சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

அப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி
Updated on : 29 July 2018

கதைதான் எப்போதும் ராஜா என தமிழ்சினிமாவில் பலமுறை நிரூபணமாகி இருக்கிறது. அரளி படமும் அந்தப்பட்டியலில் இடம் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது. பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.



சினிமாவில் எப்போதும் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தைதான், கடன் வாங்கியேனும் படம் தயாரிப்பார் ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பாராஜோ சற்று வித்தியாசமானவர் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார். 



இப்படத்தில் நாயகனாக மதுசூதனும், நாயகியாக மஞ்சுளாவும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை அண்ணாமலை மற்றும் இயக்குனர் சுப்பாராஜும் நடித்துள்ளார். ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு எம்.எஸ்.ஜான் மற்றும் அனில் முத்துக்குமார் இசையமைத்துள்ளார். விசாகன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.



படம் பழிவாங்கும் த்ரில்லராக உருவாகி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த ராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.



இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறும்போது, "எப்போதுமே நான் இப்படிப்பட்ட படங்களை பார்க்கும்போது பேப்பரும் பேணவும் கையில் வைத்துக்கொண்டு அதில் உள்ள குறைநிறைகளை சொல்வதற்காக அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொள்வேன். ஆனால் அரளி படம் பார்த்தபோது என்னால் கடைசிவரை குறிப்பெடுக்க முடியவில்லை. காரணம் படம் அவ்வளவு வேகத்தில் செல்கிறது" என்றார்.



நடிகர் நாசர் படத்தை பற்றி சிலாகித்து கூறியதாவது, "இந்தப்படத்தின் மையக்கதை இதுவரை தமிழ்சினிமாவில் பார்த்திராத ஒன்று என சொல்லலாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் மைய கதாபாத்திரமாக குழந்தைகள் நல காப்பாளராக நடித்துள்ள அருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இடைவேளைக்குப்பின் கதை எப்படி போகும் என்பதை அனுமானிக்கவே முடியவில்லை" என்றார்.



நடிகர் ராதாரவி படத்தை பற்றி பாராட்டி கூறும்போது, "திருக்குறளில் இரண்டு அடியில் விஷயத்தை சுருக்கமாக சொல்வது போல இந்தப்படத்தில் கதையை சொல்லியிருக்கிறார்கள். கதை நம்மை கலங்க வைக்குது...மது நன்றாக நடித்துள்ளார். வயதான கேரக்டரில் நடித்துள்ளவரின் நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்.. என்னா நடிப்பு.? தமிழ்சினிமாவுலகை காப்பாற்றவேண்டும் என்றால் இதுமாதிரி படங்கள் வெளிவர்றதுக்கு நாம துணையா நிக்கணும்" என்கிறார்.



இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறும்போது, "அரளிங்கிற டைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.. பின்னணியில் ஒரு வலுவான கதையை எடுத்துக்கொண்டு அதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்" என்றார். 



இயக்குனரும் நடிகருமான சந்தான பராதி, "இந்தப்படத்தில் 'பிகாலே' அதாவது ஆன் விபச்சாரம் என்கிற புது விஷயத்தை கூறியுள்ளார்கள்.. நம் கலாச்சாரத்துக்கு புதுசு என்றாலும் அமேரிக்கா போன்ற நாடுகளில் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படி இதில் சிக்கி மீள்கிறான் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்க" என பாராட்டியுள்ளார்.



நடிகர் கரிகாலன் கூறும்போது, "மகனுக்காக படம் எடுக்க சினிமாவுக்குள் வரும் அப்பாக்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சுப்பாராஜ், தனது தந்தைக்காக படம் எடுக்கவந்து, அவரையே மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் என்பது தமிழ்சினிமாவுக்கு புதிய முயற்சி" என்றார். 



நடிகர் அழகு கூறும்போது, "பொது ஒரு படத்தை பார்க்கும்போது க்ளைமாக்ஸ் நெருங்குபோதுதான் விறுவிறுப்பு கூடும்.. ஆனா இந்தப்படத்தில் இடைவேளையில் இருந்தே நம்மளை அப்படியே தூக்கிட்டு போகுது" என பாராட்டியுள்ளார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா