சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'
Updated on : 16 September 2025

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது.



 



படக்குழு  நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிறப்பு காட்சிகள், வித்தியாசமான கூட்டணிகள், மேலும் விருஷபா உலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.



 



மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதாவது..,“காத்திருப்பு முடிந்தது. கர்ஜனை நாளை தொடங்குகிறது! விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்.”



 



நந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ள  விருஷபா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் பலாஜி டெலிஃபிலிம்ஸ் இணைந்து அபிஷேக் வியாஸ் ஸ்டுடியோஸ் உடன் வழங்கும் இந்தப் படம்,  அதிரடி, புராணா கதை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த பெரும் காட்சிப்படையாக உருவாகிறது.



 



தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இந்தி மற்றும் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இது உண்மையான பான்-இந்திய  படைப்பாக  ரசிகர்களை மயக்கவுள்ளது.



 



இந்தப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK. பத்மகுமார், வருண் மாதூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி மற்றும் ஜுஹி பாரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.



 



அசத்தும் காட்சிகள், பரந்து விரிந்த அளவிலான யுத்தக் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான டிராமா மற்றும் மோகன்லால் தலைமையிலான சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளுடன்,  “விருஷபா”, இந்திய சினிமாவில் புதிய அளவுகோலை அமைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வரலாற்றில் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா