சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் அரினாவில்' புதிய கால்பந்தாட்ட கோர்ட்
Updated on : 31 July 2018

தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அவசியத்தை அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இதற்காக உடற்பயிற்சி செய்வதை காட்டிலும் விளையாட்டுகளில் பங்குபெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.



குறிப்பாக ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு உடல் மட்டும் இன்றி மனதும் சோர்வடைவதால், அவர்கள் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.



இதற்கிடையே, தற்போது தமிழகத்தில் புட்சல் என்ற கால்பந்து விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறிய அளவிலான உள்  மைதானத்தில், ஒரு அணியில் 5 பேர் இடம் வகிக்கும் இந்த புட்சல் கால்பந்து விளையாடுவதால் மூலம் உடலும், மனமும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம், இளைஞர்கள் இதன் மீது பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சென்னையின் பல பகுதிகளில் புட்சல் கால்பந்து கோர்ட்கள் திறக்கபப்ட்டு வருகிறது.



அந்த வகையில், ஐடி ஊழியர்கள் நிறைந்த சென்னை ஓ.எம்.ஆர் சாலை, சோழிங்கநல்லூர் பகுதியில்   உள்ள ஏ.ஆர்.டி காம்பிளக்சில் செயல்பட்டு வரும் 'ஓ.எம்.ஆர்  ஸ்போர்ட்ஸ் அரினாவில்' புதிய புட்சல் கால்பந்தாட்ட கோர்ட் திறக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே இங்கு பேட்மிண்டன் கோர்ட் செயல்பட்டு வரும் நிலையில், இந்த புதிய புட்சல் கோர்ட் திறப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.



ஓ.எம்.ஆர் பகுதியில் இந்த புட்சல் கோர்ட் இருப்பதால் ஐடி ஊழியர்களிடம் பெரும் வரவேற்பு  பெற்றிருந்தாலும், இதில் அனைத்து தரப்பினரும் பயிற்சி பெறலாம் என்று புட்சல் கோர்ட் நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கோர்ட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட வீரர்கள் பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



சமீபத்தில் இந்த புதிய புட்சல் கோர்ட்டின் திறப்பு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஏழை சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசுகளும் பதங்கங்களும் வழங்கப்பட்டது.



இப்போட்டியில் லைப் ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இதில் எல்.எஸ்.ஏ அயனாவரம் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். எல்.எஸ்.ஏ செவ்வாபேட்டை இரண்டாம் இடத்தை பிடித்தனர். எல்.எஸ்.ஏ காஞ்சிபுரம் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.



மேலும், இந்தியாவின் நம்பர் ஒன கால்பந்தாட்ட பிரி ஸ்டைலார் தமிழ் முரளிதரன் ஸ்பெஷல் கால்பந்து பிரி ஸ்டைல் நிகழ்வும் இதில் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் லைப் ஸ்போர்ட்ஸ் அகடாமியின் தலைமை பயிற்சியாளர் ஜோசப் நிர்மல் ராஜ், ஓ.எம்.ஆர் பேட்மிண்டன் அகடாமியின் முதன்மை பயிற்சியாளர் மொஹம்மத் அர்சத், விளையாட்டு ஆர்வளர் ஷேக் உஸ்மான், தஸ்வீண், ரிப்பை, மொய்தின் மற்றும் ஓ.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் அரேனாவின் நிர்வாகி எஸ்.எம்.இம்ரான் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா