சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா
Updated on : 23 February 2026

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா, தனக்கு வாக்களித்த உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.



 



இது குறித்து பேசிய அவர், "நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன். 



 



தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகள் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன். 



 



வெற்றி பெற்ற தமிழ்க்குமரன் அவர்கள், ராதாகிருஷ்ணன் அவர்கள், கதிரேசன் அவர்கள், சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆர். கே. சுரேஷ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்கள், சுஜாதா விஜயகுமார் அவர்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிறைய நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்," என்றார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா