் இந்த படம் வடிவமைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற “பார்க்கிங்” படத்தின் இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார். இவ்விழாவில் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் இணையவுள்ளனர். இப்படம் குறித்து மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மேலும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாகத் தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு புதிய மற்றும் உணர்ச்சி மிக்க அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!
நடிகை நயன்தாரா மற்றும் இளம் நட்சத்திரம் கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த இனிமையான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜி.வி. பிரகாஷ் குமார் குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் மென்மையான காதல் பாடலாக இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கவித்துவமான வரிகளும், இதமான மெலடியும் இந்த பாடலை கேட்கக் கேட்க மேலும் ரசிக்க வைக்கின்றன.
காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, திரையில் அழகான ரசனைமிக்க கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளனர். ஒவ்வொரு ஃப்ரேமும் நயமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த பாடல் ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.
Z ஸ்டூடியோஸ், The Rowdy Pictures மற்றும் 7 Screen Studio ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்பக் கதையை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர் மற்றும் குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையுடன் உண்மையான காதலை பேசும் வகையில் உருவாகி வரும் “ஹாய்” திரைப்படம், முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. நயன்தாரா – கவின் கூட்டணி, ஜென் மார்டின் இசை மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, இந்தப் படத்தை ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!
முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து உருவாகி வரும் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள பான்-இந்தியா ஆக்ஷன் திரில்லர் “ஸ்லம் டாக்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகளில் (post-production) வேகமாக முன்னேறி வருகிறது.
“33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இப்படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் JB Mohan Pictures நிறுவனத்தின் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணை தயாரிப்பாளராக உள்ளார்.
பூரி ஜெகன்நாத் தனது இயக்குநர் பயணத்தை பவன் கல்யாண் நடித்த “பத்ரி” படத்தின் மூலம் தொடங்கியவர். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இன்று வரை 26 ஆண்டுகளை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இந்த சிறப்பு தருணத்தில், விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் இயக்குநருக்கான மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார். “26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு. ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தில் உங்களுடன் வேலை செய்தது பெரும் மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது கம்ஃபர்ட் ஜோனை தாண்டி தள்ளும் இயக்குநர்களை தேடுகிறோம்; நீங்கள் அதை மிக எளிதாக செய்கிறீர்கள். இந்த படம் நிச்சயம் எங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அதோடு பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பணியாற்றுகிறார். “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது துடிப்பான பின்னணி இசையால் கவனம் ஈர்த்த அவர், இந்தப் படத்திலும் அதே அளவிலான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.
“ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் முடிந்த பின் இப்படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!
இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு பிரத்தியேக அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களின் கவனத்தின் மையமாகியுள்ளார்.
“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒன்று. இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.
மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் அனுபவமுள்ள இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.
“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS-ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார்.
சமீப காலமாக பின்னணி இசைக்கு மட்டுமல்லாமல் பாடல்களிலும் சாம் CS சிறந்து விளங்குகிறார். அவரது சமீபத்திய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மெலடிகள் மூலம் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் அவரது திறன், தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
தற்போது, புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தி நடிக்கும் “சர்தார் 2” ஆகிய படங்களில் அவர் பணியாற்றி வருகிறார். மேலும் H. வினோத் மற்றும் தனுஷ் உடன் இணையும் புதிய திட்டங்களும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இதனுடன், பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் அவரது பங்களிப்பு அதிகரித்து வருகிறது. விரைவில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இசையை மையமாகக் கொண்டு உருவாகும் “மகா அவதார் பரசுராம்”, இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இப்படம் வரும் மே 8, 2026 அன்று தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டை நிறுவனத்தின் சார்பில் கே. விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.
White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையில் உருவான “தேஜாவு” மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான “வித்தைக்காரன்” போன்ற படங்களை தயாரித்து பாராட்டைப் பெற்றுள்ளது. தயாரிப்புடன் சேர்த்து விநியோகத்திலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், கர்நாடகாவில் அஜித் நடித்த “துணிவு” மற்றும் தமிழகத்தில் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களையும் விநியோகம் செய்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பிலும் விநியோகத்திலும் சமநிலையை பேணும் நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் Stone Bench மற்றும் லோகேஷ் கனகராஜின் G Squad நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற படங்கள் மூலம் தனித்துவமான கதை சொல்லலுக்காக அறியப்படும் இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விது நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், இந்த படத்தின் மூலம் முழுநீள நாயகனாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2000களின் காதல் நினைவுகள், அந்த காலத்தின் உணர்வுகள் மற்றும் மனநிலைகளை அழகாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள “29” திரைப்படம், காதல் மற்றும் நினைவுகளை இணைக்கும் இனிய அனுபவமாக ரசிகர்களுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. White Carpet Films நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இந்த படம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!
பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் பா. விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில் காளி வெங்கட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரேஷ்மா முரளிதரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பாடல்களை விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை சக்தி திரு கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சியை ராம்போ விமல் அமைக்க, ஆடை வடிவமைப்பை கவிதா மேற்கொள்கிறார். நடன அமைப்பை ராதிகா கவனிக்கிறார்.
குடும்பத்தை மையமாகக் கொண்ட இப்படம், 1995ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு, அரசுப்பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் ஒரு தந்தையின் உணர்ச்சிகரமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.
*படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''1995 அரசுப்பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை கொண்டு உருவாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க கூடியதாக இருக்க இப்படம் தயாராகிறது. இதற்காக சிவகங்கை மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்துகிறோம் '' என்றார்..
2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!
தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், கமல்ஹாசன் அவர்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம்க்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, தாமே பாடி வெளியிட்டுள்ளார்.
இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன்,
அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.
தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது.
இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது:
“இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்.”
தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிட சிங்கத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், #TheLeaderIsHere என்ற செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைக்கிறது.
இப்பாடலை வெளியிடுகையில், பின்வரும் குறிப்புடன் தனது செய்தியை திரு.கமல்ஹாசன் நிறைவு செய்தார்:
“இப்போது இது உங்கள் கைகளில் உள்ளது. நல்லுள்ளங்கள் இதைக் கேட்பீர்களாயின், தயவுசெய்து இதைப் பரவலாகப் பரப்புங்கள்.”
உங்களின்,
கமல்ஹாசன்
- உலக செய்திகள்
- |
- சினிமா













