சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

ஜெயம் ரவி படம் உட்பட மூன்று முக்கிய படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ்!
Updated on : 11 July 2016

கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



 



2015-ல் மூன்று படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், அதேபோல் இந்த ஆண்டிலும் குறைந்த படங்களையே தேர்வு செய்து இசையமைக்கிறார். ஏற்கனவே அவரது இசையில் கெத்து திரைப்படம் வெளியானது.



 



இதனை தொடர்ந்து தற்போது அவர் இசையமைக்கும் மூன்று படங்களுமே முக்கியமான படங்களாக அமைந்துள்ளன. விக்ரம் நடிக்கும் இருமுகன், சூர்யாவின் சிங்கம்-3 படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அதேபோல் மதராசப்பட்டணம், தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களை இயக்கிய விஜய் இயக்கத்தில் முதன்முறையாக ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



 



மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜெயம் ரவி, "ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணி புரிவதில் எங்கள் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதையில் பல சுவாரசியங்களையும், மக்களின் ரசனைகளுக்கு ஏற்ற பல விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம்.



 



இப்படி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எல்லா  குண அதிசயங்களும் இந்த படத்தில் இருக்க, தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் எங்களுடன் கைக்கோர்த்து இருப்பது  மேலும் பலம். அது  மட்டுமின்றி, இந்த படத்தை மக்களிடையே பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் வலிமையான தூணாகவும் ஹாரிஸ் திகழ்கிறார்.



 



விரைவில் இந்த படத்துக்கான பாடல்களை தனக்குரிய மெட்லி ஸ்டைலில் இசையமைக்க இருக்கிறார் ஹாரிஸ். அவருடைய இசையில் உருவாகும் பாடல்கள் யாவும் மக்களுக்கு இசை விருந்தாக அமையும்" என்றார்.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா