சற்று முன்

'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |    'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது   |    ‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!   |    யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!   |    1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா   |    ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!   |    ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |   

சினிமா செய்திகள்

'ஜின்'
Updated on : 11 May 2015

‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அம்னுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் ‘ஜின்’. ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.


இப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “ கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், 'முண்டாசுப்பட்டி' முனீஸ்  காந்த்  ஆகியசாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை. எம்.ஜி.ஆர்-ன் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படபிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டு இருந்த அந்த கட்டிடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது.”


 “ எனக்கு இந்த படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை ஏனெனில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டது. அந்த ஐவரில் நானும் ஒருவன்” என்று பீதியை கிளப்பி சிரிப்புடன் விடைபெற்றார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா