சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்ட உறுப்பினர்களை நீக்கும் முடிவால் சலசலப்பு!
Updated on : 29 August 2016

நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்ட உறுப்பினர்கள் சிலரை தற்காலிகமாக நீக்கும் முடிவை தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த தரப்பினர், அலுவலக ஊழியர்களை தாக்கியதாக நடிகர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.



 



மேலும் இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையரிடமும் நடிகர் சங்க தலைவர் இன்று புகார் அளிக்கிறார்.



 



இதுதொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "நடிகர் சங்கத்தினுடைய செயல்பாடுகளில் உறுப்பினர்களின் நலன், சட்டத்திட்டங்களை மீறி தங்களுடைய சுயநலத்திற்காக செயல்பட்ட சில உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்குவதற்கான தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். சிலர் அதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த செயல்பாடுகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, சில நபர்களை சேர்த்துக் கொண்டு அலுவலக ஊழியர்களை தாக்குவது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை சாதாரணமாக எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதற்காக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.



 



அதற்காக அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் உடனடியாக நடத்தப்படும். அதன்பின் நிர்வாகம் சார்ந்த அனைத்து முடிவுகளையும், ஒரு வருடத்திற்கான சிறப்பு கூட்டம் நடக்கயிருக்கிறது. அந்த கூட்டத்தில், நாங்கள் பல முடிவுகளை எடுத்து நாங்கள் இன்னும் வேகமாகவும், நேர்மையாகவும் செயல்படுவோம், என்றும் எதற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை இந்த தருணத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.



 



சங்க கட்டிடத்தை கட்டுவதை தடுப்பதற்கும், நிர்வாகத்தை நேர்மையான சட்டப்படியான வழிமுறையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாததாலும் புதிய நிர்வாகத்திற்கு நற்பெயர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததாலும், சங்கத்திற்கு நஷ்டங்களை ஏற்படுத்திய சில நபர்களின் தூண்டுதலாலும் இச்சம்பவம் நடந்து இருக்கிறது.



 



இதுகுறித்து 27.08.2016 அன்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சங்க மேலாளரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை 29.08.2016 அன்று சென்னை காவல் துறை ஆணையரிடமும் நடிகர் சங்க தலைவர் அவர்களால் இதுகுறித்து விளக்கி புகார் அளிக்க இருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா