சற்று முன்
சினிமா செய்திகள்
நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்
Updated on : 22 March 2026
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.
இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வினில்..,
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,
இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.
யோகேஷ்வரன் பேசியதாவது..,
என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
பா ரஞ்சித் பேசியதாவது..,
செந்தில் சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.
நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting-ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.
இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக், எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன் மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”
இயமைசைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”
நடிகை அபர்ணதி பேசியதாவது..,
முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும், ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
நடிகை பவானி பேசியதாவது..,
முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.
நடிகை சங்கீதா பேசியதாவது..,
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.
‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருந்தது.
அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.
இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,
“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.
எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.
பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.
இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,
முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.
‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்த
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா














