சற்று முன்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!
Updated on : 25 March 2026

தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, தனது தனித்துவமான இசை மூலம் இசையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறார். அவரது இசை, படங்களுக்கு கூடுதல் வலிமையைக் கொடுப்பதுடன், ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் முக்கிய அம்சமாகவும் இருந்து வருகிறது.



 



சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பல புதிய படங்களில் இசையமைத்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, தற்போது சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 4’ படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



 



தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையில் உருவாகும் இந்தப் படத்தை, இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்குகிறார். ஜென் Z தலைமுறையின் கவனத்தை பெற்ற நடிகர் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் அறிமுகமான சான்வே மேக்னா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.



 



இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



 



தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.



 



முன்னதாக ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மூலம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா