சற்று முன்

‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Updated on : 22 March 2026

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் ‘அன்பே டயானா’ திரைப்படம் தற்போது இசை உலகில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.



 



சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் கதாநாயகனாக மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய மூன்றையும் கவனித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.



 



மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தனித்துவமான கதைகளைக் கொண்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’யை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 



இசையமைப்பாளர் பரத் சங்கர் அமைத்துள்ள உற்சாகமான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், பெயருக்கேற்றபடி சென்னை பெரம்பூர் பகுதியின் தனித்துவமான வாழ்க்கை முறை, கலகலப்பான சூழல் மற்றும் மக்களின் இயல்பான உணர்வுகளை உயிரோட்டமாக திரையில் கொண்டு வந்துள்ளது.



 



இந்தப் பாடலில் பாரி இளவழகன் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரம்யா ரங்கநாதனும் உற்சாகமாக இணைந்து ஆடி பாடலை மேலும் ஜாலியான அனுபவமாக மாற்றுகிறார். அதோடு, மேக்கிங் வீடியோவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ரோஜாவின் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.



 



‘பெரம்பூர் கானா’ பாடல், லோக்கல் பீட்ஸ், வண்ணமயமான காட்சிகள் மற்றும் இளமை கொண்டாட்டம் ஆகியவற்றின் கலவையாக அமைந்து, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண பாடலாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சார அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது.



 



இந்தப் படத்தில் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஷெல்லி கேலிஸ்ட் கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை மகேந்திரன் செய்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.



 



‘அன்பே டயானா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா