சற்று முன்

பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |   

சினிமா செய்திகள்

பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!
Updated on : 23 February 2026

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.



 



தனித்துவமான கதைக்களங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற தொடர் வெற்றிகளுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது.



 



Neo Castle Creations சார்பில் சத்யா கரிகாலன் மற்றும் Million Dollar Studios சார்பில் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.



 



மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள முக்கிய கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ‘அருவி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.



 



சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.



 



படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், இப்படம் சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா