சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி - ரமேஷ் வினாயகம்
Updated on : 26 July 2018

இன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம் அவர்கள். பிரபல இயக்குனர் திரு மௌலி அவர்களுடைய சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து  நள தமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் ஞான ராஜசேகர் அவர்களின் அற்புதப் படைப்பான ‘ராமானுஜன்’ திரைப்படத்தின் அவரது இசைக்காக தமிழக அரசு அவருக்கு‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வழங்கி கௌரவித்தது. ‘காந்தி’ புகழ் கிங் பென்ஸ்லீ நடித்த ஓர் ஆங்கிலப் படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



கர்நாடக இசையில் மிகுந்த தேர்ச்சியுடைய திரு. ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். கர்னாடக ராகங்களில் அமைந்த கிருதிகளை இயற்றி, அவற்றிற்கு இசையமைத்து, இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைத்து அவர் இந்நிகழ்ச்சியை வழங்கப் போகிறார். சிறப்பம்சமாக, அக்கிருதிகளை புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர்களான அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன், அபிஷேக் ரகுராம், ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் குருசரண், காயத்ரி வெங்கட்ராகவன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருச்சூர் சகோதரர்கள் ஆகிய கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடப் போகிறார்கள். இதற்காக திரு. ரமேஷ் வினாயகத்துடன் 50 இசைக் கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 



சென்னை ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில்  இம்மாதம் 28ந்தேதி, மாலை 6.30க்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 



இதற்கான டிக்கெட்டுகள் 'Book My Show' தளத்தில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா