சற்று முன்

‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |   

சினிமா செய்திகள்

தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!
Updated on : 24 February 2026

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் ரா. கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற புதிய தொடர், இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களின் உணர்வுபூர்வமான சங்கமமாக உருவாகியுள்ளது. இந்த தொடரில் நடிகை பிரியங்கா மோகன்  மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் வாழும் செண்பா என்ற இளம் பெண்ணின் கனவுகள் தான் இந்தக் கதையின் மையம். சிறுவயது முதலே கொரிய கலாச்சாரம் மீது ஈர்ப்பு கொண்ட செண்பா, ஒருநாள் தென் கொரியாவுக்கு சென்று அந்த வாழ்க்கையை நேரில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வளர்கிறாள்.



 



அந்த கனவு அவளை சியோலுக்கு அழைத்துச் செல்லும் போது, அவள் எதிர்பார்த்த உலகம் கற்பனையை விட முற்றிலும் மாறுபட்ட சவால்களை முன்வைக்கிறது. புதிய மொழி, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறை—இவற்றை எதிர்கொண்டு செண்பா தனது அடையாளத்தையும், உள்ளார்ந்த வலிமையையும் கண்டுபிடிக்கும் உணர்ச்சிகரமான பயணமே ‘மேட் இன் கொரியா’.



 



படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.



 



நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டின் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்தியாவில் நெட்ஃபிலிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் பெருமை கொள்கிறது” என்றார்.



 



தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களின் நுணுக்கங்களை இணைக்கும் இந்த தொடர், உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மேட் இன் கொரியா’ தொடர் Netflix தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியராகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா