சற்று முன்
சினிமா செய்திகள்
சமுத்திரக்கனியின் 'தொண்டன்' இசை வெளியீடு!
Updated on : 09 April 2017

சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் 'தொண்டன்' திரைப்படத்தின் இசை இன்று வெளியானது.
ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி, விவேகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, தம்பி ராமையா, நமோ நாராயணா, சூரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தொண்டன்' தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'அப்பா' திரைப்படத்துக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இதனை வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.
“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.
சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.
Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும், அது தவறில்லை என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், தற்பொது SRM கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
நம் தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு மருதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விதார்த் நடித்துள்ளார். ரக்ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதைக்களம் நடப்பதால் அப்பகுதியைச் சுற்றி இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு N R ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு B படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை நீதி எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை A ராஜா கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், படத்தினை வரும் அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு 'திரெளபதி2' காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்தை விஷயங்களை செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்" என்றார்.
தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, "தொழில்முனைவராக நான் சினிமாத்துறைக்குள் நுழைந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெரியும். மோகன் ஜி உடன் பணிபுரிந்தது எனக்கு சிறப்பான அனுபவம். எந்தவொரு குழப்பமோ சந்தேகமோ இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது தயாரிப்பாளராக எனக்கு பெருமகிழ்ச்சி. சினிமா மீதான நம்பிக்கையும் இன்னும் அதிகரித்துள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. இவர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னும் அதிக படங்கள் தயாரிக்க ஊக்கமளித்துள்ளது" என்றார்.
தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள 'திரெளபதி 2' படத்தை ஜி.எம். ஃபிலிம் கார்பரேஷனுடன் இணைந்து நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடனும் திறமையான நடிகர்களுடனும் அந்த காலத்திற்கே பார்வையாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது இந்தத் திரைப்படம். போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்க உள்ளது.
அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'
ஆழமான உணர்வு மற்றும் கவிதைத்துவமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் அப்பா- மகள் இடையிலான அன்பைக் காட்டும் படமாக உருவாகி வருகிறது ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸின் 'மெல்லிசை'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய விருது பெற்ற 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது 'மெல்லிசை'. 'வடசென்னை', 'விடுதலை' ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற நடிகர் கிஷோர் குமார் 'மெல்லிசை' படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' மற்றும் 'பொம்மை நாயகி' ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக 'மெல்லிசை' படத்தில் நடிப்பதன் மூலம் இந்தக் கதையின் ஆழத்திற்கும் உணர்வுகளுக்கும் அர்த்தம் சேர்ப்பார்.
இவர்களோடு ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஆழமான உணர்வுகள், நுட்பமான கதை சொல்லல், கவிதைத்துவமான கதை என தலைமுறைகள் கடந்து, அன்பை தேடும் பிரபஞ்சத்தின் கதையாக வெளிவர இருக்கிறது 'மெல்லிசை'.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!
'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.
டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
பரபரப்பு, அட்வென்ச்சர், நகைச்சுவை, ஆக்ஷன் என பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என 'அனகோண்டா' உறுதியளிக்கிறது.
இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் 'அனகோண்டா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா டிசம்பர் 25, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'அனகோண்டா' திரைப்படத்தை வெளியிடுகிறது.
நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!
நடிகரும் கிரிக்கெட் ஆர்வலருமான உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அணியின் இணை உரிமையாளர் ராஜ்குமார் சேதுபதி வெளியிட்டார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்கிறார் ராஜ்குமார் சேதுபதி. மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மட்டுமல்லாது, உன்னி முகுந்தனின் அனுபவமும் கிரிக்கெட் பற்றிய புரிதலும் நிச்சயம் அணியினருக்கு புது உற்சாகம் கொடுக்கும் என்கிறார்.
உன்னி முகுந்தனின் பிறந்தநாளான செப்டம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திறமையான கேப்டன், அனுபவம் பெற்ற மற்றும் புதிய விளையாட்டு வீரர்கள் என ரசிகர்களுக்கு உற்சாகமான சீசனாக இது அமையப் போகிறது என உறுதியளிக்கிறது கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி.
அக்டோபர் மாதத்தின் மத்தியில் இருந்து அணியின் பயிற்சி கேம்ப் திட்டமிடப்பட்டுள்ளது. கேம்ப் முடிந்ததும் இறுதிக்கட்ட விளையாட்டு வீரர்களை மேனேஜ்மெண்ட் அறிவிக்கும்.
நவம்பர் 2025-ல் CCL-ன் 12 ஆவது சீசன் தொடங்குகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, பஞ்சாப் மற்றும் போஜ்புரி சினிமா நட்சத்திரங்களை CCL ஒருங்கிணைக்கிறது.
கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பற்றி:
CCL-ன் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி உள்ளது. பல மொழி ரசிகர்களின் விருப்பமான இந்த அணி 2014 மற்றும் 2017 போட்டித் தொடர்களில் இறுதிப் போட்டியை எட்டியது.
கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தேசிய அளவிலும், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் என வலுவான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பற்றி:
CCL என்பது இந்தியாவின் முதன்மையான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகும். இந்தியா முழுவதிலுமிருந்து பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்களை ஒன்றிணைக்கிறது. இதுமட்டுமல்லாது, சினிமா மீதான ஆர்வத்தையும் கிரிக்கெட்டின் சிலிர்ப்பையும் T20 வடிவத்தில் ஒருங்கிணைக்கிறது. CCL என்பது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைக்கும் மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.
மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'
பிரதமர் நரேந்திர மோதியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோதியாக நடிக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மோதியின் அதிகம் வெளிவராத உணர்வுப்பூர்வமான பக்கங்களை பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் படம். நரேந்திர மோதியின் 75 ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று இந்தப் படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது.
சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிராந்தி குமார். C. H. இயக்கும் 'மா வந்தே' படம் மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும். குஜராத்தில் ஆரம்பித்த அவரது பயணம் இந்தியாவை செதுக்கும் நபராக அவர் எவ்வாறு மாறினார் என்பதையும் காட்ட இருக்கிறது.
இதுகுறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டதாவது, "மரியாதைக்குரிய இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்களாக 'மா வந்தே' படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல! பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்" என்றார்.
மலையாள சினிமாவில் தனது திறமையான நடிப்புக்கு பெயர் பெற்ற உன்னி முகுந்தன், மோதி கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருபதாகவும் கூறுகிறார். "ஒரு விஷயத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கக் கூடாது" என்று தன்னிடம் மோதி சொன்னதை தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்கிறார்.
மோதிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோதிக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் 'மா வந்தே' (அம்மா நான் உன்னை வணங்குகிறேன்) எனப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மையக் கருவாக இருக்கும் என்றும் இந்தப் படம் மூலம் மோதியின் இன்னொரு பக்கத்தையும் அவரின் வளர்ச்சியையும் பார்வையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் இயக்குநர் கிராந்தி குமார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "இது அரசியல் கதையோ பிரச்சாரமோ கிடையாது. அன்பான தாய்- மகன் பற்றியது. அன்பு, ஒழுக்கம் போன்றவை ஒரு தேசத்தை வழிநடத்தும் மனிதனின் பயணத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது பற்றியது" என்றார்.
இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பான் இந்திய மொழிகளில் படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
'மா வந்தே' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட பயோபிக் படங்களில் ஒன்றாக 'மா வந்தே' இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.
உன்னி முகுந்தனின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்ஸ் வெளியிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் .
அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்
தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார்.
டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார்.
இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும். இந்த யுனிவர்ஸின் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான பின்புலம், காட்சியமைப்பு, மற்றும் மிகப்பெரிய கதைக்களம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு முழுமையான சூப்பர்ஹீரோ யுனிவர்ஸாக விரிகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது.
போஸ்டரில் ஒரு மாபெரும் எரிமலை வெடித்து, தீக்கங்குகளை வெளிப்படுத்துகிறது. ஆகாயம் முழுவதும் புகை மற்றும் சாம்பலால் மூடப்படுகிறது. அந்தக் குழப்பத்திலிருந்து, எஸ்.ஜே.சூர்யா, காளை போன்ற கொம்புகளுடன், பழங்குடி போர்வீரர் தோற்றத்தில், கொடூரமான அசுரனாக எழுகிறார். அவருக்கு முன், கல்யாண் தாசரி சூப்பர் ஹீரோ வேடத்தில், நவீன போர்க்கவசம் அணிந்து, தன்னம்பிக்கையுடன் மண்டியிட்டு எழுந்து நிற்கிறார். இந்த காட்சி, ஒரு அபாரமான ஹீரோ–வில்லன் மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நம்பிக்கை vs இருள் எனும் இந்த மாபெரும் போராட்டத்தில், அதீரா தனது மின்னல் சக்திகளை வெளிப்படுத்தி, தர்மத்தைக் காப்பாற்றுகிறார். எரிமலை போல வெடிக்கும் அதீரா, பார்வையாளர்களின் உணர்ச்சிகளை திரையரங்கில் கவரப்போகிறார். அதிரடி சண்டைகள், மூச்சுத் திணற வைக்கும் காட்சிகள், மற்றும் பரபரப்பான டிராமா—இவை அனைத்தும் “மின்னல் முழக்கம்” போல உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
பிரசாந்த் வர்மாவுடன் ஹனுமான் படத்தில் பணியாற்றிய ஷிவேந்திரா கேமரா பொறுப்பை ஏற்றுள்ளார். பின்னணி இசையில் சிறப்பான திறமைகொண்ட ஸ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா புரொடக்ஷன் டிசைன் கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.
‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!
இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.
இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.
இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…
ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.
#KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்
சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.
@shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.
இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.
கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தயாரிக்கப்படுகிறது.
மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்த விரிவான அறிவிப்புகள் – கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் – விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது
- உலக செய்திகள்
- |
- சினிமா