சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!
Updated on : 16 September 2025

இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கவுள்ளார். 



 



நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த 'சித்தா' மற்றும் '3BHK' ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான 'Unaccustomed Earth' தொடரில் நடிப்பதன் மூலம் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் சித்தார்த் இன்னும் நெருக்கமாகவுள்ளார். 



 



எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் இந்திய-அமெரிக்க சமூகத்திற்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், எதிர்பார்ப்பு, கலாச்சாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்புகளை நெருக்கமாகவும், நுணுக்கமாகவும் சொல்கிறது. 



 



பொறுப்பான மனைவியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பருல் சவுத்ரி (ஃப்ரீடா பிண்டோ) தனது முன்னாள் காதலன் அமித் முகர்ஜியை (சித்தார்த்) நீண்ட நாள் கழித்து சந்திக்கும் போது அவள் வாழ்க்கை தடுமாறுகிறது. கேம்பிரிட்ஜைச் சேர்ந்த அன்பான பெங்காலி-அமெரிக்கரான அமித் தன் நண்பர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், வேலை - காதல் இரண்டையும் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிறார்.   இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது அவர்கள் சார்ந்த சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கதை. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா