சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

சினிமா செய்திகள்

பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை
Updated on : 15 October 2018

பெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், 'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், 'பட்டறை' மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.



"நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை  நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக  மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்" என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.



அவர் மேலும் கூறும்போது, "கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்" என்றார். 



 ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருக்கிறது. 



பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.



முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா