சற்று முன்

30 வருடங்களுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் நடிகை குட்டி பத்மினிக்கு சாகித்ய அகாடமி விருது!   |    'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |    சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!   |    கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |   

சினிமா செய்திகள்

பழம்பெரும் கதாசிரியரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு
Updated on : 06 August 2016

தமிழ் சினிமாவின் மூத்த கதாசிரியர்களில் ஒருவரும், நடிகருமான  'வியட்நாம் வீடு' சுந்தரம் எனும் கே.சுந்தரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானார்.



 



உடல்நலக்குறைவு காரணமாக தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73.



 



தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பல படங்களுக்கு இவர் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். "வியட்நாம் வீடு" படத்தில் கதாசிரியராக பணியாற்றியதால் இவர் 'வியட்நாம் வீடு' சுந்தரம் என அழைக்கப்பட்டார்.



 



சிவாஜி கணேசன் நடித்த கௌரவம் உள்ளிட்ட சில படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தொடர்ந்து ஏராளமான தொலைகாட்சி தொடர்களிலும் வியட்நாம் வீடு சுந்தரம் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.



 



தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வியட்நாம் வீடு சுந்தரத்தின் உடலுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மதியம் அவரின் இறுதிச் சடங்கு மயிலாப்பூர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா