சற்று முன்

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |    சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா   |    யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |   

சினிமா செய்திகள்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!
Updated on : 22 April 2024

இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் செய்து அடையாளப் படுத்துவதில் முதன்மையாக திகழும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், 'ராஞ்சா' எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.  குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.  திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், "ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன் பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் 'ராஞ்சா' உருவாகி வருகிறது," என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், "காதலின் சக்தி அசாத்தியமானது, அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்," என்று தெரிவித்தார்.  'ராஞ்சா' படத்திற்கு 'காலங்களில் அவள் வசந்தம்' புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் 'ராஞ்சா' படத்தொகுப்பை கையாளுகிறார்.  திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராஞ்சா' திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா