சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!
Updated on : 24 February 2026

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக மாற்றி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனர் ராகுல், அடுத்ததாக ஒரு நம்பிக்கைக்குரிய படைப்புடன் வருகிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்–விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.



 



‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. ‘என் அன்பே’ என்ற அர்த்தம் கொண்ட இந்தத் தலைப்பு, படத்தின் மையக் கருத்தான அன்பும் மனிதத்தன்மையும் பிரதிபலிக்கிறது. உண்மையான உறவுகள், வாழ்வியலின் சிக்கல்கள் மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.



 



இதற்கு முன்பு அவள் பெயர் தமிழரசி மற்றும் விழித்திரு போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கிய மீரா கதிரவன், ‘ஹபீபி’ படத்தில் மேலும் ஆழமான கதைக்களத்துடன் திரும்பியுள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்தக் கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.



 



படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.



 



ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள்.    படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்..



 



இப்படம் வெளியீட்டுக்கு முன்பே கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ‘வல்லோனே’ பாடல், மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உயிர்ப்பித்து பாடவைத்திருப்பது பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.



 



உணர்வும் உண்மையும் இணைந்த ‘ஹபீபி’ திரைப்படம் உலகத் திரையரங்குகளில் விரைவில் பார்வையாளர்களை சந்திக்கத் தயாராகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா