சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

விவசாயிகளுக்காக பதறும் வைரமுத்து
Updated on : 01 April 2017

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் தொடர்பில் கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார்.



 



"எங்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் ஜந்தர் மந்தரின் வெய்யில் வீதியில் வெந்து வெந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது.



 



வானத்தால் ஏய்க்கப்பட்டவர்களையும் பூமியால் கைவிடப்பட்டவர்களையும் அரசாங்கமும் வஞ்சித்துவிடக் கூடாது. வெடித்துக் கிடக்கும் வயல்களின் ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு விவசாயி புதைக்கப்பட்டுவிடக் கூடாது.



 



இந்திய விவசாயம் கடன் வாங்கிய கடைசி மூச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம் வீழ்ந்து போனால் அதற்கு உலக அரசியல் பொறுப்பு. ஆனால் விவசாயிகள் வீழ்ந்து போனால் அதற்கு உள்ளூர் அரசியலே பொறுப்பு.



 



விதர்பாவில் தொடங்கிய விவசாயத் தற்கொலை மாண்டியாவைத் தாண்டிய பொழுதே அது தமிழ்நாட்டுக்குள் தாவிவிடக் கூடாது என்று எனது மூன்றாம் உலகப் போர் நாவலில் எச்சரிக்க நேர்ந்தது. ஆனால் தஞ்சை விவசாயிகளும் தற்கொலைக்கு ஆளான போது நான் பதறிப்போனேன்.



 



மூன்றாம் உலகப்போர் ஈட்டிய பணத்தில் 11 லட்சத்தை தற்கொலை புரிந்துகொண்ட விவசாயிகளின் விதவைகளுக்குக் கொடுத்தேன். பாட்டெழுதிக் கூலி வாங்கும் ஒருவன் பணம் கொடுக்கும் நிலை வந்துவிட்டதே என்று, அன்றே பொறுப்புள்ளவர்கள் பதறியிருக்க வேண்டும். இன்று இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 3 லட்சம் என்று புள்ளி விவரம் சொல்லி அழுகிறது.



 



வேளாண்மையன்றி வேறு தொழில் செய்யத் தெரியாதவர்கள் மட்டும்தான் இன்று வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவது தேசத்தின் வயிற்றைக் காப்பாற்றுவது போன்றதாகும்.



 



மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் அவர்களுக்கு உதவுவதில் அரசியல் பார்க்கக் கூடாது. தனக்கு எதிராகக் குடைபிடித்தவர்களுக்கும் சேர்த்தேதான் மழை பெய்கிறது. தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்தேதான் ஓர் அரசு இயங்குகிறது.



 



பயிர்க்கடன் தள்ளுபடி என்பதும் பஞ்ச நிவாரணம் என்பதும் எந்த அரசுக்கும் புதியதல்ல. உத்தரப் பிரதேச விவசாயிகளுக்குக் காட்டக்கூடிய சலுகையை வறட்சியின் வன்பிடியில் சிக்கித் தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும்.



 



இந்திய விவசாயிகள் அழிந்து போனால் பாசன நிலங்களெல்லாம் கூட்டாண்மை நிறுவனங்களின் நாட்டாண்மையின் கீழ் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தியாவில் இன்னும் சுத்தமாகச் செத்துவிடவில்லை சோசலிசம்.



 



சேவைத் துறைக்கு இரு கண்களையும் காட்டும் மத்திய அரசு உற்பத்தித் துறைக்கு ஓரக்கண்ணாவது காட்ட வேண்டும் என்பதுதான் நிகழ் கணங்களின் தேவை.



 



எங்களைத் தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் கூடிப்பேசி வஞ்சித்துவிட்டன. எங்களை வடக்கும் வஞ்சித்து விடக்கூடாது என்று நியாயத்தின் கோட்டுக்குள் நின்று கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தைக் காக்கவும் விவசாயிகளை மீட்கவும் இதுவே தருணம்'' என வைரமுத்து கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா