சற்று முன்

'முரா' படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    'கேம் சேஞ்சர்' படத்தின் வட இந்திய விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!   |    என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் - நடிகர் சூர்யா   |    'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!   |    'நந்தன்' படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!   |    பிரைம் வீடியோவின் அதிரடி ஆஃபர்!   |    ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்   |    டாப் 4 இல் இடம்பிடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!   |    'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |   

சினிமா செய்திகள்

பஞ்சு அருணாசலம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
Updated on : 11 August 2016

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை கண்ணம்மாப்பேட்டை மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.



 



இந்நிலையில், பஞ்சு அருணாசலம் அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்த்திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி தன் ஆளுமையால் பலவேறு படைப்புகளையும், பல கலைஞர்களையும் உருவாக்கியவர் பஞ்சு அருணாச்சலம்.அந்த சாதனை மனிதரின் திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



 



1958 -​ல் காரைக்குடி, கூடல்பட்டியிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர் பஞ்சு அவர்கள். தன்னுடைய உறவினரான கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் பாடல் எழுத உதவியாளராக சேர்ந்து, ​பாடல் எழுதும் நுட்பத்தையும் கதை, திரைக்கதை வசனம் எழுதும் நுட்பத்தையும் திறம்படக் கற்றுக்கொண்டார்.



 



தன்னுடைய முதல் பாடலான 'சாரதா' படத்தில் ‘மணமகளே மருமகளே வா வா.’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்போதும் திருமண வீடுகளில் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதே போல 400-க்கும் அதிகமான ​பாடல்களை தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.



 



குறிப்பாக 'கலங்கரை விளக்கம்' படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு எழுதிய "பொன்னெழில் பூத்தது புது வானில்", ரஜினி நடித்த 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தில் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ", 'கல்யாண ராமன்' படத்தில் ”மலர்களில் ஆடும் இளமை புதுமையே" போன்ற பாடல்கள் மனதை வ்ட்டு இன்றும்,என்றும் ​நீங்காத பாடல்கள் தான். ​



 



கதை,திரைக்கதை, வசனம்,பாடல்,இயக்கம்,பட வினியோகம்,தயாரிப்பு என்று சினிமாவில் எல்லா துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்த பஞ்சு அவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.



 



அதோடு இசைஞானி இளையராஜாவை ’அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகம் செய்த ​​மாபெரும் மனிதர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்தவர். இத்தகையை பெருமைகளை உடைய பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும்,​ அவரை பிரிந்து வாடும் அவரது​ குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா