சற்று முன்

ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |   

சினிமா செய்திகள்

மார்ச் 27ல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'லூசிபர்' பட இரண்டாம் பாகமான 'எம்புரான்'!
Updated on : 17 March 2025

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம்,  வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 



 



2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்”  திரைப்படம் உருவாகியுள்ளது.



 



மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  மலையாள சினிமாவில்  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. 



 



இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 2023 அக்டோபர் 5-ம் தேதி, ஃபரிடாபாத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு, உலகம் முழுக்க பல இடங்களில் நடைபெற்றது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.  



 



தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார். 



 



“எம்புரான்” படத்தின்  விளம்பரப் பணிகள் படத்தைப் போலவே, பிரம்மாண்டமாக துவங்கி நடந்து வருகிறது. 2025 ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தில் கொச்சியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ டீசர், டிஜிட்டல் தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிப்ரவரி 9, 2025-ல் ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல்களில், படத்தின் கதாப்பாத்திரங்கள் 2-3 நிமிட வீடியோக்கள் மூலமாகக் குறுகிய கால இடைவெளியில் வெளியானது. பிப்ரவரி 26, 2025 அன்று மோகன்லால் குரேஷி- ஆப்ரஹாம் எனும் ஸ்டீபன் நெடும்புள்ளியாக அறிமுகப்படுத்தப்பட்டது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 



 



மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்”, இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 2025 மார்ச் 27 அன்று ஸ்டீபன் நெடும்புளஙளியை திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா